தமிழ்சிஃபி.காம்!
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'வள்ளித் திருமணம்'!
  
 கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்றி அவரது துணைவியாரான வாசுகி 
    ஜெயபாலன் இசையமைத்து வெளிவந்த 'பொன்னாய் உருகும் மாலையிலே', 'புலரும் வேளையில் 
    ஜன்னலோரமாய்' ஆகிய கீதங்களை அண்மையில் தமிழ்.சிஃபி.காம் தனது இணையத் தளத்தில் 
    வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்சிஃபியில் 
    எழுத்து வடிவில் வெளியான 'வள்ளித் திருமணம்' 
    என்னும் குறுங்காவியத்தைத் தற்போது இசை வடிவில் வெளியிட்டுள்ளது. இது பற்றி 
    தமிழ்சிஃபி தனது வெளியீட்டுக் குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளது: 'சிறிது 
    சிறிதாக மொத்தம் 
  
    17 
    பகுதிகள் கொண்ட இந்த இசைக்குறுங்காவியம், இணையத்தில் ஒரு 
    புதிய முயற்சி. ஒற்றைப் பாடலைக் கேட்பதற்கும் 'வள்ளித் திருமணம்' என்ற 
    புகழ்பெற்ற புராணக் கதையினைக் கவிதையாகக் கேட்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. அதுவும் தற்போது ஆஸ்லோவின் இசைப்பள்ளியொன்றில் தமிழிசை, 
    கர்நாடக சங்கீத் ஆசிரியையாகக்வும், ஆஸ்லோ நுண்கலைக் கழகத்தின் தலைவியாகவுமுள்ள 
    ஜெயபாலனின் துணைவியார் வாசுகி ஜெயபாலன் அவர்கள், இந்தப் பாடல்களுக்குத் தன் 
    இனிய குரல் மூலமும் இசை மூலமும் உயிர் ஊட்டியுள்ளார். இந்தப் பெருமுயற்சியின் 
    பின்னணியில் ஜெயபாலன் தம்பதியினரின் கடும் உழைப்பே மேலோங்கி நிற்கிறது. 
    அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறோம்; வாழ்த்துகிறோம். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் 
    பதிவு செய்யப்பெற்ற இந்த இசைக் காவியத்தைக் கேட்டு மகிழுங்கள்.'

    கவிஞர் ஜெயபாலன் தம்பதியினரின் கீதங்களையும், 'வள்ளித் 
    திருமணம்' குறுங்காவியத்தையும் பின்வரும் இணைப்புகளில் கேட்டு மகிழுங்கள்:
  
    கீதங்கள்...உள்ளே 
    
    குறுங்காவியம்: 'வள்ளித் 
    திருமணம்'....உள்ளே
     
    கவிஞரின் மின்னஞ்சல் முகவரி: visjayapalan@yahoo.com
    நன்றி: தமிழ்சிஃபி.காம் http://tamil.sify.com/
  
 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991