| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| கவிதைகள்! |  
| எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் நினைவாக...மறக்கவொண்ணா மனிதனவன்..!
 
 - - வி. ரி. இளங்கோவன் -
 
   
  பூவிலும் மெல்லியதாய்ப் புன்சிரிப்புபுகுந்து உள்நோக்கிடும் விழிகள்
 நாவினில் நறுங்கனிச் சொற்கள்
 நாளும் மறக்கவொண்ணா மனிதன்..
 
 காமனை ஒக்கும் சிவபாலனவன் - பொல்லாக்
 காமத்தைப் பெரிதென நினையாதவன்
 சோமனைப்போல் குளிர்ப் பேச்சினன் - நாளும்
 சுறுசுறுப்பான தமிழ்ப் படைப்பாளனவன்..
 
 உடலுக்கணிகலங்கள் பலவேண்டும் என்பார்
 உயிருக்கு அழகெதுவெனத் தெரியாதார்..
 கடனுக்குவேண்டியும் கட்டியழகு பார்ப்பார்
 காலனைவென்றவர் வாழவா போகிறார்..?
 
 மணத்தையே நுகரத்தான் விரும்பி
 மலரினைக் கசக்கிடுவார் சிலர்
 பணத்தையே பெரிதென் றெண்ணிப்
 பாதகம் புரியவும் துணிவார்...!
 
 குணத்தையே விலைக்குப் பேசித்தினம்
 குரங்காட்டம் போடுவார் அவர்..
 இனத்தையே எண்ணாமல் நாளுமந்த
 இருப்பையே பெருக்குவாரை இகழ்வாய்..!
 
 கரையறியாக் காட்டாற்று வெள்ளம்போல
 கவிதைமழை பொழிவாய் அரங்குதோறும்
 நிரைநிரையாய் கட்டுரை கதைகள்பலவும்
 நிறையத்தான் எழுதியிங்கே நிலைத்திட்டாய்..!
 
 உரைநடை யாப்பிலக்கணம் கவிதைவழி
 உணரணும் கொஞ்சந்தானும் என்பாய்
 வரைகின்ற வார்த்தையெல்லாம் வளமாக
 வடித்திட்ட உன்படைப்புகள் வாழும்..!
 
 அற்பமாய் உன்னாயுள் குன்றியங்கே
 ஆழ்ந்திடுவாய் உறக்கமதி லென
 சொற்பனந் தன்னிற் கூடவே
 எண்ணிட வில்லை நண்பா...!
 
 இறுதியாய் என்விழாவில் கலந்தங்கே
 இலண்டனிலும் என்கவிதை சொன்னாய்
 மறக்கமுடியுமா உன்னையே நானும்
 மனதிலே வருகிறாய் நாளும்...!
 
 vtelangovan@yahoo.fr
 |  
| 
 |  
| ©  
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |