| யாங்கோன், மியன்மா: 
  அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்!
  - சோலை தியாகராஜன்  -
   பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா.
  மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா 
  நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் 
  நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக
  பேரறிஞர் அண்ணா கண்காட்சி அரங்கம் 
  திறக்கப்பெற்றது. காலை 10.30மணிக்கு 
  கருத்தரங்கம் இடம்பெற்றது. பகல்12.00மணிமுதல்1.30வரை
  உணவு உபசரிப்பு அதனைத் தொடர்ந்து கலை 
  நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  மாலை 3.30 மணிக்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா
  பல்வேறு சமயம் சார்ந்த தமிழர்கள் கலந்து கொள்ள 
  அண்ணாவின் புகழ்மணங்கமழ சிறப்புடன் கொண்டாடப்பெற்றது. இரவு 
  6.30 மணிக்கு அண்ணாவின் புகழ் என்றும் சிறக்க ஒலித்து விழா நிறைவெய்தியது.  
  விழாப் புகைப்படங்கள் சில...  
    
    
    deebaraj@gmail.com 
 வெளிவந்து விட்டது: தொடரும் இதழ் 1011
 
  செப்டம்பர் 
  2009 வரையான காலப்பகுதிக்கான தொடரும் இதழ் வெளிவந்திருக்கிறது. போரற்ற வாழ்வே 
  மனித குலத்தின் மாண்பு என்ற முகப்புத் தொடருடன் வெளிவந்துள்ள இவ்விதழில் பல 
  செய்திகள் இடம் பெற்றுள்ளன. 
 சிறுகதை
 - பார்த்தல் மகத்தானது கமலநாபன்
 கட்டுரைகள்
 - வெளியீட்டின் பின் வெடிக்கும் வேதனைகள் மதுரை பாரதிபுக் அவுஸ் துரைப்பாண்டி,
 - படிப்பும் பண்பாடும்முனைவர் அ. அறிவு நம்பி
 சாபவிமோசன யாத்திரை
 
 அஞ்சலிக் கட்டுரைகள்
 - நெஞ்சில் நிறைந்த பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியனார் குறித்து முனைவர் இராம. 
  சுந்தரம்
 
 - மோதி நினைவுகள் மோதி ராஜகோபல் குறித்து தே. ப. பாலசுப்பிரமண்யன்
 
 கவிதை நூல்கள் விமர்சனம்
 - கவித்தென்றல் நா. கண்ணனின் கவிராசனின் புவி வாசனை, சித. சிதம்பரத்தின் 
  கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு, வேல்.சரவணக்குமாரின் உயிர்வலி ஆகிய 
  முன்று நூல்கள் குறித்த மு. பழனியப்பனின் விமர்சனக் கட்டுரை
 
 திரைப்பட அலசர்
 - ஆ. சந்திரபோஸ் அவர்களின் மாயண்டிக் குடும்பத்தார் திரைப்படம் குறித்த விமர்சனக் 
  கட்டுரை
 
 கவிதைகள்
 - பேனா.மனோகரன்
 - இந்தியன் கணேசன்
 - துளசிராமன்
 - அறந்தை க. அஜய்
 
 முகவரி
 கண்ணன் அச்சகம், நாடார் பேட்டை, சிங்கம்புணரி 630502
 
 M.Palaniappan
 manidal.blogspot.com
 puduvayalpalaniappan.blogspot.com
 
 muppalam2006@gmail.com
 |