பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
தகவல்! |
பெண் எழுத்தாளர் லக்சுமி வீட்டில் ஆவணங்கள்
திருட்டு!
- யோகன் கண்ணமுத்து -
பிரான்சிலிருந்து
நீண்டகாலமாக வெளியாகும் பிரபல இலக்கியச் சஞ்சிகையான உயிர் நிழல் ஆசிரியர் லக்சுமி
அவர்களின் வீட்டில் அவர் இல்லாத சமயம் கதவுகள் உடைக்கப்பட்டு மிக முக்கியமான
ஆவணங்கள் திருடப்பட்டதோடு பல உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இவர் கடந்த இருபது
ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பாவில் இடம் பெற்று வரும் முக்கியமான அரசியல், சமூக
மற்றும் கலாச்சார நிகழ்வுகளைத் தாமே நேரில் சென்று பதிவு செய்து அவற்றை
ஆவணப்படுத்தி வருபவர். ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் பிரசித்தமான அளவில்
வளர்ச்சியடைந்துள்ள புலம் பெயர் எழுத்தாளர்களின் சந்திப்புகளை இலக்கியச் சந்திப்பு
என்ற பெயரில் நடாத்தி வரும் அமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இதுவரை 33 இலக்கியச்
சந்திப்புகள் இடம்பெற்றள்ளன. இவற்றைத் தவறாமல் ஒலி. ஓளி
நாடாக்களில் பதிவு செய்து வைத்திருப்பவர். அது மட்டுமல்லாமல் ஐரோப்பா மற்றும்
கனடாவின் முக்கிய நகரங்களில் இடம்பெற்ற
முக்கியமான அரசியல் மற்றும் பல கருத்தரங்குகளின் நிகழ்வுகளையும் பதிவு செய்து
வைத்துள்ளார்.
இவரால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் பல இலங்கையின் ஜனநாயக மாற்றத்திற்காக குரல்
கொடுத்து வரும் எழுத்தாளர்,
பத்திரிகையாளர், கல்விமான்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்
பலரின் கருத்துக்களின் தொகுப்பாக உள்ளது.
குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் காணப்படும் ஜனநாயக விரோத சூழலை மாற்றி அமைக்கக்
கோரியும், மனித உரிமையை நிலை
நாட்டக் கோரியும் குரல் கொடுப்போரின் கருத்துக்கள் பதிவாகி உள்ளன. அத்துடன் இக்
கூட்டங்களில் உற்சாகத்தோடு பங்கு பற்றி
அவற்றை வளர்த்து வரும் பல குடும்பங்களின் விபரங்களும் உள்ளன. தற்போது நாட்டில்
காணப்படும் வன்முறைச் சூழலும், ஜனநாயக கருத்துக்கொண்டோருக்கு எதிராக
மேற்கொள்ளப்படும் தாக்குதல்களும் பலரும் அறிந்ததே. இந்த நிலமைகள் தற்போது
புலம்பெயர் நாடுகளில் பரவும் அபாயம் காணப்படுகிறது. ஜனநாயகத்தையும், கருத்துச்
சுதந்திரத்தையும் நேசிப்போர் இத்தகைய சம்பவங்களுக்கு எதிராகக் எழுதவும், குரல்
கொடுக்கவும் முன்வர வேண்டுமென வேண்டுகிறோம்.
யோகன் கண்ணமுத்து.
ashokyogan@hotmail.com |
|
©
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|