மயிலாடுதுறை: மார்ச்
6,7 & 8 !
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் தமிழ்ச் செம்மொழித் திட்ட
நல்கையில் "உலகப்பண்பாட்டிற்குத் தமிழ்ப்
பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு'!
பன்னாட்டுக் கருத்தரங்கு அழைப்பிதழ்!
இந்தியமொழிகளின்
நடுவண் நிறுவனம், மைசூர், தமிழ்ச் செம்மொழித் திட்ட நிதி நல்கையில் உலகப்
பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இலக்கியங்களின் பங்களிப்பு என்னும்
பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் எதிர்வரும் மார்ச்சுத் திங்கள் 6,7,8 ஆகிய
மூன்று நாட்கள் மயிலாடுதுறை மன்னம்பந்தல் அ.வ.அ.(AVC)கல்லூரி (தன்னாட்சி)
நடைபெறுகின்றது. இதில் 78 பேராளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடு அ.வ.அ. கல்லூரித் தமிழாய்வுத் துறை செய்துவருகின்றது.
இவ்விழாவின் தொடக்க நிகழ்வில்(06.03.2008 காலை 10.30) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு, தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர்
ச.அகத்தியலிங்கம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த் துறைத்
தலைவர் தொ.பரமசிவம், தமிழ்ச் செம்மொழித் திட்டத் தலைவர் முனைவர் க.இராமசாமி ஆகியோர்
கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்விற்கு அ.வ.அ. கல்வி றிறுவனங்களின் செயலர்
தமிழ்த்திரு.சொ.செந்தில்வேல் தலைமை தாங்குகிறார். முதல்வர் முனைவர் மு.வரதராசன்
வரவேற்புரையாற்றுகின்றார். கருத்தரங்கச் செயலர் முனைவர் தி.நெடுஞ்செழியன் நன்றி
கூறுகின்றார்.
நிறைவு விழா நிகழ்வில்(08.03.2008 பிற்பகல் 2.30) பாரதியார் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் முனைவர் க.திருவாசகம், கவிக்கோ அப்துல்ரகுமான், தவத்திரு ஊரன்அடிகள்,
மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் திரு.எஸ்.இராஜகுமார் ஆகியோர்
கலந்துகொள்கிறார்கள். முதல்வர் மு.வரதராசன் தலைமை தாங்குகிறார். தமிழத்துறைத்
தலைவர் பேரா.சா.கிருட்டினமூர்த்தி வரவேற்புரையாற்றுகின்றார். கருத்தரங்கச்செயலர்
முனைவர் தி.நெடுஞ்செழியன் நன்றி கூறுகின்றார்.
06.03.2008 மாலை 6.30 மணியளவில் கருத்தரங்கப் பேராளர்களுக்குக் கல்லூரி
நிர்வாகத்தின் சார்பில் இரவு விருந்து வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வில் முனைவர்
கே.ஏ.குணசேகரனின் தமிழ்ப் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கருத்தரங்கம்
வெற்றிபெற வாழ்த்து அனுப்பும் அயல்நாட்டவர்களின் பெயர்கள் கருத்தரங்கின் வாழ்த்துச்
செய்திகள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
............ நாட்டில் வசிக்கும் ......(பெயர்)..
...... உங்கள் சுருக்கமான வாழ்த்துச் செய்தி... என்று வாழ்த்துகிறேன்.
என்று அனுப்புங்கள்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி: -
tamilthinai@gmail.com
நன்றி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
http://www.ciil.org
தகவல்: ஆல்பேர்ட் , அமெரிக்கா
albertgi@gmail.com |