இருப்பின் இழப்பு அல்லது இழப்பின் இருப்பு!
- சாந்தினி வரதராஐன் -
      - சாந்தினி வரதராஐன் -
        உதிர்ந்த சிறகுகளை
        என்னால்
        சேகரிக்க முடியவில்லை
        மறுபடியும் முளைக்கும்
        என்ற நம்பிக்கையும்
        உயிரிழந்து நிற்கின்றது.
        என்னிலிருந்து உதிர்ந்த 
வார்த்தைகளும்
காற்றின் கால்களுக்கிடையில்
சிக்கி தவிக்கின்றது.
உதிர்ந்த வார்த்தைகளைவிட
மௌனமாக விழுங்கப்பட்டவைகள்
ஏராளம் ஏராளம்………..
      வார்த்தைகளும்
காற்றின் கால்களுக்கிடையில்
சிக்கி தவிக்கின்றது.
உதிர்ந்த வார்த்தைகளைவிட
மௌனமாக விழுங்கப்பட்டவைகள்
ஏராளம் ஏராளம்………..
        அத்தனையும் ஒரு கலவையாகி
இருண்ட வெளியில்
ஒரு புள்ளியாய்
விழுந்து கிடக்கின்றது
ஒரு நட்சத்திர ஒளி சிதறி
பரவும்
பொழுதுக்காய்.
      இருண்ட வெளியில்
ஒரு புள்ளியாய்
விழுந்து கிடக்கின்றது
ஒரு நட்சத்திர ஒளி சிதறி
பரவும்
பொழுதுக்காய்.



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991

