பொங்கலோ பொங்கல்!
              
              - வைகைச் செல்வி -
              
              தத்தை மொழி பேசிப் பறந்த பிஞ்சுக் குழந்தைங்க
              கொத்துக் கொத்தாய் நோய்டாவிலே கூடாப் போனபின்
              எக்கணமும் கண்ணீரோடு அலைஞ்சு திரிகையில்
              சக்கரையும் பொங்கலுமா திங்க முடியுங்க?
              
              காந்தி மகான் புத்தரும்தான் பொறந்து வந்தாங்க
              சாந்தி வேணும் என்றுதானே சொல்லிப் போனாங்க
              சுருங்கிப்போன மனுசனுக்கு இதயமில்லீங்க
              கரும்புச்சாறு கரிக்குதுங்க பொங்கலன்னிக்கு.
              
              செத்துப்போன மாடுரிச்சா அவனக் கொல்லவும்
              மொத்தசனம் ஏறிவந்த ரயில எரிக்கவும்
              சங்கம் வைத்து சாதி மதம் வளர்க்கும் ஒலகிலே
              பொங்கப்பான மட்டும்தானா பொங்கி வழியுது?
              
              vaigai_anne@yahoo.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




