காந்தியின் ஐப்பசி இரண்டு!
- வேதா. இலங்காதிலகம் -
சத்தியாக்கிரக ஆயுதம் ஏந்திய
வித்தியாசப் போராளி காந்தி.
அகிம்சா தர்மத் தாக்கத்தை
அகிலத்திற் குணர்த்திய தேசபிதா.
அழகிய குஐராத் மானிலத்தில்
ஆயிரத்தியெண்ணுற்றி அறுபத்தொன்பது
ஐப்பசி இரண்டில் போர்பந்தரின்
அவதாரம் மோகன்தாஸ் கரம்சந்.
அகிம்சாவொளியில் இறை சத்தியம்.
அவ் வழியே சுயராஐ;யமென்றார்.
இந்துக்களின் தலைவனல்ல தான்
இந்தியாவின் தலைவன் என்றார்.
தீண்டாமைக்குத் தீயிட்டார்.
தீராப்பெண்ணடிமைப் பேயை விரட்டினார்.
தீயாம் நிறவெறியை எதிர்த்தார் - இத்
தீவிர உண்ணாவிரதப் போராளி.
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தால்
வெளிச்சமூட்டினார் பாரத பூமியை.
தள்ளி வைத்தார் மது மாமிசத்தை.
உள்ளொளிபெறக் கீதையை நம்பினார்.
உள்ளக அமைதிக்காய் கிழமையிலொரு
நாள் மௌனவிரத மிருந்தார்.
தண்டியுப்பு யாத்திரையால் அரசின்
தனி ஏகாதிபத்தியத்தைக் கண்டித்தார்.
ஆடம்பர ஆடையொதுக்கிக் கதரணிந்தார்.
இடம்கொடுத்தார் கதர் குடிசைத்தொழிலாக.
இல்லறத் துணைவி கஸ்தூரிபாய்.
இனிய மகன்கள் நால்வர்.
இந்திய நவீன சுதந்திரச் சிற்பியை
இந்திய தலைநகர்ப் பிரார்த்தனை மன்றிலில்
இரக்கமற்றுச் சுட்டான் நாதூராம் கோட்சே.
இறைபதமானார்; மகாத்மாகாந்தி -1948-1-30ல்.
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-9-06.
vetha@stofanet.dk