'உவமைக் கவிஞர் சுரதா கவிதைகள்' நூல்
வெளியீடு!
மார்ச்
2007இல் கவிஞர் சுரதாவின் கவிதைகளின் முதற் தொகுப்பு 'உவமைக் கவிஞர்
சுரதாவின் கவிதைகள்' என்னும் தலைப்பில் சுமார் 720 பக்கங்களில்
வள்லுவர் தமிழ்ப் பீடம் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. நூல்
விலை: ரூபா 4000. 1921ஆம் ஆண்டில் பிறந்தவர் கவிஞர் சுரதா. இவரது
இயற்பெயரான ராஜகோபாலை சுப்புரத்தினதாசன் எனப் பாரதிதாசனின் மேல்
கொண்ட அபிமானத்தால் ( பாரதிதாசனின் இயற்பெயர்: சுப்பு ரத்தினம்)
மாற்றிக் கொண்டவர். சுப்புரத்தினதாசனின் சுருக்கமே சுரதா.
நூற்றுக் கணக்கில் கவிதைகளை எழுதிய கவிஞர் சுரதாவின் 'தேன்மழை', 'துறைமுகம்' ஆகிய நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றிற்காகச் சிறந்த நூலாசிரியர் விருது பெற்றவர். `கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்‘, `அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே‘, `ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா‘, ஆசையே அலை போல நாமெல்லாம் அதன் மேலே‘, `கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே‘, போன்ற காலத்தால் அழியாத திரைப்படப்பாடல்களை இயற்றியவர் கவிஞர் சுரதா என்பது குறிப்பிடத்தக்கது. இவரைப் பற்றிய தனது இரங்கற்பாவில் கலைஞரும் இன்றையத் தமிழக முதலவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் 'கவிதையாய் தழைத்து விரிந்த தரு; காலத்தால் அழிக்க முடியாது திரு' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கவிஞர் சுரதாவின் கவிதை நூலினை
வாங்க விரும்பினால் கவிஞரது பேரப்பிளளையான இளங்கோவனுடன் கீழுள்ள
முகவரியில் தொடர்பு கொள்ளவும்:
S.K. Elangovan
valluvar tamizh peedam publications.
56 A dr.lakshmanasamy salai
kk nagar chennai-600078.
Tamil nadu , Chennai
Mobile: +91 9884426694
Land line:044 24728508
044 is the chennai std code number
தகவல்: இளங்கோவன்
sk_elangovan@yahoo.co.in