| 
பொங்கல் பொங்கட்டும்!- கனிஷ்கா, தென்காசி. -
 
 
  
வேற்றுமை என்னும் விஷக் கிருமிகள் போகியிலே புகைந்து போகட்டும்
 தீவிரவாதம் என்னும் தீயசக்திகள்
 தீயிலே தீய்ந்து போகட்டும்
 பயங்கரவாதம் பழமையாகி
 பழைய நெருப்பிலே வெந்து போகட்டும்
 கதிரவனின் புது ஒளியில்
 பொங்கும் பொங்கலோடு
 புதுமைகள் பூக்கட்டும் மகிழ்ச்சிகள் மலரட்டும்
 மங்கலம் தங்கட்டும் மாநிலம் செழிக்கட்டும்
 ஞானம் வளரட்டும் ஞாலம் சிறக்கட்டும்
 மனித நேயம் நிலைக்கட்டும்
 மனதில் இன்பம் பெருகட்டும்
 தமிழின் பெருமை தரணியில் ஓங்கட்டும்
 தமிழன் புகழ் தாரகையாய் ஒளிரட்டும்
 நேசம் என்பது தேசத்தின்
 உறவு மொழியாய் மாறட்டும்
 பாசக் கரங்கள் பெருகட்டும்
 பசுமை எங்கும் பரவட்டும்
 தேவைக் கேற்ற பருவத்தில்
 மாரி மண்ணில் பொழியட்டும்
 நல்லருளை இறைவன் நமக்கு வழங்கட்டும்
 நமக்குள் ஒற்றுமை நிலவட்டும்
 நாளைய விடியல் நமக்கென்றே
 நம்பிக்கை மனதில் உதிக்கட்டும்
 பொங்கலோ பொங்கல்! பொங்கட்டும் பொங்கல்!
 
 kalpa2011@gmail.com
 
பொங்கட்டும் பொங்கல்! 
-இமாம்.கவுஸ் மொய்தீன் -
 
  
பொங்குக பொங்கல்!பொங்கட்டும் பொங்கல்!
 தமிழர் இல்லந்தோறும்.
 
 பொங்குக பொங்கல்!
 பொங்கட்டும் மகிழ்ச்சி!
 தமிழர் உள்ளந்தோறும்.
 
 பொங்குக பொங்கல்!
 பொங்கட்டும் தமிழுணர்வு!
 தமிழர் இதயந்தோறும்.
 
 பொங்குக பொங்கல்!
 முழங்கட்டும் தமிழே!
 தமிழர் நா யாவும்.
 
 பொங்குக பொங்கல்!
 தழைக்கட்டும் முயற்சி!
 தமிழர் ஏற்றம் பெறவே.
 
 பொங்குக பொங்கல்!
 வேண்டுக இறைவனை!
 தமிழர் ஈழம் பெறவே.
 
 பொங்குக பொங்கல்!
 பொங்கட்டும் இனஉணர்வு!
 செழிக்கட்டும் தமிழர் வாழ்வே.
 
 பொங்குக பொங்கல்!
 பொங்கட்டும் விவேகம்!
 அழிக தமிழர் பகையே!
 
 drimamgm@hotmail.com
 |