ஞானம்
விஞ்ஞானத்திற்கு
நன்றி சொல்லவேண்டும்.
மனதின் ஆசைகளை
மறைக்காமல்
செல்லுலாரில் பேசி
சந்தோழமடைய-
நிறைய பேர்
செல்லுலாரில் சிரிக்கிறார்கள்..
நேரில் முறைக்கிறார்கள்.
கண்கள் பேசும்
காலம் குறைந்து
சேட்டிங்கில் சறுக்கி விழுகிறார்கள்.
.ஒரு பக்கம்-
விரல் பட்டால் தர்க்கம்.
மறு பக்கம்-
படாவிட்டால் சுணக்கம்.
வலைதள உலகமும்,
வசீகர நுகர்வும்
பாத அணிகளாய் புகுந்து
சொகுசாய் பயணிக்கிறது.
வள்ளுவன் இன்றிருந்தால்
கூப்பிட்ட குரலுக்கு
வாசுகி-
வெப் கேமில்
விளக்கம் சொல்லியிருப்பாள்.
நாளை-
சேட்டிலைட் குடும்பமே
சீர்திருத்த குடும்பமாகும்..!
இதுதானோ?
புரியவில்லை பெண்ணே!
முன்பு எப்போது பார்த்தாலும்
பேசலாம் என்றாய்!
இப்போது -
எப்போதாவது பேசலாம்
பிழைப்பு நடத்து என்கிறாய்!
அடியே!
காதல்
சம்மணம் போட்டு
கிச்சு கிச்சு மூட்டுவது-
மொத்த மௌனத்திற்கு
அடித்தளமோ?
என்னமோ போ!
காலம் தள்ள வேண்டும் எனும்
கௌரவ வாழ்க்கை
கட்டிப் போடுகிறதோ?
வாழ்வோம்-
மூச்சின் துகளில்
காதல் மறை முகமாய்
கசிகிறதோ என்னவோ?
மனக் குறிப்பு!
அழகழகாய் கனவில் வந்தாய்..
நேரில் -
பார்க்கமலே செல்கிறாய்..
ஒரு வேளை-
உன் கனவில் நானோ?
அதிகமான மௌனம் காத்தாய்!
பேசினால்-
எழ முடியாத சங்கடமோ?
இருக்கலாம்-
நான் பேசிவிட்டு -
மௌனத்தில் கவிழ்பவன்..
நீ
உன் வேலையில்
எப்போதும் கவனமாய்..
நானோ-
உன் விழிப் பார்வைக்கு
ஏங்கும் தவசியாய்..!
அழகாய் வைத்திருக்கிறாய்
வீட்டை..
என்னைக் கலைத்து விட்டு!
நீ
உன் உடலை
கவனமாய் மூடுகிறாய்...
பெண்ணே1
என் இதயம்
உன்னைத் தின்ற பின்!
கவலைப்படாதே!
எண்ணங்கள் விழுந்து
கனவுகளே விளையும்..
நினவு கொள்..!
இழப்பதில்-
சுகம்
மனதில் பெருகும்!
விரும்பும் ரேகைகளோடு!
முடியுமா?
அன்பே1
இருளின் அசைவில்
நீ மின்மினியாய் கிள்ளுகிறாய்!
நீ பார்க்கிறாயோ இல்லையோ-
நான் உன்னை கவனித்தபடியே
கனவு காண்கிறேன்..
ஆமாம்-
கனவு தானே-
காதலின் தித்திப்பு பிரதேசம்..
பெண்ணுக்கு
எவன் கற்றூக் கொடுத்தான்?
ஒன்றும் தெரியாதது போல்
எல்லாம் தெரிந்த பாவனை?
சாயங்கால
சதிராட்ட வண்ண மேகம் போல்
பெண்ணின் பரவச பாவனைகள்!
மூர்ச்சித்து விடுகிற
சொற்களை வீசி விட்டு
ஆகாயத்தில் நடப்பது
பெண்ணுக்கு மட்டுமே வந்த கலை!
என்ன செய்யட்டும்?
காதலிக்காமல்
கருமம் இருக்க முடியவில்லையே?!
என்னடா?
காதல்
இதத்தை சீண்டி விட்டு
புறப்படும் புயலோ?
எப்போது
அவளை நினைத்தாலும்
பதட்டம் பல நூறு மைலில்
பயணிக்கிறது..
எந்த வேலையும்
செய்ய விடாது
அவஸ்தைப்படுத்துகிறது..
என்னவோ-
எல்லோரும் நம்பும் படியாக
இயல்பாக இருக்க முயல்கிறேன்
நம்புவார்களா?
கண் இமையில்
ரேசன் அட்டையுடன்
அமர்ந்து-
முத்தம் கேட்கிறான் முட்டாள்..
எத்தனைமுறை
யாசித்திருப்பேன்..-
வார்த்தைகளில் முத்தம் தந்தபடி...
கவனிக்கப்படாத அறிவிப்புகள் மாதிரி
எனது பார்வை தவிர்த்து
எல்லா இடங்களிலும் பாய்கிறான்..
காமம்-
காதலின் உச்சிதான்..
எனினும்-
கௌரவமாய் களவாடத்
தெரிகிறதா உனக்கு?
rasiazhagappan@yahoo.com