எனது எழுத்து ...!
மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி)

அச்சங்களுக்கு 
  இடையிலேயே பயணிக்கிறது 
  இலட்சியங்கள் ...
  
  அவசரங்களுக்கிடையிலேயே 
  மீட்கப்படுகின்றது 
  இந்த சுபசுரம்.
  
  அது கூட 
  உச்சி மூங்கில் மீதேறிய 
  ஒற்றைக்கால் தவம்.
  
  ஆடை அவிழ்ப்பைப் பற்றி 
  எழுதினால் மட்டுமே 
  அவர்கள் புத்தக சபாக்களிலே 
  அனுமதியாம்.
  
  உச்ச 
  விற்பனைக்காக 
  எழுத்துக்களை நிர்வாணமாக்கி
  பொய் எனும் தேரிலேற்றுகிறார்கள். 
  
  காட்டைக் கொழுத்த 
  ஒற்றைச் சருகிலொரு 
  பொறி போலவே என் கவிதை
  
  இந்த அழுக்குகளை 
  வெழுக்கவே
  தீமூட்டி யாகம் வழர்க்கிறது
  எழுத்து கருவி.
  
  maduvilan@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991


