திருமறைக்கலா மன்றத்தின் மாதாந்த இலக்கிய
கருத்தரங்க நிகழ்வுகள்!
- மட்டுவில்
ஞானகுமாரன் -
ஜனவரி
நிகழ்வு: திருமறைக்கலா மன்றத்தின்
கொழும்புக்கிழையினர் மாதந்தோறும் பௌர்ணமி
தினத்தன்று நடாத்துகின்ற இலக்கிய
கருத்தரங்கானது 29.01. 2010
வெள்ளியன்று நடைபெற்றது. திருமறைக்கலா
மன்ற கொழும்புக்கிழையினரால்
நடாத்தப்பட்டது. திருவாளர் பீற்றர்
அம்றோஸ் நிகழ்வுக்கு தலமை தாங்க
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சிறுமிகள்
இசைக்க இலக்கிய அமர்வு ஆரம்பமானது.
மறைந்த
சங்கீத மேதை சங்கீத பூசணம் போல்
திலகநாயகம் அவர்களின் மறைவுக்கு வணக்கம்
செலுத்து முகமாக
அவரது இனிய நினைவுகளை உயிர்போடு பகிர்ந்து
கொண்டார் பிரபல சங்கீத வித்துவான் ர்.யு
கருணாகரன். தொடர்ந்து
அந்நிகழ்வுக்கு சிறப்பு பேச்சாளனாக கலந்து
கொண்டு “ கவிதைகளின் கதை “ எனும் பொருளிலே
கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்
உரையாற்றினார். அங்கு கூடியிருந்த
இளைஞர்கள் கூட்டத்தை தனது பேச்சாற்றலால்
கவர்ந்த அவரது பேச்சை தாயக சஞ்சிகையின்
ஆசியரும் தேசிய கலை இலக்கியப்பேரவையின்
பிரமுகருமான வழக்கறிஞர் ;;;; தேவராஜா
வழக்கறிஞர் சேனாதிராஜா மற்றும் மேமன்
கவி ஆகியோரும் பாரட்டிப்பேசினார்.
அண்மையில் மறைந்த இலக்கியவாதியான மாவை
வரோதயனின் படத்தைத் தாங்கி வந்த தாயகம்
சஞ்சிகையின் அக்டோபர் டிசம்பர் மாத இதழில்
வெளி வந்த சிறுகதைகளை பிரபல எழுத்தாளர்
மேமன் கவியும் அவற்றிலே வெளிவந்த கவிதைகளை
வழக்கறிஞரும் எழுத்தாளருமான திரு இரா
சடாகோபனும் ஆய்வு செய்தனர். நன்றி
உரையை ஊடகவியலாளரும் நதி சஞ்சிகையின்
ஆசிரியருமான திரு லோசன் ஆற்றியிருந்தார்.
திரைப்பட
நடிகர் செந்தில்குமார் கவிஞர் மன்னார்
அமுதன் உட்பட பலரும் கலந்து கொண்டு
உரையாற்றி இருந்ததுடன் பெருமளவான
பார்வையாளர்களும் கலந்து கொண்டு தமது
கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர்.
பெப்ருவரி: நிகழ்வு: திருமறைக்கலா
மன்றத்தின் இலக்கிய கருத்தரங்கானது
28.02.2010 ஞாயிறன்று நடைபெற்றது.
திருமறைக் கலாமன்ற கொழும்புக்கிழையினரால்
நடாத்தப்பட்ட இந்நிகழ்வுக்கு கவிஞர் மேமன்
கவி தலமை தாங்கினார் திருமறைக்கலா
மன்றத்தின் கொழும்புக்கிழையின்
ஒருங்கிணைப்பாளர் பீற்றர் அம்றோஸ்
வரவேற்புரையை நிகழ்த்த மறைந்த கலைஞர்களான
இளவாலை அமுதுப்புலவர் பல்கலை வித்தகர்
சிறீதர் பிச்சையப்பா மற்றும் கலைஞர்
மணிமேகலை அகியோர்களின் மறைவுக்கு அமைதி
வணக்கம் செலுத்தப்பட்டதுடன் அவர்கள்
பற்றிய நினைவுகளை கொழுந்து இதழ்
ஆசிரியரும் நாடகவியலாளருமான அந்தனி
ஜீவாவும் மேமன் கவியும் பகிர்ந்து
கொண்டனர்.
தொடர்ந்து
அந் நிகழ்வின் முக்கிய அம்சமாக மல்லிகை
இதழின் 45வது இதழ் பற்றிய ஆய்வரங்கும்
இடம் பெற்றது. மல்லிகையின் 45வது இதழிலே
இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பற்றிய பார்வையை
வானொலி நாடக கலைஞர் திருவாளர்
பொன்னுத்துரை ஆற்ற அதிலே இடம் பெற்ற சிறு
கதைகளை வழக்கறிஞரும் எழுத்தாளருமான
சேனாதிராஐhவும் அவ் இதழிலே இடம் பெற்ற
கவிதைகளைப்பற்றி ஆய்வினை கவிஞர் மட்டுவில்
ஞானக்குமாரனும் ஆற்றியிருந்தனர். தமிழ்
நாட்டிலிருந்து வந்து சிறப்பித்த
செங்கதிர் ஆசிரியர் திரு த. கோபாலகிஸ்ணன்
சிறப்புரையுடன் மல்லிகை ஆசிரியர் இறுதியாக
தனது ஏற்புரையை ஆற்றியிருந்தார்.
எழுத்தாளர்
சித்தன் திரைப்பட நடிகர் செந்தில்குமார்
கவிஞர் மன்னார் அமுதன் உட்பட பலரும்
கலந்து கொண்டு உரையாற்றி இருந்ததுடன்
பெருமளவான பார்வையாளர்களும் கலந்து கொண்டு
தமது கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர்.
maduvilan@hotmail.com