| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| அறிவித்தல்! |  
| 
              
                
                  
                    
                      
                        
                          
                            
                              
                                
                                  
                                    
                                      
                                        சுஜாதா 
                                        நினைவு விருதுகள்!
 - வித்யாசாகர் (குவைத்) -
 
 
  சுஜாதா 
                                        அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் 
                                        சுஜாதா நினைவு விருதுகள் தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் 
                                        பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக 
                                        அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி 
                                        இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 
                                        விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 
                                        விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் 
                                        பாராட்டுப் பத்திரமும் கொண்டது.
 
 1. சுஜாதா சிறுகதை விருது: சிறந்த 
                                        சிறுகதைத் தொகுப்பிற்கு
 2. சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு
 3. சுஜாதா கவிதை விருது: சிறந்த கவிதைத் 
                                        தொகுப்பிற்கு
 4. சுஜாதா உரைநடை விருது: சிறந்த 
                                        கட்டுரைத் தொகுப்பிற்கு
 5. சுஜாதா இணைய விருது: சிறந்த 
                                        வலைப்பதிவு(blog) அல்லது இணைய தளத்திற்கு 
                                        (web site)
 6. சுஜாதா சிற்றிதழ் விருது: சிறந்த 
                                        சிறுபத்திரிகைக்கு
 
 விதிமுறைகள்
 1. முதல் நான்கு பிரிவுகளில் 2008-2009 
                                        ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் 
                                        அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ 
                                        பதிப்பாளரோ, அல்லது வாசகர்களோகூட நூல்களை 
                                        அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் 
                                        மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி 
                                        நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் 
                                        குறிக்கப்படவேண்டியதில்லை.
 
 2. 5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த 
                                        வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு 
                                        வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது 
                                        வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது 
                                        இணைய பக்கங்களையும் பற்றிய சிறு 
                                        குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான 
                                        ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் 
                                        அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: 
                                        sujathaawards@gmail.com
 
 3. 6 ஆவது பிரிவில் தமிழில் 2009 ஆம் 
                                        ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து 
                                        பிரதிகள் அனுப்பப்படவேண்டும். அந்த 
                                        ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று இதழ்களாவது 
                                        வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த 
                                        ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் 
                                        ஒரு பிரதி வீதம் அனுப்பினால் போதுமானது.
 
 4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் 
                                        முண்ணனி எழுத்தாளர்கள் மற்றும் 
                                        பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும். 
                                        தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக 
                                        வெளியிடப்படும்.
 
 5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து 
                                        சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31, 2010
 
 6. விருதுகள் மே. 3, 2010ஆந்தேதி 
                                        சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்
 
 விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
 சுஜாதா விருதுகள், உயிர்மை,11/29 
                                        சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 
                                        சென்னை-600018,
 
 மின்னஞ்சல்:sujathaawards@gmail.com 
                                        தொலைபேசி:91-44-24993448
 
 தகவல்: வித்யாசாகர் 
                                        <vidhyasagar1976@gmail.com>
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |