தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் 
              சங்கம் நடத்தும் 'கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி'! -நா. 
              முத்துநிலவன் -
              
               தமிழ்நாடு 
              முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், 
              மாபெரும் எழுத்தாளரும், இங்கு எங்களுடன் பல்லாண்டுகள் வாழ்ந்து 
              இரண்டாண்டுக்கு முன் மறைந்தவருமான கவிஞர் கந்தர்வன் அவர்களின் 
              நினைவாக ஒரு பெரும் சிறுகதைப்போட்டியை நடத்திடத் 
              திட்டமிட்டிருக்கிறோம்.
தமிழ்நாடு 
              முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், 
              மாபெரும் எழுத்தாளரும், இங்கு எங்களுடன் பல்லாண்டுகள் வாழ்ந்து 
              இரண்டாண்டுக்கு முன் மறைந்தவருமான கவிஞர் கந்தர்வன் அவர்களின் 
              நினைவாக ஒரு பெரும் சிறுகதைப்போட்டியை நடத்திடத் 
              திட்டமிட்டிருக்கிறோம்.
              
              ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 2007-மார்ச்-20ஆம் 
              தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
              படைப்பாளியின் சொந்தக் கற்பனையாகவும் எதிலும் வெளிவராததாகவும் 
              இருக்கவேண்டும். பக்க, உள்ளடக்க வரையறை இல்லை.  நடுவர் குழுவால் 
              தேர்வு பெற்ற கதைகள், நூலாக வெளியிடப்படும். புதுக்கோட்டையில் 
              நிகழும் வண்ணமிகு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
              
              முதல் பரிசு ரூ.5,000
              இரண்டாம் பரிசு ரூ.3,000
              மூன்றாம் பரிசு ரூ.2.000
              
              கதைகளை அனுப்ப அஞ்சல்/மின்னஞ்சல் முகவரி:
              
              நா.முத்து நிலவன்,
              (மாநிலத் துணைப் பொதுச்செயலர்-தமுஎச),
              96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
              மச்சுவாடி - அஞ்சல்,
              புதுக்கோட்டை-622 004 - தமிழ் நாடு.
              மின்னஞ்சல்:naamuthunilavan@yahoo.co.in 
              செல்பேசி: 94431-93293.
              
              இவண்:
              அருணன், ச.தமிழ்ச்செல்வன்,
              மாநிலத்தலைவர். மாநிலப் பொதுச்செயலர்.
              தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 
              மாநிலக்குழு.57/11-மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி- 
              மதுரை-625001
              
              தகவல்: நா. முத்துநிலவன்
              
              naamuthunilavan@yahoo.co.in



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




