அதில் தூங்கும் பனியோடும் பேசு.
-- கரவைதாசன்--
அன்பின் தம்பி
எவர்க்கும் போல் எனக்கும் கிடைத்தன்வே
காரணமாகின்றன.
முன் பின் அறியா இருட்டு
அறைக்குள் அடைக்கப்பட்ட பூனையாய் - நீ
உணருகின்றபோது
எனக்குள் ஈரமற்ற மழை.
வாழ்வு
மூழ்கிக் கரைவதற்கு மட்டுமல்ல.
மீண்டும்! மீண்டும்!
முளைத்து உயிர்ப்பதற்காய்.
ஒரு நுனிப் புல்லோடும்
அதில் தூங்கும் பனியோடும் பேசு.
எதையும் சந்தேகத்தோடு தேடு – படி
புரிந்து கொண்டே பேசு.
மதங்களுக்குள் மனங்களைத் தேடாதே!
மனங்களுக்குள் மதங்களைத் தேடு!
புரிந்து கொண்டே பேசு.
துகள்களைத் துடைத்; தெறிந்திட - என்னிடம்
ஒரு பொட்டுத் துணி இல்லை.
மண்ணைப் புரட்டிட – உன்னிடம்
கத்தி, கடப்பாரி, கலப்பை
எல்லாம் உண்டு.
எல்லாம் எல்லோர்க்குமானால்
எனக்கும் சந்தோசம்.
இறுதியாக
ஓர் வேண்டுகோள்!
எதிரியின் பாசறைக்குள்
என்னைத் தேடாதே!
ஓடுகின்ற நதியில்
காணுகின்ற நிலவு – நான்
நான் சிறகை விரிப்பது
பறப்பதற்கு மட்டுமல்ல
உன்னை அணைப்பதற்கும் தான்.
thasan@vejen-net.dk