இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2009 இதழ் 118  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சஞ்சிகை அறிமுகம்!
புதுப்புனலுக்கு தேவையில்லை பிரகடனம்!
நீர்வளமே அதன் நிரூபணம்!!

கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலாண்டிதழாக வெளிவந்து நவீன தமிழிலக்கியத்திற்கு குறிப்பிடத்த பங்காற்றிய பன்முகம் இதழைக் வெளியிட்டுவந்த புதுப்புனல் பதிப்பகம் புதுப்புனல் என்ற பெயரில் ஒரு மாத இதழை இந்த மாதத்திலிருந்து வெளியிடத் தொடங்குகிறது. கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலாண்டிதழாக வெளிவந்து நவீன தமிழிலக்கியத்திற்கு குறிப்பிடத்த பங்காற்றிய பன்முகம் இதழைக் வெளியிட்டுவந்த புதுப்புனல் பதிப்பகம் புதுப்புனல் என்ற பெயரில் ஒரு மாத இதழை இந்த மாதத்திலிருந்து வெளியிடத் தொடங்குகிறது. புதுப்புனல் பதிப்பகம் நடத்தி வரும் திரு.ஆர்.ரவிச்சந்திரன் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். திருமதி சாந்தி ரவிச்சந்திரன் – நிர்வாக ஆசிரியர். கதை, கவிதை, கட்டுரை, புதிய எழுத்தாளர்கள் அறிமுகம்,  பதிப்பகத்தின் குறிப்பிடத்தக்க நூல் வெளியீடுகள் குறித்த விவரங்கள் என பல பகுதிகளைக் கொண்டதாக அமையும் புதுப்புனல் இதழுக்கு படைப்புகள் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடிதம் எழுதவும் அல்லது கீழ்க்கண்ட கைபேசியைத் தொடர்பு கொள்ளவும்.

•மாதாமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை புதுப்புனல் அலுவலகத்தில் புதுப்புனல் வாசகர் வட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
•சந்தா விவரங்கள் தரப்பட்டுள்ளன.
•விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல் இதழில் இடம்பெறும் படைப்புகள்:

•நிலவில் நடை – மைக்கேல் ஜாக்ஸன் சுயசரிதையிலிருந்து....
•தேசிய எல்லைகளைத் தகர்க்கும் மொழிபெயர்ப்பு –

மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை – ஹேமாங்க் தேசாய்.
(தமிழாக்கம் டாக்டர்.கி.ஜெயராமன் 0
•சதாரா மாலதியின்(இறுதிகால) கவிதைகள்.
•சிறைக்குள் சிந்திக்கும் பெண்கள்- பெண்கைதிகளின் படைப்புகள் சில

சிறுகதைகள்
•ஆற்றுப்படலம் – வசந்ததீபன்
•எஃகு வடம் – பால்நிலவன்
•வண்ணத்துப்பூச்சிகள் கொண்டு செல்லும் இதிகாச நகரம் – இராகவன்
•ஒரு கை சோற்றுக்கி நன்றி சொல்லும் நாய் – இ.வெங்கடேசன்

விலாசம்: புதுப்புனல்
பாத்திமா காம்ப்ளெக்ஸ்
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
முதல் தளம்(ரத்னா கபே எதிரில்)
திருவல்லிக்கேணி
சென்னை – 600 005
கைபேசி:9962376282 (சாந்தி ரவிச்சந்திரன்)

தகவல்:: லதா ராமகிருஷ்ணன்
ramakrishnanlatha@yahoo.com

 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்