- நவஜோதி ஜோகரட்னம் -
      
      அவன்
      நரம்புகள்
      புடைத்து நின்ற கரங்கள்
      நடுங்கித் துடித்தது
      பஞ்சடைந்து
      மங்கலாகி விட்ட கண்கள்
      உனக்கும் எனக்குமாக
      உலகத்தைக் காப்பாற்றிய நினைவுகள்
      பிரம்பை
      பிடித்த கரங்கள்
      சண்டைப் பிளேனை
      பறக்க விட்ட நினைவுகள்
      பழைய காட்சிகள்
      வீரமும் வெற்றியும்
      வதைகளும் வலியும்
      அவளிடத்தில்
      அந்தச் செவிட்டுக் காதுகளில்
      
      நினைவில் தான்
      அந்த யுத்தம்
      வரண்ட குன்றுகள்
      பசுமையைத் தேடி
      அலையும் கண்களில்
      பாலைவனம்
      சுருக்கிஇ வருத்துகின்ற
      காய்ந்த தோல்கள்
      அணிவகுப்புஇ வீரநடை
      வரண்ட சூட்டில்
      மயக்கும் நிலையில்
      தாகத்தின் கொடுமை
      அவனை இன்னும் வருத்துகிறது
      திறந்த ஊனத்து(க்)
      காயங்கள்
      வருத்தும் உள்ளம்
      முனகிய தோழர்கள்
      பதறிய
      மரணப் பார்வைகள்
      இன்றும்
      யாராவது வாழ்ந்துகொண்டிருந்தால்
      எப்படி மறக்க முடியும்?
      
      குறாவும் குளிரில்
      அந்தச் சமுத்திரம்
      இரும்புகளைச் சுமந்த
      கடலும்
      அவனை அழைக்கிறது
      உயிர்களைக் காப்பாற்ற(த்)
      தொங்கிய தோணிகள்
      பிரமாண்டமான
      நெருப்பைக் கக்கி
      உயிர்கள் பொடியாக(ப்)
      பயங்கர ஓசை
      கொடுமை
      ஹிட்லரின் கட்டளை
      கடமையில் - கப்பலோட்டிகள்
      செலுத்திக் கொண்டிருந்தார்கள்
      யாருக்குத்தான் தெரியும்
      அவளுடைய நினைவுகளும்
      அமைதியில் ஓடியது
      அவசர சிகிச்சை
      வீங்கி வழிந்த காயங்களுக்கு
      இரவு வேளைகளில்
      மின்மினிப் பூச்சியாக
      இடையிடையே அசைந்த
      இனம் புரியாத
      பாலை வெளிகள். .
      ஒரு நாள்
      என்றுமே கேட்டிருக்காத
      வெடிச்சத்தம்
      செவிடாக்கியதுஇ ஊமையாக்கியது
      உயிரைத் தூளாக்கியது
      உயிரைத் தூளாக்கியது
      குமையும் எண்ணங்கள்
      யாரிடமும் விவரிக்கவில்லை. .
      
      அதிலிருந்து
      வழிவந்த வாரிசுகள்
      நிட்சயம்
      மரியாதைக்குரியவர்கள்
      தேவைப்பட்ட போதெல்லாம் 
      விழிமாற்றி ; வழிமாற்றி ; மொழிமாற்றி
      குருதியில் நனைந்தவர்கள்
      நேற்றைய விருதுகள்
      அந்தக் கதாநாயகனின்
      கனவகளின்
      மனசு கேவும்
      மாற்றத்தின் விழுதுகள்
      
      ( ‘திருவருள்’ சஞ்சிகையில் 2004)
      navajothybaylon@hotmail.co.uk



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991

