மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்; மார்ச்
25,2008!
தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்!
உலகளாவிய ரீதியில் 47 இடதுசாரி அமைப்புகள் வலியுறுத்தல்!
தமிழ்த்தேசிய
இனத்தின் தாயகம் சுயாட்சி மற்றும் சுய நிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரித்து அதன்
அடிப்படையில் தீர்வொன்றைக் காண்பதற்கு உலகெங்குமுள்ள இடதுசாரி, முற்போக்கு
அமைப்புகள் தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், முற்போக்கு ஊடகங்கள் ஆதரவளிக்க
வேண்டுமென 47 இடது சாரி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாகவே நேற்று புதிய இடதுசாரி முன்னணியின் பிரமுகர்கள்
ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் இந்த வேண்டுகோள் பற்றிய விபரம்
அறிவிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை ஒரு தலைப்பட்சமாக
நிராகரித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் ஈவிரக்கம்
இன்றி தாக்கப்படுவதும், உயிர் உடைமை அழிப்புகள் அதிகரித்த வண்ணமும் உள்ளன.
சட்டத்தின் ஆட்சி அகன்றுவிட்டது. எனவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு
இராணுவத் தீர்வைத் திணிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதில் எதுவித ஐயமும்
இல்லை. இதன் காரணமாக தமிழர் மட்டுமல்லாமல் சிங்கள, முஸ்லிம் எல்லா இனங்களும் இனக்
குழுமங்களையும் சேர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் பெரும் துன்பதுயரங்களுக்கு
ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
அடக்குமுறை அரசாங்கங்களினால் ஒடுக்கப்பட்டு வரும் மக்களுக்காக குரல் கொடுத்து
ஆதரவளிப்பது எம் எல்லோரினதும்
கூட்டுக்கடமையாகும். ஆகையால் தான் நூற்றாண்டுகளாக தமது தயாகத்தில் வாழ்ந்து வந்த
தமிழ் மக்களின் நீதிக்கும்
சமாதானத்திற்குமான நியாய பூர்வமான அபிலாசைகளை நாம் பாதுகாப்பதற்கு விழைகிறோம்.
மனித வாழ்க்கைக்கு நிரந்தரமான ஆபத்து நிறைந்திருக்கும் நிலையில், மக்கள் சீராக
வாழ வாய்ப்பு இழந்த நிலையில் பல
இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமது தாயகத்திலே அகதிகளாக அல்லலுறுகின்றனர்.
வாழ்விடமின்றி உணவு, மருந்து, எரிபொருள்
மற்றும் மின்சாரம் முதலியவற்றிற்கான தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தவித்து
வருகின்றனர். இதன் காரணமாக நோய் நொடி மற்றும்
வறுமையில் வாடுபவர்கள், சிறுபிள்ளைகளும் சொல்லும் தரமற்ற வேதனைகளை அனுபவித்து
வருகின்றனர்.
தமிழ்த் தேசிய இனம் அவர்களின் தாயக சுயாட்சி, அதிகாரம், மற்றும் சுயநிர்ணய உரிமை
யாவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என
நவசமசமாஐக்கட்சி மற்றும் இடதுசாரி முன்னணித் தோழர்கள் 1974 முதல் போராடி
வந்துள்ளனர். இலங்கையில் புரையோடி உள்ளதும்
மோசமடைந்த வண்ணம் உள்ளதுமான இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுதான் அடிப்படையாக
அமையவேண்டும்.
இலங்கையின் தற்போதைய சிக்கலான சந்தர்ப்பத்திலே தமிழ் தேசிய இனம், அவர்களின் தாயக
சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமை
ஆகியவற்றை அங்கீகரித்து அதன் அடிப்படையில் ஒரு தீர்வை காண்பதற்கு உலகம் பூராகவும்
உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு
அமைப்புகள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் மற்றும் முற்போக்கு ஊடகங்கள் அதரவு
அளிக்க வேண்டுமென நாம் வேண்டுகிறோம்.
இலங்கை அரசாங்கம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது விமானக் குண்டு வீச்சுகள்
மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்த
வேண்டும், யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீள அமுல் நடத்தப்பட வேண்டும். படைபலம் கொண்டு
தமிழ் மக்கள் மீது தீர்வொன்றினை
திணிக்கும் முயற்சியை கைவிடவேண்டும் என நாம் வேண்டி நிற்கின்றோம்.
-
பியர் றூசோ பிரான்ஸ், அலன் மத்தியூ பிரான்ஸ், பற்றிக்ரமர்லன் பிரான்ஸ், எங்கியூ
நெதர்லாந்து, கேளன்ட் கிளாஸ் ஜேர்மனி, யக்கோ
சொகாபர் ஜேர்மனி, எனிட்றிக் டோர்ண் ஜேர்மனி, சௌக்கி சல்மி அல்ஜிரியா, பிலிஃப்
லெம்மி தியூபெக், நுசுடிலேஸ் என்கே ஜேர்மனி,
வேற்றில் விடட் நெதர்லாந்து, மத்தியாஸ் லெரன்ஸ் பெல்ஜியம், எற்காட் சாஞ்சே
மெக்சிக்கோ, பிறேம் பிலக்கா பேரு, காகிறியன்
அக்குவராஜா ஈக்குவேர், ராசியா மெடிறோஸ் பிறேசில், மிற்சாலியஸ் ஜோர்ஜ் கிறீஸ்,
ரிற்ரக்குஸ் கிறிஸ்தோஸ் கிறிஸ், கென்சி
குளிற்ரோமி ஜப்பான், அன்டேஸ் ஸ்வன்சென் சுவீடன், மொசெ அபற்றோ பிலப்பைன், யங்கிஸ்
யன்சிற் பெலிப்பிஸ் கிறிஸ், யுவான்
லெமின்றி பிரான்ஸ், லியோன் கிறளிஓக்ஸ் பிரான்ஸ், கியூ யசாகி நெதர்லாந்து, மெலிந்த
ரெறி கொள்வே பிரித்தானியா, ஈறூக் ரறிக்
பாகிஸ்தான், பெனலோடுகன் பிரான்ஸ், ஜான் மலஸ்கி பிரான்ஸ், உர்சி உரெக்
சுவிஸ்லாந்து, றெம்பெற்ரோ ஏரியாஸ் வொலிவியா, நிசார்
பாகிஸ்தான், றுத் அனோன் பேட்டோறிக்கோ, முறேசிமித் நெதர்லாந்து, யூஸ்கிரே
நெதர்லாந்து, செவஸ்ரியன் பில்வே பிரான்ஸ், யோசே
மாட்டினஸ் குறுஸ் மெக்சிக்கோ, அகமட் சலி ரமுன் கஸ்ரனோஸ் எசகன் வற்ரா துருக்கி,
ஜெற்ரஜெப்க் நெதர்லாந்து, சுசன் கல்வெல்
கியூபெக், குவன்நா மிஸ்நிக் ஸ்ரீவன் ப்லூம் ரு,ளு,யு,, ஜே மச்சாடோ பிறேசில், டென்
கொன்குளோஸ் பெல்ஜியம், மேரியா கர்ரி கியூபெக் -
நன்றி:
தினக்குரல்.காம் |