புதுவிசை ஜனவரி -
மார்ச் 2008 இதழ்
www.puthuvisai.com
சாதியும்
வர்க்கமும்: இரு ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக... எஸ்.வி.ராஜதுரை
அமெரிக்காவில் குடியேறியும் குடியுரிமை பெற்றும் வாழ்கின்ற மேல்சாதி இந்தியர்கள்
இந்துத்துவச் சக்திகளின் நிதி ஆதாரங்களாகச்
செயல்படுகின்றனர். முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ளவர்களின்
வங்கிக் கணக்குகளை முடக்குகின்ற, அவர்களது
கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலுள்ள
சிறுபான்மையினர் மீதான இன வெறுப்பைப் பரப்புகின்ற இந்துத்துவச் சக்திகள்
அமெரிக்காவில் சுதந்திரமாக உலவ அனுமதிக்கின்றது. அமெரிக்கக் கல்வி நிலையங்களில்
இப்போது ராமாயணமும் மகாபாரதமும் கற்பிக்கப்படுகின்றன.
அதிகாரச் சந்தையில் கவிதை விநியோகம்: குட்டி ரேவதி
கவிப்பேரரசுகள் தமது திரைப்பட அங்கீகாரம் மீதான குற்றவுணர்வைப் போக்கிக் கொள்ள
நவீனக் கவிஞர்களைக் கூவி அழைத்து விருது அளித்த தன் மீதான நவீன இலக்கிய அங்கீகார
மோகத்தையும் அறிவோம். இந்நிலையில் ஒரு செம்மாந்தநிலையைப் படைப்பின் வழி
முன்வைப்பதாய்ச் சொல்லித் திரிந்த கவிஞர்கள் அதிகார மடத்திற்குள் அடைக்கலம்
புகுந்ததன் தேவை என்ன? இவ்விழிவு நிலைக்கு எந்தக் கவிஞரின் அதிகாரம்
துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? தூண்டில் புழுவாய் மீனாய்
அகப்பட்டவர்கள் யார்?
உங்களை என் முகத்தைப் பார்க்கும்படி செய்த கதை: அழகிய பெரியவன்
நமது நாட்டில் தேவையற்று எழுதப்படுகின்றன பல ஆயிரம் பக்கங்களும், அதை தேவையற்று
படிக்கின்ற பல ஆயிரம் கண்களும்
நினைவுக்கு வருகின்றன. குலப்பெருமையும், தற்பெருமையும், அதிகாரப்பரவல் கருத்தும்
ஓயாமல் இங்கே சொல்லப்படுகின்றன.
அப்படியானால் பெருமிதம் ஏதுமற்ற எளிய கதைகள் இவற்றுக்கு எதிராக சொல்லப்பட
வேண்டியவைதான். இங்கு சொல்லப்படாமல்
தடுக்கப்பட்டிருக்கிற, அல்லது விடப்பட்டிருக்கிற, அல்லது அவசியமற்றது என்று சொல்ல
வைக்கப்பட்டிருக்கிற பல கதைகளில் ஒன்றுதான் என்னுடைய கதையும். ஆகவே அதை சொல்லத்
தொடங்குகிறேன்.
பஷீர் என்றொரு மானுடன்: டி.அருள் எழிலன்
நான் இப்போது மரணித்துவிட்டேன். இனிமேல் யாராவது என்னை நினைப்பர்களா? என்னை
யாரும் நினைக்க வேண்டாம் என்றுதான்
எனக்குத் தோன்றுகிறது எதற்காக நினைக்க வேண்டும். கோடான கோடி அனந்த கோடி ஆண்களும்
பெண்களும் இது வரையில்
இறந்திருப்பார்கள் அல்லவா! அவர்கள் எல்லோரையும் நாம் நினைக்கிறோமா? அப்புறம்
என்னுடைய புத்தகங்கள் அவை எல்லாம்
எவ்வளவு காலத்துக்கு நிலைத்து நிற்கும்? புது உலகம் வந்தால் பழமை எல்லாம்
புதுமையில் மறைய வேண்டியதுதானே? இங்கே
என்னுடையது என்று கூறுவதற்கு என்ன எஞ்சி இருக்கிறது.
உலகம் என்னை விட்டுவிட்டு முன்னே சென்றுவிட்டது: இரா.முருகவேள்
அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. கட்டடங்களைச் சொல்லவில்லை. வாழ்க்கை முறையை
சொல்கிறேன். பணத்தைத் தேடி நடக்கும் இந்த ஜுர வேக ஓட்டப் பந்தயம் முன்பு இல்லை.
எப்படியாவது ஒருநாளைக்கு இருநூறு முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆகவேண்டும்.
அடுத்தநாள் மீண்டும். முன்பும் இப்படித்தான். ஆனால் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு நாற்பது வயதானவன்- தொழிலாளி- தான் எதற்கும் உதவாதவன்- இனிமேல்
பெட்டிக்கடை வைத்துவிட வேண்டியதுதான் அல்லது வாட்ச்மேன் வேலைக்கு
போகவேண்டியதுதான் என்று உணரவேண்டி இருந்ததில்லை. இப்போது எல்லோருக்கும்
பையன்கள்தான் வேண்டியிருக்கிறது. எண்பது ரூபாய் தருகிறார்கள். நாங்கள் எப்படி...?
மேலும் சிறுகதைகள், கவிதைகள் படிக்க....
www.puthuvisai.com
editor@keetru.com |