அக்டோபரிலிருந்து 'அகநாழிகை'!
சிற்றிலக்கிய வானில் மற்றுமொரு மின்னல்!
தோழமை உள்ளங்களுக்கு, வணக்கம். ‘அகநாழிகை‘ இலக்கிய இதழ் அக்டோபர் 2009 முதல்
வெளிவர உள்ளது. Double Demy 1x8 அளவில் அச்சில் இரு மாதத்திற்கொரு முறை வெளிவர
இருக்கும் இந்த பத்திரிகையில், சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்து பிரிவுகளில்
படைப்புகள் வர உள்ளன. இதழ் தொடர்பான உங்கள் மேலான கருத்துக்களையும், படைப்புகள்,
சந்தா, விளம்பரம் என பத்திரிகை தொடர்ந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகளையும்
ஏற்படுத்தி தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.சந்தா மற்றும் விளம்பரக்
கட்டணம் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வரும் பதிவுகளில் அறிவிக்கப்படும்.
படைப்புகள், சந்தா மற்றும் விளம்பரத் தொடர்புகளுக்கு :
அகநாழிகை
(சமூக கலை இலக்கிய இதழ்)
விலை : ரூ.25
ஆண்டுச் சந்தா: 150
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
முகவரி :
அகநாழிகை-பொன்.வாசுதேவன்,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம்-603 306.
கைப்பேசி : 99945 41010
பொன்.வாசுதேவன்,
பேச : 999 454 1010
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
வலைத்தளம் : http://www.aganazhigai.com
தகவல்:
aganazhigai@gmail.com
'அகநாழிகை' பற்றி உயிர்மை இதழில் வெளிவந்த
அறிமுகக் கட்டுரை:
சிற்றிலக்கிய உலகில் ஓர் புது வரவு !
- பாண்டியன் -
தலையங்கம் மற்றும் தன் நோக்கம் இதுதான் என்ற பிரகடனம் ஏதும் இல்லாமல், இதில்
வெளியாகும் படைப்புக்களே அதையெல்லாம் பறைசாற்றிவிடும் என்ற நம்பிக்கையுடன்
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று ‘தமிழ் அரங்கம் என்றும் வற்றாத சுரங்கம்‘
என்பதை நிரூபிக்கும்வகையில் பக்கங்கள் (68 பக்கம்- ஏ4 அளவு) நிறைய
படைப்புக்களுடன் உதயமாகியிருக்கிறது ‘அகநாழிகை‘.
பாவண்ணன், யுவன் சந்திரசேகர், எஸ்.செந்தில்குமார் என, சிற்றிதழ்களில் அதிகம்
எழுதும் படைப்பாளர்களின் ஏழு சிறுகதைகள், தமிழ்நதி, லீனா மணிமேகலை, சுதீர்
செந்தில் என விரியும் 30 கவிஞர்களின் ஆக்கங்கள், ஏழு கட்டுரைகள் - கனமான
‘சிற்றிதழ்‘தான்!
‘தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும்‘ என்ற கட்டுரை 1980முதல் 1990
வரையிலான தமிழ் சினிமாவின் நிலையை விவரிக்கிறது. பதினாறுவயதினிலே முதல் தமிழ்
சினிமா ஏறிய சிகரங்களையும் பின்னர் அது கண்ட பாதாளத்தையும் நுணுக்கமாக
விவரித்திருக்கிறார் அஜயன்பாலா சித்தார்த். சினிமா ரசனையாளர்கள் அனைவரும்
படிக்கவேண்டிய கட்டுரை.
ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் என்ற கட்டுரையை வே.அலெக்ஸ் எழுதியிருக்கிறார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக முதன் முதலாக இந்திய (காலனிய இந்தியா) தேசிய
அளவிலான இயக்கத்திற்கு வித்திட்டவர், இத்தேசத்தின் முதல் தலித் அரசுப்
பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்தவர், முதல் பாராளுமன்ற உறுப்பினராக (1925இல்) பதவி
வகித்தவர் - பெருந்தலைவர் எம்.சி.ராஜா. இவரது பாராளுமன்ற உரையை
கட்டுரையாக்கியிருக்கிறார். (ஒடுக்கப்பட்ட இனத்தவரின் நிலையைப் பற்றி சிந்திப்பதே
கொடூரமானது. நாட்டின் ஒரு பகுதி மக்களை மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே
நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திடும்வகையில் சட்டங்களை வகுத்து
வைத்துள்ளார்கள்...)
பல கவிதைகள் மனதில் நிற்கின்றன. . .
எழுத வேண்டும்
எழுதியே தீர வேண்டும்
எனினும்
பின்மழைப் பொழுதுகளில்
கேட்டு ரசித்த புல்லாங்குழலிசை
காகிதங்களில் வசிப்பதில்லை.
இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல, படிப்போர் நெஞ்சங்களிலெல்லாம் நிலைத்துநின்று
சாதனை படைக்கக் காத்திருக்கும் ‘அகநாழிகை‘ யை வாழ்த்தி வரவேற்போம்.
நன்றி:
http://www.aganazhigai.com |