இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2007 இதழ் 95  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவித்தல்!
முடிவு திகதி: நவம்பர் 15, 2007!
தமிழகம்: பத்தாவது ஆண்டில் பெண்களுக்கான சிறுகதைப்போட்டி!
தமிழகம்: பத்தாவது ஆண்டில் பெண்களுக்கான சிறுகதைப்போட்டி!தற்காலத் தமிழரிஞர்களில் முற்போக்குக் கருத்துக்களை வழங்குவதில் முன்னிலை வகிப்பரும், பெண்ணிய விடயங்களில் மிகவும் அக்கறை கொண்டவருமான கோவை ஞானியும் (எழுத்தாளர், சிந்தனையாளர், 'தமிழ் நேயம்' பத்திரிகையின் பிரசுர ஆசிரியர் K.பழனிசாமி), லண்டன்வாழ் பெண்ணிய எழுத்தாளரும் மனித உரிமைவாதியுமான இராஜேஸ்வரியும் சேர்ந்து நடத்தும் பெண்களுக்கான சிறுகதைப் போட்டி, இவ்வருடம் தனது பத்தாவது வருட நிறைவைப் பெறுகிறது.

''பென்களின் விடுதலை பெண்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தைப்பற்றியும் அச்சமூகம் எப்படி அவர்களை அடிமையாக வைத்திருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் சிந்தனை வளர்ச்சியிலும் தங்கியிருக்கிறது. சமூகத்தைப்பற்றிய சிந்தனையைக் கூர்மையாக்கப் பெண்களுக்குத் தேவையான மூலப்பொருள் கல்வியாகும். கல்வி கொடுக்கப்படாத எந்தச் சமூகமும் முன்னேறாது. பொருளாதார விருத்தி பெறாது. கல்வியின் பரிமாணத்தை அளவிட அவர்கள் படைக்கும் இலக்கிய, கலைப்படைப்புக்கள் அளவுகோல்களாகின்றன. அதன் அடிப்படையில் பெண்களின் சமூக சிந்தனையையும், பெண்களுக்கான பொருளாதர, சமூக விடுதலை பற்றியும் கருத்துக்களையும் வெளிக்கொண்டுவர இந்தப் பெண்கள் சிறுகதைப் போட்டி உதவுகிறது'' என்று கருதுகிறார், இச்சிறுகதைப்போட்டியின் ஆரம்பகர்த்தாவான எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

இவர், சிறுகதைதொகுதிகள், நாவல்கள், மருத்துவப்புத்தகங்கள், முருகக்கடவுள் பற்றிய ஆய்வு நூல் ஒன்று உட்பட இதுவரை பதினெட்டுப் புத்தகங்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் படைத்தவர். புலம் பெய்ர்ந்த தமிழ்ப் புத்திஜீவிகளின் இலக்கிய சந்திப்புக்கள், பெண்களின் சந்திப்புக்களில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுபவர். புலம் பெயர்ந்த முற்போக்குப் பெண்கள் ஒன்று கூடும் பெண்கள் சந்திப்பை 2005ம் ஆண்டிலும் இலக்கிய சந்திப்பை 2006ம் ஆண்டிலும் லண்டனில் நடத்துவதில் முன்னின்றவர்.பெரியாரின் பெண்ணியக்கோட்பாடுகளில் மிகவும் அக்கறை கொண்டவர். பெண்களின் விடுதலைக்கான பல பிரசார முயற்சிகளையும் முன்னெடுப்பவர். இவர், பெரியாரின் பெண்ணிய சிந்தனைகளைச் செயற் படுத்தும் கோவை ஞானியுடன் சேர்ந்து நடத்தும் இந்தச்சிறு கதைப்போட்டிக்கு,இந்தியா மட்டுமல்லாது புலம் பெயர்ந்த பல நாடுகளிலும் வாழும் தமிழ்ப்பெண்கள் பலர் இதுவரை பங்கு பற்றியிருக்கிறார்கள். தமிழகத்தில், ஆண்களின் ஆதிக்கத்தில் வெளியாகும் பெரிய பத்திரிகைகள் இந்தப் பெண்கள் சிறுகதைப்போட்டி பற்றி பெரிதாக விளம்பரம் கொடுக்கப்படாமலேயே வெற்றியடன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது இந்தப்போட்டி.

தமிழகம்: பத்தாவது ஆண்டில் பெண்களுக்கான சிறுகதைப்போட்டி!இதுவரை வெளிவந்த தொகுதிகள் பல இலக்கியவாதிகளால் பேசப்ப்ட்டிருக்கிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இந்தப் பெண்களின் சிறுகதைத் தொகுதியொன்றைப் பல்கலைக் கழகத்தின் பெண்ணிய படப்புத்தங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. பெண்ணிய விடயங்களில் மேற்படிப்புப் படிக்கும் பத்துக்கு மேற்பட்ட ஆய்வாளர்கள் கடந்த பத்துவருடங்களிலும் பெண்களால் எழுதப்பட்ட 700 சிறு கதைகளையும் ஆய்வு செய்கிறார்கள். இந்தியாவிலேயே, சாதாரண பெண்களின் சிந்தனையைத் தூண்டும் முயற்சியில் எடுக்கப்படும் ஒரேயொரு சிறுகதைப்போட்டி இதுவாகும். இந்தப்போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான பெண் சிறுகதையாளர்கள் ஒவ்வொரு வருடமும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச்சிறுகதைப்போட்டியில் பங்குபெற்ற பல பெண்கள் இன்று, உலக மட்டத்தில் கவுரவிக்கப்படும், மிகவும் சிறந்த தமிழ்ப்பெண் எழுத்தாளர்களாகிப் பல தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் நாட்டின் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தலைசிறந்த நடுவர்களால் சிறந்த கதைகள் தெரிவு செய்யப்படுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பரிசு பெற்ற கதைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.

2007ம் ஆண்டுக்கான போட்டிக்குச் சிறுகதைகளை நவம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன் அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய முகவரி:

இராஜேஸ்வரி பெண்கள் சிறுகதைப்போட்டி,
c/o K. பழனிசாமி (கோவை ஞானி),

K. Palanisaami,
24. V.R.V. Nagar,
Gnambigai mill post,
Coimbatore-641029
TamilNadu,
INDIA
 என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

அனுப்பியவர்: rajesmaniam@hotmail.com

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner