| 
  இம்மாதக் கவிஞர்கள்: 
  கவி.செங்குட்டுவன் |
  பிரதீபா,புதுச்சேரி |
  ப.மதியழகன் | வேதா. இலங்காதிலகம் 
  (டென்மார்க்) | மட்டுவில் ஞானக்குமாரன் | ராம்ப்ரசாத் (ஸ்காட்லாண்ட்) |
 
  
   
  புத்தாண்டு வாழ்த்து !
 - கவி.செங்குட்டுவன் -
 
 புத்தாண்டு பிறக்குது
 பொழிவாக மலருது !
 
 தித்திக்கும் இந்நாளில்
 கவலைகள் மறையுது !
 
 உலகில் சமாதானம்
 நிலவப் போகுது !
 
 உயர்குடியும் தாழ்குடியும்
 ஒன்றாக இணையுது !
 
 பகலவன் கதிர்கள்
 பட்டொளி வீசுது !
 
 பாரெல்லாம் நல்லாட்சி
 பகட்டாக நடக்குது !
 
 போட்டி பகை
 அச்சம் மறையுது !
 
 நாட்டு மக்களின்
 நல்லெண்ணம் நிறைவேறுது !
 
 மின்னஞ்சல் : rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
 வலைப்பூ : http//pumskottukarampatti.blogspot.com
 
 
 பிரதீபா கவிதைகள்!
 
  என் அன்புக் காதலா...
 - - பிரதீபா,புதுச்சேரி. -
 
  
   
  பாலோளி வீசிமுழுமதி உலா வர
 அவ்வோளியை பிரதிபலித்து
 அந்தி மல்லிகள்
 மணம் வீச
 சில்லேனத் தென்றல்
 மர இலைகளில்
 இசை மீட்ட
 வெண்மதி தன் முகம்
 பார்க்க தோதாக
 சலனமின்றி ஒடிய
 நிரோடையில்
 ஆங்காங்கே துள்ளி
 குதித்த மீன்களுமாக
 இயற்கை அழகேல்லாம்
 கொட்டி கிடந்த
 அந்த இரவையும்
 ரசிக்காது
 வாடி நின்றேன்
 அழகா உன் வருகைக்காக
 நீ இல்லா இடத்தில்
 அமுதமும் கசகின்ற போது
 இவையேல்லாம் எம்மாத்திறம்....
 
 bradipagen@yahoo.com
 
  முதியோர்
 - பிரதீபா,புதுச்சேரி -
 
  
   
 கடந்து வந்த
 நாட்களை
 காலம் முகத்தில்
 அச்சிடக்
 காணவேண்டியவை எல்லாம்
 தேடித்தேடிக் கண்ட
 களைப்பில் பார்வை குன்ற
 ஒடியோடி உழைத்து
 உடலும் சோர்வு
 அடைய
 கம்பீரமாக எதிர்நோக்கிய
 வாழ்கையை எண்ணங்கள்
 அசைபோட
 கால மாற்றங்களுக்கு
 சாட்சியாய்
 காலம் கற்றுத்தந்த
 பாடங்களுக்கு பதிவேடாய்
 நம் அனைவரின் இல்லங்களிலும்
 ஓரமாய் தள்ளாடும்
 அனுபவ அந்தாதி
 படிக்கப்படாமலே...
 
 bradipagen@yahoo.com
 
  ப.மதியழகன் (மன்னார்குடி)  கவிதைகள்!
 
  பூமராங் வாழ்க்கை
 - ப.மதியழகன் (மன்னார்குடி) -
 
 
  
  மண்ணும், காற்றும், நீரும்கொஞ்சம் கொஞ்சமாக
 உயிரோடு தின்றுகொண்டிருக்கின்றன
 எனதுடலை
 அதனை அலட்சியப்படுத்தி
 செலுத்தப்பட்ட அம்புபோல
 சுயப்பிரக்ஞை சிறிதும் அற்று
 விரைந்து கொண்டிருக்கிறேன்....
 எந்த வில்லினுடைய நாணின்
 இழுவிசையிலிருந்து
 எந்த இலக்கை நோக்கி
 விடப்பட்டு இருக்கிறேன்
 என்ற கேள்வி தோன்றி
 வேதாளம் போல்
 எனது தோளில் வந்தமர்ந்து கொண்டது
 நான் இலக்கை சென்றடைவேனென
 நம்பிக்கை வைத்து
 என்னையவன் எய்து இருக்கின்றானா?
 வழியில் எனது லயம் தவறிய
 தப்புத்தாளங்களை
 கண்ணிமைக்காமல் கவனித்துக்
 கொண்டிருந்தானா?
 மீண்டும் அவன் கைகளில்
 தவழ நேருமோ
 நியாயத்தீர்ப்புக்காக அவன் எதிரில்
 கைகட்டி நின்று
 சாட்சிக் கூண்டில் சிறைபட நேருமோ
 அச்சூழ்நிலையில்
 ‘உனது படைப்பு பூரணமடையாத போது
 எப்படி அந்தப் படைப்பு நடத்தும்
 வாழ்க்கை பூரணமாக
 இருக்கவேண்டுமென்று நீ ஆசைப்படலாம்? ’
 என்ற கேள்வியை பதிலாக்கி
 அச்சமற்று நின்றிடுவேன்
 அச்சபையில்
 மானுடத்தின் கேள்வியினை
 நானொருவன் கேட்டிடுவேன்.
 
 mail id:mathi2k9@gmail.com
 
 வசீகரமிழந்த வாழ்வு
 
 - ப.மதியழகன் (மன்னார்குடி) -
 
  
   
 வசீகரமிழந்தது வாழ்வு
 தொலைவிலிருந்து காண்கையில் பொலிவாகவும்
 அருகாமையில் செல்லச் செல்ல விகாரமும் கொண்டது
 வாழ்வுவெளியெங்கும்
 வசந்தத்தைப் பறிகொடுத்த நட்சத்திரங்கள்
 உணர்வின்றி ஜொலிக்கும்
 வறட்சியால் பிளவுகண்ட நிலங்கள்
 தனது களங்கத்தை திரையிட்டு மறைக்க
 விழையும் நிலா
 தென்றலின் மீது பகைமை கொள்ளும் மரங்கள்
 தன்னுடைய மாமிசத்தையே வேட்டையாடி
 உண்ண நினைக்கும் விலங்கினங்கள்
 தனது சிறகுகளையே முடமாக்கி,
 அங்கஹீனமாக்கும் பறவையினங்கள்
 பலிகொடுப்பதற்கே குழந்தைகளை பெற்றெடுக்கும்
 தாய்,தந்தையர்கள்
 அன்பை தூரஎறிந்துவிட்டு ஆயுதத்தை கையிலெடுக்கும் மனிதர்கள்
 பூமி நரகமாகியதால்
 காடுகளே இனி மனிதன் வாழ்வதற்குச் சிறந்தது
 நாட்டில் எவ்வுருத்தில்
 எந்த மிருகம் ஒளிந்திருக்கும்
 என்றறியாது எவ்வாறு வீட்டினில்
 பயமின்றி உறங்குவது?
 
 mail id:mathi2k9@gmail.com
 
 
  உறவுகள். 
  வேதா. இலங்காதிலகம்.ஓகுஸ், டென்மார்க்
 
 
  
  சேயாய் மனிதன் உறவினைதாயின் மார்புத் தொடர்பினால்
 மாய மோகன முறுவலால்
 ஓயாத அணைப்பால் அடைகிறான்.
 தேயாத பெற்றவர் உறவால்
 தரமாய்த் தகுதியாய் உலவுகிறான்.
 
 நன்மை, நேர்மை, நற்பண்புகள்
 இன்ப உறவின் திறவுகோல்கள்.
 ஆபத்தில் தள்ளல், அந்தரமாக்கல்,
 ஆறுதலளித்து அணைப்பதும் உறவுகள்.
 தேன் தமிழோடு தமிழன் உறவு
 வீண் தமிழென்று விலக்கல் உமிழ்வு.
 
 ஊரிற்கு மனிதன், நாரிற்குப் பூ,
 ஏருக்கு வயல், தூரிற்கு மரம்,
 பூவிற்கு மணம், ஆவிற்குப் புல்;,
 பாவிற்குச் சந்தம், நாவிற்குத் தமிழென,
 புவியில் காலகாலமாய் சிரஞ்சீவியாய்
 கவினுறு மனிதப் பயன் உறவுகள்.
 உறவுகளின் இணைப்பு பெரும்
 ஊட்டம் நிறை களிப்பு.
 நறவு மிகு நம்பிக்கையாம்
 சிறந்த நங்கூரப் பிடிப்பு.
 சிறகுகளாக வாழ்கை வானில்
 தோன்றும் ஒரு மிதப்பு.
 
 உறவுகளின் முறையான அமைவு
 வாழ்விற்கு வளமான செழிப்பு.
 துறவென்று உறவுகளை
 அறுப்பதொரு வெளி நடப்பு.
 உறவுகள் இறைவனோடென்பது
 துறவு வாழ்வுப் பிணைப்பு.
 
 kovaikkavi@gmail.com
 
 
 ஏதுமில்லை ....!
 
 - மட்டுவில் ஞானக்குமாரன் -
 
  
   
  சீதையே உனது ஆசைதான் என்ன
 இலங்கையைக் கொழுத்துவதா ...?
 
 அழுகிய
 பீடைகளைக் கொழுத்தலாம்
 உயிர் ஆடைகளைக்
 கொழுத்தலாமா ..?
 
 இராமனே நீ
 ஐனகனின் வில்லை உடைக்கலாம்
 ஐனங்களின் விலாவை
 உடைக்கலாமா ...?
 
 பரதனே நீ
 ஆடைகளை
 வெளுத்துப் பார்க்கலாம்
 கொழுத்திப்பார்க்கலாமா ...?
 
 ஓ .....பாரியே
 உனது அவையிலே அரங்கேறுவது
 ஒப்பாரியா ...?
 
 கிளிகளே
 நீங்கள் பருந்துகளோடு
 உட்கார்ந்து
 விருந்துண்ணலாமா
 
 யாரது
 குஞ்சுகளைக் கொன்ற
 கழுகுகளுக்கா
 பொன்னாடை போர்த்துகிறீர்
 
 தூதுக்
 குழுக்களுக்களின்
 வருகைகளுக்கோ பஞ்சமில்லை
 சூட்டுவதற்க்குத்தான்
 புறாக்களிடம்
 கண்ணீர் மாலைகளைத் தவிர
 வேறில்லை ........!
 
 maduvilan@hotmail.com
 
 
 உன் பிறந்த நாளில்...
 
 - - ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட் -
 
  
   
  உன் பிறந்த நாளில்உன்னை வாழ்த்தத்தானோ
 உனக்கு முன்பே பிறந்து
 மொழி பயின்றேன் நான்...
 
 கிளிகளுக்கு தமிழ்
 புரியாதென்றாலும்
 என் செல்லக்கிளி
 உன்னை வாழ்த்த
 தமிழையே
 பயில வேண்டியிருந்தது...
 
 வாழ்த்துரை வழங்க வந்து
 வஞ்சி உன்னழகில்
 வார்த்தைகள் மறந்து
 வெறுமையாய் திரும்பியதொரு
 காலம்...
 
 நீ பிறந்த நாளில்
 நீ பிறந்த நொடியில்
 உன்னை வாழ்த்திட
 யுகங்களாய்க் கடத்துகிறேன்
 காலத்தை...
 
 வருடத்தின் அத்தனை
 நாட்களையும்
 நீ பிறந்த நாளாய்
 கடத்தியதில்
 உன் பிறந்த நாள்
 நினைவில் நின்றது
 ஆச்சர்யம்தான்...
 
  
  ramprasath.ram@googlemail.com  |