இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் மாதக் கவிதைகள்!
ஏப்ரல் மாதக் கவிதைகள்!

நான்!

- ஆர்.நாகப்பன் -


கவிதையாரும் அமராத
ரயில் பெட்டியில்
பயணிக்கும் வண்ணத்து பூச்சியாய்
கனமான நிமிஷத்தில் இருந்து
உருவாகும் கவிதையாய் இருக்கிறேன் எப்போதும்.....
சுழலும் மின்விசிறியின்
இறக்கையின் வேகம்
இயலாதாகினும் படபடக்க முடிகிறது
என்பதான சுயத்தில்
தண்டவாளத்திலும்
அமர்ந்து போக முடிகிறது என்னால்!

இன்னும்
வயதுக்கே வராத சிறுமி ஒருத்தியின்
அளவுக்கு மீறிய வளர்ச்சியில்
எச்சில் ஒழுகும்
நடுத்தர வயதுக்காரனின்
காமத்தில் கொப்பளித்து
வெளி கிளம்புகிறது
அடையாளம் தொலைத்த ரௌத்திரம்!

நிறம் இழக்கிற
சுயத்தில்
வெள்ளையாய் தூசியாய்,
இருந்து விட்டு போகட்டுமே எப்போதும் மேனி.....

அழுக்கு பிச்சைக்காரியின்
உப்பிய வயிற்றுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும் கண்தலாக
இயல்பாகவே இருந்துவிடுகிறேன்
எறும்புகள் மொய்க்காதவரை

வண்ணம் இல்லாவிட்டாலும்
பூச்சி என்று சொல்வதில்லை யாரும்!

nagaa72@gmail.com

தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்

- அத்திவெட்டி ஜோதிபாரதி -


கவிதைவெள்ளையைப் பார்த்து
வெளிரிப் போனது
தன் நிறம் மறந்து

மஞ்சளைப் பார்த்து
மறைத்துக் கொண்டது -தன்
மகிமையை

கறுப்பைப் பார்த்து
கவிழ்ந்து விட்டது
கடைச் சரக்காகி

சாயம் வெளுத்துக்கொண்டு
மகிழ்ந்திருந்தது
தன்னையே மாற்றிக் கொண்டு
சமூகப் பண்பாடு மறந்த
மாந்தளிர்...!

jothibharathi@yahoo.com

அனாமிகா பிரித்திமாவின் கவிதைகள்...

மாறினேன்...

கவிதைதங்களின் ஆசைக்காக...
என்னை மாற்றிக்கொண்டேன்...

ஏதாவது ஒரு மாறுதலின் போதாவது...
என்னைப் பிடிக்கும்...
என்று நம்பி...

இலையாய் மாறினேன்...
என்னை மிதித்து விட்டீர்கள்

பூவாய் மாறினேன்...
என்னை கசக்கி விட்டீர்கள்

காயாய் மாறினேன்...
ஏன் முகம் சுழிக்கிறீர்கள்...
துவர்க்கிறேனா?

கனியாய் மாறினேன்...
இம்முறையும் என்னை உமிழ்ந்து விட்டீர்கள்...
புளித்துவிட்டேனா?

கடைசியாய்...வேராய் மாறினேன்...
அய்யோ... என்னை முழுதாய்...
வெட்டி சாய்த்து விட்டீர்களே...

எதுவாக மாறி வந்தால் தங்களுக்கு பிடிக்கும்?
சொல்வீர்களா...?


மறக்க வேண்டும்...

கவிதைதினமும் உங்களை....
மறக்க வேண்டும் என்று...
முயல்கிறேன்...
தோல்வியடைகிறேன்...

வருடங்கள் உருண்டோடிவிட்டன...
நீங்கள் என்னை மறந்திருப்பீர்கள்...

ஆனால் என் ஒவ்வொரு செல்லுக்குள்ளும்...
நீங்கள் நுழைந்து விட்டீர்கள்...

அதை குளோனிங் செய்தால் கூட ...
நீங்கள் இருப்பீர்கள்...

வெட்டி எறிந்தால் கூட...
ஹைட்ராவைப் போல் முளைப்பீர்கள்...

வந்து விடுங்கள்...
என் கடைசி செல்...
கருகும் முன்பாவது...


பிற(ரி)ந்த நாளா ?...

கவிதைதங்களது ஒவ்வொரு பிறந்த நாளையும் ...
நமக்கு திருமணமான போது வந்த...
முதல் பிறந்த நாளைப் போல ...
கொண்டாடத்தான் ஆசை...
ஆனால் துரதிஷ்டம்...
இப்போது...
பிரிந்த நாளை ....
காணும்படி ஆகிவிட்டது...
விதி வலியதா?...
இல்லை...
வலியைக் கொடுக்கக் கூடியதா?...
ஏன்.... ஏன்.... ?
அதற்கு என்மேல் இவ்வளவு கோபம்?...
அப்படி ஒரு பெரும்பாவியா...
நான்?...


பழையவை...

கவிதைபழையவைகள் எல்லாம்...
மாற்றப்படும்...
மாற்றம் ஒன்றே...
மாறாதது...
சம்மதிக்கிறேன்...

ஆனால் ஒன்றை மட்டும்...
மாற்ற இயலாதே...
என் இதயத்தை...
அதில் இருப்பது...
என் உயிர்...
என் காதல்...
பழசு என்று...
அதை மாற்ற முடியுமா?...
மாற்றினால் இருப்பது?...
காதல் (உயிர்) இல்லா உடம்பாயிற்றே?...

நினைப்பதுண்டா?...

கவிதைகாதலிக்கும்போது...
என்னைக் கேட்டீர்கள்...
செல்லம்...
ஒரு நாளைக்கு எத்தனை தடவை....
என்னை நினைப்பாய்?...
இன்று நான் கேட்கிறேன்...
ஒரு தடவை...
ஒரு தடவையாவது....
ஒரு நாளில்...
வாரத்தில்...
மாதத்தில்...
வருடத்தில்...
என்னை ...
நினைப்பதுண்டா?...

உங்களை பற்றி...

கவிதைநிலத்தைப் பற்றி...
நீரைப் பற்றி...
காற்றைப் பற்றி...
வானைப் பற்றி...
பனியைப் பற்றி...
என்னைப் பற்றி...

எதைப் பற்றி எழுவதற்கு...
நினைத்தாலும்
உங்களைப் பற்றி...
மட்டுமே...
எழுதமுடிகிறது....
ஏன் ?.....

மெளனம்...

கவிதைகடற்கரையில் மெளனம்...
அலைகளை ரசிப்பதற்காக...

பள்ளியில் மெளனம்...
பாடம் பதி(புரி)வதற்காக...

தியானத்தில் மெளனம்...
மனதை ஒருமுகப்படுத்துவதற்காக...

தோல்வியில் மெளனம்...
வெற்றி பெறுவதற்காக...

ஆனால் தங்கள் மெளனம்...
எதற்காக...?
என்னைக்...
கொல்வதற்காகவா...?

anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/


எழுதுகோல்!

அகரம்.அமுதா


கவிதை

பைதன்னில் இருப்ப தாலே
 பயனொன்றும் இல்லை என்றே
கைதன்னில் தொட்டெ டுத்தேன்
 காகிதப் பரப்பி லெங்கும்
மைதெளிப்பாய் என்ப தாலா?
 மலரேட்டில் கவிதை யென்னும்
மெய்தெளிப்பாய் என்றே யன்றோ
 விழைந்துன்னை தொட்டெ டுத்தேன்!

என்னருமை எழுது கோலே!
 எடுத்துன்னை திறக்கும் போதே
பொன்னருமை ஏடாம் தன்னில்
 பூக்காதோ கவிதை கோடி?
பண்ணருமை உணர்ந்த தாலே
 பைந்தமிழைப் போற்று தல்போல்
உன்னருமை உணர்ந்த தாலே
 உளத்தருகே உன்னை வைத்தோம்!

தலைக்கனத்தால் ஆடும் யாரும்
 தலைக்குனிய நேரும் என்ற
தலையாயத் தத்து வத்தை
 தரணியுள்ளோர்க் குணர்த்தத் தானோ
தலைக்குனிந்தே ஆட்டம் போட்டு
 தற்குறிகள் கற்கும் வன்னம்
தலைப்பணிவை ஏட்டில்; செய்து
 தலைநிமிர்ந்தாய் பைகள் தோறும்?

கத்தியும்கை வேலும் சூலும்
 கடுங்கூரென் றுரைப்பார் கூடப்
புத்தியினால் உன்னை யன்றோ
 புகழ்கின்றார் கூரே என்று!
கத்தியினை எடுத்தார் சாவும்
 கத்தியினால் தானாம்; உண்மை!
கத்தியினும் கூராய்! உன்னால்;
 கமழ்கிறதே கற்றோர் வாழ்வு!

agramamutha@yahoo.com

கூவத்தமிழன் கூவுகிறேன்!

- - அத்திவெட்டி ஜோதிபாரதி - -


கவிதைஅழுக்குகளின் வாசம்
அவலங்களின் குரல்
கொசுக்களின் இசை முரசும்
கொடுக்காமல் குருதி உறிஞ்சும்
படித்து உரை இல் பிறக்கும் குழந்தை
பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை
சிங்காரச் சென்னை எல்லாம் வெறும் போதை -நாங்கள்
சிரமாட்டி கேட்டுக்கொள்ளும் பேதை
சுத்த குடிநீர் இல்லாமல் தவிக்கும் -இந்த
கோலத்தை எந்த நாய் பார்க்கும்
கண் குருடாக இருந்தாலும் தெரியும் -நாற்றம்
கண நேரத்தில் நாசியை பிளக்கும்
தொழிற்சாலை சாரம் இங்கு வடியும்
தூக்கம் இன்றி வாழ எப்படி முடியும்
எட்டிப்பார்த்தால் எல்லாம் மாளிகை
எட்டடி குடிசையில் ஏழைகளின் வாழ்க்கை
சாக்கடை சகதி
அதுதான் எங்கள் வசதி
இந்த வாழ்க்கையே பழகிப்போச்சு
இந்த வாசமே வாழ்க்கையாச்சு

jothibharathi@yahoo.com

சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்

- - அத்திவெட்டி ஜோதிபாரதி - -


கவிதைதினம் தினம்
கழுகாய் பருந்தாய்
வட்டமிடும்
வஞ்சக வானூர்தி
கருவறுக்க
கோழிக்குஞ்சாய்
எம் மக்கள்

இடிமுழக்கம் எங்கு பார்த்தாலும்
ஈழத்தமிழகத்தில் -குண்டுகளை
அள்ளி எரிந்து ஆர்ப்பரிக்கும்
அரக்கர் கூட்டம்

கைக்கெட்டும் தூரத்தில்
எம் உறவுகளின் தாய்த்தமிழ்நாடு

கேட்காமல் கேட்கும்
எம் உறவுகளின் ஓலங்கள்

இவன் வாழும் நாடோ காந்தியின்
அகிம்சை வழி

நேருவின் சமாதனப்புறா-அதுவோ
முதுகில் அடித்தவனை
முழுவதும் தொழும்

தாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ?

கூட்டுப் பயிற்சியும்
கொஞ்சிக்குலாவலும்
நம் குல நாசம்
செய்வதற்கேயன்றி வேறெதற்கு?

ரகசியப் பேச்சுக்களும்
ராடார் தளவாடங்களும்

ஒளிவு மறைவற்ற
ஒப்புதல் வாக்குமூலங்களும் -எம்
நலிவடைந்த உறவுகளை
நசுக்கத்தானே?

சமாதானம் என்று சொல்லி
சவ வண்டியனுப்பும்
சறுக்கிய தேசத்தின்
ஆற்றாமைத் தமிழன்
அழுகிறான் இங்கே
அவனுக்கு நாடிதுவே
வேறில்லை அவனியிலே

கண்ணீருக்கு தாழ்ப்பாள் போடும்
கயவர்கள் கூட்டம்
கட்சிக்கொடி ஏந்திக்
கல்லாக்கட்டும்

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
ஒப்பனைத் தமிழன்
ஒளிரா நிலவு அமாவாசை

உணர்வில்லா உறக்கம் பாவம்
உடுக்கை மானம் உண்டோ அறியேன்...

jothibharathi@yahoo.com

காதல்!

கவி.வள்ளி, புதுச்சேரி.

கவிதைகண்களில் காட்சியாய்
வந்தவனை கடைசிவரை
வருமாறு அழைக்கிறது
என்னவனாய்...
ஏன்? காதல் பிறந்திருக்கிறது
இல்லை இல்லை!
இப்போது தான்
நான் பிறந்திருக்கிறேன்!
இப்போதெல்லாம் என்
இருப்பை தேடிக்கொண்டிருக்கிறேன்
அது உன்னில் இருப்பதை
அறியாமல்!
வருவானா தேடுகிறேன்...
வந்த பின்
பாரா முகம் காட்டிச்
செல்கின்றேன்...
எத்தனை பெரிய நடிப்பு!
இது காதல் கற்று
தந்த வித்தை!
எல்லோரையும் இயல்பாய்
பார்க்கும் கண்களுக்கு
காமத்தை கலந்து
கக்கும் வித்தையை
கற்றுக் கொடுத்தது யார்?
உன்னை பார்க்கும்
போது மட்டும்!
மனதில் உள்ளதை
ஒன்று கூட்டி
மொழிய வந்த போது
நீயும் கூறினாய்
உன் காதலை...
எனது தோழியிடம்!
இப்போதும் மகிழ்சியாய்
இருப்பதாய் காட்டிக்கொள்கிறேன்
எத்தனை பெரிய நடிப்பு...
இதுவும் காதல் கற்று
தந்த வித்தை!

pankajavalli.kavi@yahoo.co.uk

ஆசை காட்டி காதல் வயப்படுத்தி, கைபிடிக்க போகும் போது வரத்ட்சணை கேட்கும் கொடிய ஒரு கயவனிடன் மனதைப் பறிகொடுத்தவள் உள்ளம் அழுகிறது

உள்ளம் அழுகிறது

சக்தி சக்திதாசன்


கவிதைஉள்ளம் அழுகிறதே
ஓசை உனக்குக்
கேட்கிறதா ?

துன்பம் நேர்கையில்
இன்பத்தின் பாதை நோக்கி
விழிகள் வடிக்கும்
கண்ணீர்த்துளிகளில் நீ
கலங்கும் மனதின் சோகம்
கலந்திருப்பதைக் காணவில்லையா?

ஓசையில்லாத ஓலங்கள்
ஆசையை கனவிலும்
அடையமுடியா நெஞ்சங்களின்
தேசியகீதம் அதுதானே

பார்க்கவில்லை அந்தஸ்து
பார்வைகள் கலக்கும் போது
கேட்கவில்லை வரதட்சணை
விழிகளின் மோதலில்
காதல் பூத்தபோது

ஆசைகளை நெஞ்சில் தேக்கி
ஆவலோடு தன்வாழ்வை நோக்கி
அன்பிற்கு தடைகளை நீக்கி
அவள் நெஞ்சில் மையல் பூக்க

கழுத்தினில் தங்கச் சரடு
கட்டும் போது மட்டும்
கண்டுவிட்டார் அந்தஸ்து பேதம்
காணவில்லை அவரகத்தில் மனிதம்

போனால் போகட்டும் போடா
பேதையவள் கண்வழியும் நீரைத் துடைத்து
பூண்டுவிட்டாள் தன் வாழ்வில் சபதம்
பூட்டமாட்டாள் அவள் கால்களில் விலங்கு
பூவையவள் கண்டது ஒரு விடுதலை
பூக்கட்டும் மகளிர் மனதில் புதுத்தெம்பு.

ssakthi@btinternet.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner