பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
கவிதை! |
என்.சுரேஷ் (சென்னை) கவிதைகள்!
1) அம்மாவும் மகனும்
என் மகனே
பத்து வயதிலேயே உனதன்பாலென்னை
கண் கலங்கவைத்தாயேடா!
நேற்றிரவு காய்ச்சலுடன் நான்
போர்வை போத்தி தந்தென்
நெற்றியில் முத்தமிட்டு என்னருகே நீ!
இன்று காலை வேலைக்கு போகும்வேளை
செருப்பின் நாடாவை முறுக்க முடியா
என் உடல்வலியதை
எப்படித்தானுணர்ந்தாயோ என் மகனே நீ
ஓடிவந்தென் கால்களில் செருப்பு மாட்டி விட்டாயே!
ஐயோ
உந்தன் பிஞ்சு விரல்களுக்கு வலித்துருக்குமே !
நான் கண்ட சொந்த பந்தங்களின் மொத்த அன்பும்
எப்படியடா செல்லமே உன் நெஞ்சில்!
பத்து வயதிலேயே நீயெந்தன் பத்து மாத
சுமையையும் மறக்க வைத்தாயே!
என் உயிரே கண்மணியே என் நிஜமே
என்னை எனக்கு காண்பித்த அதிசயமே என் மகனே
உனை நினைத்தாலே மகிழ்ந்து மகிழ்ந்து
புன்னகைக்கிறதே எந்தன் ஆனந்த கண்ணீர் !!
2) உனை மறவாத...
உனை மறவாத ஒவ்வொரு நொடியிலும் நான்
எனை மறந்தே ஒவ்வொரு நொடியிலும் நீ
நம்மிருவரின் வித்தியாச சுகம் கண்டு
ஒவ்வொரு நொடியிலும் தவிக்கிறதே காதல்!
3) திரை
திரைப்படம் திரையரங்கம் இவையெல்லாம்
மனதையேனோ கவரவில்லை
ஆனால்
"திரை" நல்லதோர் ஆசிரியர்
மழைவெள்ளம் கண்டு நனையவில்லை
தீமழை கண்டு எரிந்துவிடவுமில்லை !
4) மகிழ்ச்சி
வாழ்வது ஒரு கலை
நல்லாசிரியரை தேடுகிறது வாழ்க்கை
அமைதியற்ற செயலும்
செயலற்ற அமைதியும் தவறே
செயல்கள் யாவையிலும்
அமைதியும் சந்தோஷமும்
நிறைந்திருக்கும் மனமதில்
பொங்கிமகிழும் மகிழ்ச்சி !
கல்லரை செல்லும்வரை - மனித
சிந்தனையின் உயிரோட்டம் நிச்சயம்
அறிவென்ற நதிக்கரைகளை மட்டும்
திடப்படுத்தினால்
வாழ்விலென்றும் அமைதி நிச்சயம் -அந்த
அமைதியில் மகிழ்ந்து மலரும் மகிழ்ச்சி !
சென்றுசேரும் இடத்தை விட
பயணமே மகிழ்ச்சி!
பரிசை வாங்கும் நொடிகளை விட
உழைத்து மகிழ்ந்த மணித்துளிகளில் தான்
ஒளிந்திருக்கிறது மகிழ்ச்சி!
5) விமர்சனம்
நெஞ்சார்ந்த அன்பால் மனம் திறந்து பேசினான்
அவன் மனதை குத்தியது விமர்சனம்
முட்டாளை அறிவாளியாக்க நெஞ்சுவலிக்க பேசினான்
அவன் மனதை கிழித்தது விமர்சனம்
உறவுகள் மேம்பட தவறுகளை மன்னித்தான்
அவன் மனதை நொறுக்கியது விமர்சனம்
கதறிய தன் மனதின் அறிவுரை கேட்டான்
அவன் அமைதியில் வாழத்துவங்கினான்
அளவோடு பேசுமோர் அதிசய ஊமையானான்!
nsureshchennai@gmail.com |
© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|