| 
  வெளிவருகிறது: தமிழியல் ஆராய்ச்சிக்காக புதிய 
  பனுவல் ஆய்விதழ் 
  இரா. 
  சீனிவாசன் அவர்கள் சென்ற ஆண்டிலிருந்து புதிய பனுவல் என்னும், காலாண்டிதழாக 
  வெளிவரும் இணைய ஆய்விதழொன்றினை வெளியிட்டு வருகின்றார். தமிழ் மற்றும் ஆங்கிலம் 
  ஆகிய இரு மொழிகளிலும் வெளிவரும் மேற்படி இதழில் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு 
  பிரிவுகளையும் சேர்ந்த ( சங்க , நவீன,  நாட்டார் வழக்காற்றியல் மற்றும் 
  மொழிபெயர்ப்பு போன்ற ) ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும். இவ்விதழின் ஆசிரியராக இரா. 
  சீனிவாசன் செயற்பட்டு வருகின்றார். இணையத்தில் இவ்விதழினை இலவசமாக வாசிக்க 
  முடியும். மேற்படி இதழிலுக்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் 
  panuval@gmail.com, rajavelu.srinivasan@gmail.com 
  அல்லது 
  vasan1964@yahoo.com என்னும் மின்னஞ்சல் 
  வழியாக அனுப்பலாம். அல்லது தங்களது கட்டுரைகளைக் கீழுள்ள முகவரிக்கு அனுப்பலாம்: 
 இரா. சீனிவாசன்
 தமிழ் இணைப்பேராசிரியர்
 மாநிலக்கல்லூரி
 சென்னை - 600 005
 
 மேற்படி இதழில் இணையத்தள முகவரி: 
  http://www.indianfolklore.org/journals/index.php/panu
 
  Current Issue: Volume 2, Number 1 (2010):http://www.indianfolklore.org/journals/index.php/Panu/issue/view/81 
  தகவல்: இரா சீனிவாசன்panuval@gmail.com
 |