1. போட்டிக்கு அனுப்பப்படும் கதைகள் முற்றிலும் புதிதாக எழுதப் பட்டவையாகவும், இதுவரை
அச்சிலோ, இணையத்திலோ வேறு வடிவங்களிலோ வெளியாகாதவையாகவும் இருக்கவேண்டும். மொழிபெயர்ப்புகள், தழுவல்களுக்கு அனுமதி இல்லை.
2. இந்தப் போட்டிக்கு சிறுகதைகள் மட்டுமே வரவேற்கப் படுகின்றன. நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு இதில் இடமில்லை. ஒரு கதை அதிகபட்சமாக 3000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. கதைகள் வழக்கமான அறிவியல் புனைகதை மரபைத் தழுவியதாகவோ, அதன் அடிப்படையிலிருந்து உருவானதாகவோ இருக்கவேண்டும். வெறும் புனைகதைகள் அறிவியல் புனைகதைகளாகக் கருதப்படமாட்டா.
4. கதைகள் வந்து சேருவதற்கான இறுதிநாள்: ஜனவரி 15, 2009
5. மின்னஞ்சல் வழி அனுப்புவோர் தங்கள் கதைகளை யூனிக்கோடு, டாம், டாப், டிஸ்கி எழுத்துருக்களில், RFT மற்றும்/அல்லது PDF வடிவங்களில் அனுப்பவேண்டும். பிற எழுத்துருக்களில் இருந்தால் எழுத்துருவையும் இணைத்து அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:
sujatha.scifi@gmail.com
6. ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் பரிசு ஒரு நபருக்கு ஒன்று என்ற அடிப்படையிலேயே அளிக்கப்படும்.
7. போட்டியில் வெற்றிபெறும் கதைகள் மற்றும் வெளியீட்டுக்கென தகுதிபெறும் கதைகளை ஆழி பதிப்பகம் ஒரு புத்தகத் தொகுப்பாக வெளியிடுவதற்கான அனுமதி இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலமாக நீங்கள் அளிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
8. பரிசுக்கான கதை தேர்வு விஷயத்தில் நடுவர் குழு மற்றும் ஏற்பாட்டாளர்கள் சேர்ந்து எடுக்கும் இறுதி தீர்ப்பே முடிவானது.
9. போட்டி குறித்து எந்தவித தகவல் தொடர்புக்கும் நடுவர் தீர்ப்பு வரும்வரை பதில் அளிக்கப்படமாட்டாது.
10. போட்டி முடிவு விருது வழங்கும் நாளுக்கு ஒருவாரம் முன்பு அறிவிக்கப்படும். பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும். பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேரிலோ, அவர்கள் சார்பாக ஒருவரையோ அனுப்பி விருதையும், பரிசுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.
11. பரிசுகளும் தேர்ந்தெடுத்த கதைகள் கொண்ட நூலும் வெளியிடப்படும் நாள் – பிப்ரவரி 28, 2009.
12. போட்டி முடிவுகள் வெளியிடப்படும் நாள் பிப்ரவரி 15, 2009
தகவல்:
sujatha.scifi@gmail.com |