| 
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்Tamil Writers’ Association of Canada
 4/2800 Eglington Avenue, Scarborough,On. M1J 2C8
 Reg. #: 001101116
 15வது ஆண்டு விழாவும் ஆக்கங்களுக்கான விருதுகளும் வழங்குதலும்
 
 கனடிய 
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக கனடா எழுத்தாளர் இணையம் விருது வழங்குவதற்கான 
விண்ணப்பங்களைக் கோருகின்றது. பின்வரும் விதிமுறைகளுக்கு அமைய விருதும் 
பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. 
 1. கனடாவில் நிரந்தர வதிவுரிமையைக் கொண்டுள்ள எழுத்தாளர்களின் படைப்புக்களாக 
இருக்கவேண்டும். (இணையத்தின் உறுப்பினர் அல்லாதோரும் பங்குகொள்ளலாம்)
 
2. முன்னுரை, பதிப்புரை, அணிந்துரை போன்றன நீங்கலாக 
நூல் (விடையதானம்) சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை குறைந்தது 100  
பக்கங்களையாவது கொண்டிருத்தல் வேண்டும் (சிறுவர் இலக்கியத்திற்கு இந்த நிபந்தனை 
இல்லை.) 
3. 2000 ஆண்டோ அல்;லது அதற்குப் பின்னரோ 
வெளியிடப்பட்ட நூலாக இருத்தல் வேண்டும் 
4. ஒருவர் எத்தனை ஆக்கங்களையும் அனுப்பலாம். 
 
5. இணையத்தின் தலைவர், செயலாளர் இப்போட்டிகளில் 
பங்குபற்ற முடியாது. ஏனைய இணைய உறுப்பினர்கள் பங்குபற்றுவதற்கு உரித்துடையவராவர்.
 
6. எழுத்தாளர்கள் தங்கள் நூல்களில் மூன்று பிரதிகளை 
அஞ்சலிலோ அன்றி நேரடியாகவோ ஒப்படைத்தல் வேண்டும். 
7. நூல்கள் கிடைக்கவேண்டிய இறுதித்திகதி 10.09.2008
 தெரிவு செய்யப்படும் ஆக்கத்திற்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படும். 
நடுவர்களின் முடிவே இறுதியானது.
 
எழுத்தாளர் இணையம் ஆரம்பிக்கப்பட்டு 15வது ஆண்டு 
விழாமலருக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் தங்கள் ஆக்கங்களை மின்னஞ்சலில் 
அனுப்பலாம்:rajmeerar@yahoo.ca அல்லது 
thangarsivapal@yahoo.ca
 விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
 
த.சிவபாலு தலைவர்4/2800 Eglington Avenue, Scarborough,On. M1J 2C8 (416-546-1394)
 
மேலதிக விபரங்களுக்கு: திருமதி;, இராஜ்மீரா இராசையா, 
செயலாளர் 416-261-1348
 thangarsivapal@yahoo.ca
 |