| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| அறிவித்தல்! |  
| 
              
                
                  
                    
                      
                        
                          
                            
                              
                                
                                  
                                    
                                      
                                         
                                        தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 18 வது 
                                        குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)
 
  நாள்: 
                                        சனிக்கிழமை (13-03-2010) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் 
                                        இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா 
                                        நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
 நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
 
 முதல் பகுதி: (3 மணி) - குறும்பட 
                                        கலந்தாய்வு
 
 இந்த மாதம் முதல் புதிய பகுதியாக குறும்பட 
                                        கலந்தாய்வு பகுதி நடைபெறும். தொடர்ந்து 
                                        பதினேழு மாதங்களாக குறும்பட வட்டத்தில் 
                                        அனைத்து விதமான தொழில்நுட்ப 
                                        வழிகாட்டுதல்களும் நடந்து முடிந்துவிட்டன. 
                                        எனவே தாங்கள் கற்றுக் கொண்டதை 
                                        வெளிப்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து 
                                        குறும்பட வட்ட உறுப்பினர்களுக்கும் உண்டு. 
                                        இந்த மாதம் முதல் கட்டாயமாக அனைத்து 
                                        உறுப்பினர்களும் குறும்படம் எடுத்து 
                                        அவற்றை குறும்பட வட்டத்தில் திரையிட 
                                        வேண்டும். ஒவ்வொரு மாதமும் அதற்கான 
                                        உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு 
                                        அறிவிக்கப்படுவார். தமிழ் இலக்கியத்தில் 
                                        உள்ள ஏதேனும் ஒரு சிறுகதையை குறும்படமாக 
                                        எடுத்து அதனை தமிழ் ஸ்டுடியோ 
                                        நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். 
                                        உறுப்பினர் எடுத்த குறும்படத்தை "குறும்பட 
                                        வட்டத்தின்" முதல் பகுதியில் திரையிட்டு 
                                        அதில் அவர் திருத்திக்கொள்ள வேண்டிய 
                                        குறைகள் ஆராயப்படும். இந்த முயற்சி 
                                        பரிச்சார்த்த முறையில் 
                                        மேற்கொள்ளப்படுகிறது. தரமான குறும்படங்கள் 
                                        தமிழ்நாட்டில் பரவலாக வெளிவர வேண்டும் 
                                        என்பதே இதன் நோக்கம்.
 
 குறும்படம் எடுக்க தேவைப்படும் அனைத்து 
                                        உதவிகளும் தமிழ் ஸ்டுடியோ மூலம் அதன் 
                                        உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். கேமெரா, 
                                        படத்தொகுப்பு உட்பட.
 
 இந்த உதவிகளைப் பெற நினைப்பவர் நிச்சயம் 
                                        தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் 
                                        உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினராக 
                                        சேர்ந்து மூன்று மாதங்கள் பூர்த்தி 
                                        செய்திருக்க வேண்டும்.
 
 இது தமிழ் ஸ்டுடியோவின் "படமெடுக்கலாம் 
                                        வாங்க" என்கிற திட்டத்தின் கீழ் 
                                        செயல்படுத்தப்பட உள்ளது.
 
 இந்த மாதம் இலக்கியப் பகுதி குறும்பட 
                                        வட்டத்தில் இடம்பெறாது. விரைவில் "இலக்கிய 
                                        சோலை" என்கிற பெயரில் தனியொரு மாதந்திர 
                                        நிகழ்வாக நடைபெறும்.
 
 இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - 
                                        குறும்பட வழிகாட்டல்
 
 இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் 
                                        திரைபப்டக் கலை இயக்குனர், திரு. 
                                        முத்துராஜ்அவர்கள் பங்குபெறுகிறார். 
                                        குறும்படங்களில் தேவைப்படும் அழகியல் 
                                        தொடர்பாகவும், குறைந்த செலவில் 
                                        குறும்படங்களுக்கான அரங்குகள் அமைப்பது 
                                        தொடர்பாகவும் வழிகாட்ட உள்ளார்.
 
 முத்துராஜ் அவர்கள் விரைவில் வெளிவர 
                                        இருக்கும் "இரும்புக்கோட்டை முரட்டு 
                                        சிங்கம்"திரைப்படத்தில் கலை இயக்குனராக 
                                        பணியாற்றி உள்ளார்.
 
 மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) 
                                        - குறும்படங்கள் திரையிடல்
 
 இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
 
 குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால 
                                        அளவு
 
 செவ்லி அறிவழகன் 20 நிமிடங்கள்
 திற பிரின்ஸ் பெரியார் 12 
                                        நிமிடங்கள்
 கர்ணமோட்சம் முரளி மனோகர் 15 
                                        நிமிடங்கள்
 
 மூன்றாம் பகுதியின் சிறப்பு 
                                        அழைப்பாளர்:
 
 மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட 
                                        இயக்குனர் திரு. மீரா கதிரவன் அவர்கள் 
                                        சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் 
                                        குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் 
                                        நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் 
                                        இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் 
                                        வழங்க உள்ளார்.
 
 மீரா கதிரவன் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த 
                                        "அவள் பெயர் தமிழரசி" என்கிற 
                                        திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். இவர் 
                                        புகழ்பெற்ற மலையாள இயக்குனர் லோகிதாஸ் 
                                        அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர்.
 
 இந்த மாதம் உலகக் குறும்பட வரிசையில் 
                                        திரையிடப்படும் குறும்படம்
 
 உலக அளவில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட 
                                        குறும்படம்: லிட்டில் டெர்ரரிஸ்ட்
 
 லிட்டில் டெர்ரரிஸ்ட் குறும்படம் குறித்து 
                                        மேலும் அறிந்துக் கொள்ள: 
                                         
                                        http://www.imdb.com/title/tt0425200/plotsummary
 
 (இத்திரைப்படம் பௌர்ணமி இரவில் 
                                        நேரமின்மையால் திரையிடப்படவில்லை. எனவே 
                                        இந்த மாதக் குறும்பட வட்டத்தில் 
                                        திரையிடப்படுகிறது)
 
 மேலும் இந்த மாதம் முதல் அரங்கில் 
                                        குறும்பட விற்பனையும் நடைபெறும். அனைவரும் 
                                        குறும்பட இயக்குனர்களை / தயாரிப்பாளர்களை 
                                        ஊக்கப்படுத்த குறும்படங்களை விலைக்கு 
                                        வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
 
 மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் 
                                        தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
                                        சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
 
 மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் 
                                        படிவம் பெற:
 9840698236, 9894422268
 
 அருண் & குணா
 தமிழ் ஸ்டுடியோ.காம்
 www.thamizhstudio.com
 9840698236, 9894422268
 thamizhstudio@gmail.com
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |