விம்பம்| தமிழ் குறுந்திரைப்படப் போட்டி 2008
முடிவுகள்!
- கே.கே.ராஜா -
'விம்பம்'
தமிழ் குறுந்திரைப்பட விழா 2008 நவம்பர் 15 ஆம் திகதி அன்று கிழக்கு லண்டனில்
அமைந்துள்ள
Trinity
Centre
மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
போட்டிக்கென வந்திருந்த 29 படங்களில், முதல் சுற்றில் 19 படங்கள் தெரிவாகின.
இரண்டாவது சுற்றில், அந்த 19 படங்களினுள், 14 படங்கள் மட்டும் தெரிவாகின.
அவற்றினுள் பரிசு பெற்ற 9 படங்களுடன் 'மல்லிகை
வாசம்', 'நட்பில்' ஆகிய படங்களும் சேர்க்கப்பட்டு விழாவில் 11 படங்கள்
திரையிடப்பட்டன
கே. ரதிதரனின் 'வெட்டை', 45 நிமிட முழு நீளப் படமாகையால் போட்டிக்குச்
சேர்க்கப்படவில்லை. ஆயினும், அதன் தரத்தைக்
கருத்திற்கொண்டு இவ்வாண்டிற்கான 'விம்பம்' சிறப்பு விருது இப் படத்திற்கு
வழங்கப்பட்டது.
திரையிடப்பட்ட படங்களின் விபரம்:
01. மல்லிகை வாசம் (20.50 நிமி) - ஸ்ரீபதி சிவனடியார் (இங்கிலாந்து)
02. நீ, இடைவெளி, நான் (20.00 நிமி) - சதாபிரணவன் (பிரான்ஸ்)
03. தண்ணீர் (19.10 நிமி) - ஏ. விமல்ராஜ் (இலங்கை)
04. தீராத விளையாட்டுப் பிள்ளை - (20.00 நிமி) - ஐ.வி. ஜனா (பிரான்ஸ்)
05. விளைவு (19.00 நிமி) - கௌதமன் (இலங்கை)
06. அழகி (2.00 நிமி) - பற்றிக் பத்மநாதன் (கனடா)
07. கால் (20.00 நிமி) - கே. ரதிதரன் (இலங்கை)
08. டஸ்ரர் (18.00 நிமி) - ஜெயரஞ்சினி ஞானதாஸ் (இலங்கை)
09. நட்பில் (20.00 நிமி) - ஜெ. எரிக் தொம்ஸன் (இலங்கை)
10. நத்திங் (14.25 நிமி) - வருண் (இலங்கை)
சிறப்புக் காட்சிக்குத் தெரிவான படம்:
11. வெட்டை (45.00 நிமி) - கே. ரதிதரன் (இலங்கை)
மாற்றுச் சினிமாவிற்கான திடமான தடங்கள்
தமிழ்க் குறுந்திரைப்படங்களின் தயாரிப்பு புதுப்புனலைப்போலப் பெருக்கெடுப்பதும்
உண்டு@ கோடை நதியாய் வரண்டுபோவதும் உண்டு. குறுந்திரைப்படங்களைத்
தயாரிக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடும் வேட்கையோடும் தேடலோடும் தொடங்குகின்ற
பயணங்;கள் ஓரிரு தயாரிப்புக்களிலேயே முடங்கிப்போவதும் உண்டு. குறுந்திரைப்படத்
தயாரிப்பின் கூட்டுழைப்பு, அதிக நேரத்தைச் செலவிடும் நிலை, பொருட்செலவு,
குடும்பச்சுமை, தயாரிப்புக்களுக்கான ஊக்கமின்மை, சந்தைப்படுத்த இயலாமை,
குறுந்திரைப்படங்களுக்கான ரசிகர்கள் இன்மை போன்ற பல்வேறு காரணங்கள் தடைகளாக
அமைகின்றன.
இந்நிலையில் 4ஆவது தமிழ்க் குறுந்திரைப்பட விழாவிற்கு வந்திருந்த
குறுந்திரைப்படங்கள் மிகப் பரந்த தேச எல்லைகளைக் குறித்து நிற்கின்றன. இலங்கை,
இந்தியா, கனடா, லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து
வந்து சேர்ந்த தமிழ்க் குறுந்திரைப்படங்கள், ஆர்வத்தோடு தமிழ்க்
குறுந்திரைப்படங்கள் தயாரிக்கப்படும் நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன.
மிகக் குறுகியகால எல்லைக்குள் ஒரு கருப்பொருளை மையமாகக்கொண்டு, இறுக்கமான கதைப்
பிரதியை ஆக்கி, மிகத் தேர்ந்த நடிகர், நடிகைகளைக் கையாண்டு, நுட்பமான
கமராத்துணையுடன், குறுந்திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது, இத்துறையில் காலடி
எடுத்து வைப்போருக்குப் புதிய சவாலாகவே அமைகின்றது. ஆயினும், இலங்கையில் பல்வேறு
பகுதிகளிலிருந்து நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டு வரும் தமிழ்க்
குறுந்திரைப்படங்கள் மிகப் பிரகாசமான எதிர்காலத்தை உணர்த்தி நிற்கின்றன.
குறுந்திரைப்படங்களின் இலக்கணத்தைச் செம்மையாக அறிந்து, மேற்கொண்ட நல்ல
அறுவடைகளாகவே இவை திகழ்கின்றன. தமிழ்க்
குறுந்திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு ‘விம்பம்’ ஆக்கமும்
ஊக்கமும் தரும் அமைப்பாகச் செயற்பட்டு வந்திருக்கிறது. தமிழ்க்
குறுந்திரைப்படங்களுக்கான பரந்த ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்குவதிலும்,
இப்படங்களை உலகு தழுவிய
அளவில் எடுத்துச் செல்வதற்கும் விம்பம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த எங்களின் முயற்சிக்குத் தொடர்ந்து
ஒத்துழைப்பை நல்கி வரும் சகல குறுந்திரைப்படக் கலைஞர்களுக்கும் எங்கள் நன்றிகளைத்
தெரிவிக்கின்றோம்.
மாற்றுச் சினிமாவினை அமைப்பதற்கான திடமான தடங்களை இன்றைய விழாவில்
கலந்துகொண்டிருக்கும், இலங்கையில் இருந்து வந்த தமிழ்க் குறுந்திரைப்படங்கள்
கொண்டிருக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
விருது பெற்ற படங்கள்:
விம்பம் 2008 சிறப்பு விருது
கே. ரதிதரன் 'வெட்டை' (இலங்கை)
(விருது வழங்கல்: லைகா மோபைல் சார்பாக திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா)
மிகச் சிறந்த திரைப் படம்
'டஸ்ரர்' - ஜெயரஞ்சினி ஞானதாஸ் (இலங்கை)
(விருது வழங்கல்: இ. பத்மநாபஐயர் - ஏ. ஜே. கனகரட்னா நினைவு விருது)
சிறந்த புலம்பெயர் திரைப் படம்
'அழகி' - பற்றிக் பத்மநாதன் (கனடா)
(விருது வழங்கல்: மீனாள் நித்தியானந்தன் - கலைஒளி முத்தையாபிள்ளை நினைவு விருது)
சிறந்த இயக்குநர்
'தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்' - ஐ. வி. ஜனா (பிரான்ஸ்)
(விருது வழங்கல்: ரில்கோ எஸ்ரேட்ஸ் - தில்லையம்பலம் தவராஜா நினைவு விருது)
சிறந்த தொகுப்பாளர்
'கால்' - சத்யன் (இலங்கை)
(விருது வழங்கல்: சரவணபவன், பார்ட்டி பரடைஸ் சார்பாக திருமதி கருணா சேனாதிராஜா)
சிறந்த ஒளிப்பதிவாளர்
'தண்ணீர்' - தயா சூரியாராச்சி (இலங்கை)
(விருது வழங்கல்: ஸ்ரேசன் சுப்பர் ஸ்ரோர்ஸ் சார்பாக - திரு நயினை நாகேஸ்வரன்)
சிறந்த திரைப் பிரதி
'நத்திங்' - வருண் (இலங்கை)
(விருது வழங்கல்: எஸ். ராஜேஸ்குமார் - ஓவியர் அ. மாற்கு நினைவு விருது)
சிறந்த நடிகை
'விளைவு' - ஜெயரஞ்சினி ஞானதாஸ் (இலங்கை)
(விருது வழங்கல்: நா. சபேசன் - சிவகங்கை நாகலிங்கம் நினைவு விருது)
சிறந்த நடிகர்
'நீ இடைவெளி நான்' - சதா பிரணவன் (பிரான்ஸ்)
(விருது வழங்கல்: மு. நித்தியானந்தன் - பேராசிரியர் க. கைலாசபதி நினைவு விருது)
சிறந்த குழந்தை நட்சத்திரம்
'டஸ்ரா' - ரஜபீன் முஹமட் (இலங்கை)
(விருது வழங்கல்: நவஜோதி யோகரட்ணம் - எஸ். அகஸ்தியர் நினைவு விருது)
KKRAJAH2001@aol.com
நிகழ்வுகள்!
லண்டனில் 4வது தமிழ் குறுந்திரைப்பட விழா
2008. - நவஜோதி யோகரட்ணம்
'மாற்று சினிமாவினை உருவாக்குவதற்கான திடமான தடங்களை இலங்கையில் இருந்து வந்த
தமிழ் குறுந்திரைப்படங்கள்
கொண்டிருக்கின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. குறுந்திரைப்படங்களின்
இலக்கணத்தை செம்மையாக அறிந்து
மேற்கொண்ட நல்ல அறுவடைகளாகவே இவை திகழ்கின்றன.
கே.ரதிதரனின் ‘கால்', ‘ வெட்டை’, ஜெயறஞ்; சினி ஞானதாஸின் ‘டஸ்ரர்’, ஏ.விமல்ராஜின்
‘தண்ணீர்’, கௌதமனின் ‘விளைவு’,
வருணின் ‘ழேவாiபெ’ ஆகிய குறுந்திரைப்படங்கள் ஈழத்தின் மாற்று சினிமாவிற்கான அழகிய
தடங்களைப் பதித்திருக்கின்றன| என்று
மு.நித்தியானந்தன் லண்டனில் சென்ற சனியன்று (15.10.2008) இடம்பெற்ற விம்பத்தின்
குறுந்திரைப்பட விழாவில் கலந்துகொண்டு
உரையாற்றுகையில் தெரிவித்தார்.
'இந்திய திரைப்பட ஆதிக்கத்தில் இருந்து சிங்கள சினிமா போராடி தனது தனித்துவத்தை
நிலை நிறுத்தியிருக்கிறது. சுதந்திரத்திற்கு
முற்பட்ட காலத்தில் கதைகள், தொழில்நுட்பம், இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள்
ஆகிய அனைத்துக்கும் சென்னையை நம்பியிருந்த
நிலையிலிருந்து பாரதூரமான வளர்ச்சிகளை சிங்கள சினிமா கண்டிருக்கிறது.
தர்மசேனா பத்திராஜா, பிரசன்ன வித்தானகே, அசோகா ஹங்ககம ஆகிய சிங்கள திரைப்பட
இயக்குநர்கள் சர்வதேச அரங்கில் இன்று
சிங்கள திரைப்படங்களை முன் நிறுத்தியிருக்கிறார்கள். புகலிட நாடுகளில்
மேற்கொள்ளப்படும் திரைப்பட முயற்சிகள் இன்னும்
தென்னிந்திய தாக்கத்திலிருந்து விடுபட்டதாக தெரியவில்லை.
லண்டனில் தயாரான மனுவேல்பிள்ளையின் ‘ஒரு இதயத்திலே’ , புதியவனின் ‘மாற்று’,
‘கனவுகள் நிஜமானால்’, ‘மண்’ ஆகிய
திரைப்படங்கள் ஒரு வளர்ச்சி நிலையைக் காட்டி நிற்கின்றன. ஆயினும் இலங்கைக்
கதாபாத்திரங்கள் தென்னிந்தியத் தமிழில் உரையாடும்
நிலைமையை இன்றும் எமது சினிமா முயற்சிகளில் விடுபடவில்லை என்பது கசப்பானதாகும்.
எமது பிரச்சனைகளை எமது
மொழிகளிலே பேசுவதற்கு என்ன தடைகள் என்பது புரியாத புதிராக உள்ளது. நமது மொழியில்
பேசப்படாத ஒரு சினிமா
அனாவசியமானது| என்று மு. நித்தியானந்தன் மேலும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இவ்விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ‘சித்திரா’ தொலைக்காட்சி தொடர் நாடக
இயக்குநர் திரு.என்.ராதா உரையாற்றும்போது,
150 தொடருக்கு மேலாக காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சித்திரா நாடகம் தொழில்
நுட்ப சிக்கல்கள் காரணமாகவே இந்திய பேச்சு
மொழியினை கையாள நேர்ந்ததென்றும்இ இந்த பிரமாண்டமான முயற்சிக்கு தான்
பிள்ளையார்சுழி போட்டு ஆரம்பித்து
வைத்திருப்பதாகவும்இ அடுத்த கட்டத்தில் இதை மேலும் முன்னெடுப்பதற்கான தடத்தினை
விட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.
பெரும் பொருட் செலவிலும்இ கலைஞர்களின் பெரும் ஒத்துழைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள
இத்தொடர்;நாடகம் பெரும்
சிரமங்களுக்கூடாகவே சாத்தியப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை, இந்தியா, கனடா, லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ் ஆகிய
நாடுகளிலிருந்து 29 தமிழ் குறுந்திரைப்படங்கள்
விம்பம் நடாத்திய 2008 ஆம் ஆண்டிற்கான குறுந்திரைப்பட விழாவில் கலந்துகொண்டன.
இந்த குறுந்திரைப்பட விழாவில் 11
குறுந்திரைப் படங்கள் திரையிடப்பட்டன.
செல்வி. சுரேனி கிருஷ்ணராஜா தனது வரவேற்புரையில் தமிழ் குறுந்திரைப்படங்களுக்கான
ஒரு அரங்க மேடையாக இன்றைய விழா
அமைகிறது என்றும் திihப்படத் தயாரிப்பாளர்கள் எவ்வித விளம்பர, வெளியீட்டு
செலவுகள் எதுவுமின்றி திரையிடுவதற்கு இவ்விழா
வசதியாக அமைந்துள்ளது| என்று குறிப்பிட்டார்.
இந்த குறுந்திரைப்பட விழாவினை அரங்க நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக லண்டன் தமிழ்
வானொலி இயக்குநர் திரு. நடாமோகன் நடாத்தி
வைத்தார்.
இவ்விழாவில் சிறிபதி சிவனடியார் இயக்கிய ‘மல்லிகை வாசம், சதா பிரணவன் இயக்கிய ‘நீ
இடைவெளி நான்’ இ ஏ.விமல்ராஜின்
‘தண்ணீர்’, ஐ.வி.ஜனாவின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, பற்றிக் பத்மநாதனின்
‘அழகி’, கே.ரதிதரனின் ‘கால்’, ஜெயரஞ்சினி
ஞானதாசின் ‘டஸ்ரர்’, ஜே.எரிக் தொம்சனின் ‘நட்பில்’, வருணின் ‘ழேவாiபெ’ ஆகிய
திரைப்படங்கள் திரையிடப்பட்டன. விசேட காட்சியாக
கே.ரதிதரனின் ‘வெட்டை’ திரையிடப்பட்டது.
விருது பெற்ற திரைப்படங்களின் பெயர்களை அறிவித்த ஓவியர் கே.கிருஷ்ணராஜா கடந்த 5
ஆண்டுகளில் தமிழ் குறுந்திரைப்பட
வளர்ச்சியில் கணிசமான வளர்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கிறது என்று நம்பிக்கை
தெரிவித்தார்.
தில்லையம்பலம் தவராஜா நினைவு விருது சிறந்த நடிகருக்காகவும்இ சிவகங்கை
நாகலிங்கத்தின் நினைவு விருது சிறந்த
நடிகைக்காகவும்இ கலைஒளி முத்தையாப்பிள்ளை விருது சிறந்த புகலிட
திரைப்படத்துக்காகவும்இ ஏ.ஜே.கனகரட்ன விருது இலங்கையில்
சிறந்த குறுந்திரைப்படத்துக்கும் வழங்கப்பட்டது.
'பரிசு ஒரு அடையாளமே தவிர அதுவே முடிந்த முடிவாகவும் கருதப்படுவதில்லை.
தேர்வாளர்கள் சில வரைபுகளின்படியும்இ தமது
ரசனை அடிப்படையிலும் தெரிவு செய்கிறார்கள். வேறு சில தேர்வாளர்களாயின் வேறு
படங்களைத் தெரிவு செய்யும் சாத்தியமும்
உண்டு. குறுந்திரைப்படங்கள் பலரது கூட்டு முயற்சியோடு தமக்கான முதலீடுகளையும்
கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு
சான்றிதழ்களுடன் பரிசுத் தொகையையும் வழங்குவது அவர்களுக்கு ஆர்வத்தை அளிக்கலாம்'
என்று மு. புஷ்பராஜன் இக் குறுந்திரைப்பட
விழா மலரில் தெரிவித்திருக்கிறார்.
திரைப்படத்துறை, திரைப்படங்கள் முக்கியமான கலாச்சார ஊடகமென்றும் உள்ளுர்
திரைப்படத் தயாரிப்பிற்கான முயற்சிகளை தான்
பெரிதும் ஊக்குவிப்பதாகவும் விம்பம் நடாத்தும் இக் குறுந்திரைப்பட விழா தமிழ்த்
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உண்மையான
ஊக்குவிப்பை வழங்குகின்றதென்று பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீவன்
ரிம்ஸ் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.
நிறைந்த ரசிகர்கள் நள்ளிரவு தாண்டிய பின்னரும் இக்குறுந்திரைப்படங்களை பார்த்து
மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
படப்பிடிப்பு: எஸ். சாந்தகுணம் (விம்பம்)
KKRAJAH2001@aol.com |