பாவாண்ட கண்ணதாசன்!
- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) -
       
      ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தேழில்
      
      நா இனிக்கத் தமிழ் வரைந்த
      பா உலகக் குரு இவன்.
      சா இல்லாக் கவி உலகினுள்
      வா என்று பலரை இழுத்தவன்.
      மா கவிஞன் பிறந்த நாளுக்காய்
      பா எழுதுகிறேன் பரவசம் கொண்டு.
      ஆனித் திங்கள் இருபத்தி நான்கில்
      அவனியில் உதித்த வித்தகன் முத்தையா.
      அறிமுகமானான் பின் அரசவைப் புலவராயும்.
      அர்த்தமுள்ள இந்துமதம், யேசு காவியம்
      முற்றுப்பெறாத காவியங்களால் விசுவரூபமானான்.
      
சந்தக் கவியின் சொந்தக்காரன் இவன்.
      சுந்தரப் புதையல் சிறுகூடல் பட்டிக்கு.
      செந்தமிழ் மகரந்தம் சிந்தி உலகிற்;குப்
      பந்தி விரித்தான் சினிமா விருந்தில்.
      சொந்தம், தத்துவம், சமயம் கதம்பமாய்
      சிந்தை நிறைத்த தேனருவி கண்ணதாசன்.
      
      ( 24 கண்ணதாசன் நினைவு தினம்).
17-6-06.
 
வெளியே வெயில்...
      
      வளியில் வெப்பம்
      வெளியில் வெயில்.
      அளிக்கும் உயிர்ச்சத்து
      எளிதாய்ப் பெறலாம்.
      கிளித்தட்டு விளையாட்டு
      நெளியும் முகமாய்
      களிப்பில் மக்கள்
      குளிக்கிறார் மூன்றுமாதம்.
      
      கேளிக்கை உள்ளம்
      தெளிக்கும் உற்சாகம்.
      விளிக்கும் வதனத்தில்
      குளிர்ச்சி விழிகள்.
      வெளிச்சப் புன்னகை.
      வெளியே முத்தமிடும்
      வெளிச்ச வெயிலால்
      துளிர்க்கும் ஆரோக்கியம்.
      
      குளிரில் சுளித்து
      செளிம்பு விரக்தியில்,
      மூளியாய் உள்ளே
      ஓளித்தவர் மகிழ்கிறார்.
      வெளியே முற்றத்தில்
      துளித்துளி மூலி;கைக்
      குளி;யலாய் மேற்கில்
      வெளியே வெயிலில்.
      29-6-06.
வேதா. இலங்காதிலகம்.
      ஓகுஸ், டென்மார்க்.
      vetha@stofanet.dk



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991

