தமிழ்
ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
நாள்: சனிக்கிழமை (12-06-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம்
எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி: (3 மணி) - களம்
இந்த பகுதியின் இரண்டாவது மாத முயற்சியாக கேமரா பயிற்சி அளிக்கப்படுகிறது. கேமரா
சார்ந்த அனைத்து நுட்பங்களும் செயல்வழிப் பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படும்.
ஆர்வலர்களை கேமராவை இயக்கவைத்து உடனுக்குடன் அவர்களின் குறைகளும் நிவர்த்தி
செய்யப்படும். இந்த மாதம் கேமரா பயிற்சி கொடுக்கவிருப்பவர், ஒளிப்பதிவாளர் திரு.
சி.ஜெ. ராஜ்குமார்.
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், லீனா மணிமேகலை
அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல்
நடைபெறும்.
குறும்படங்களை விருதுகளுக்கு அனுப்புவது தொடர்பான வழிகாட்டல் நடைபெறும்
மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) -
குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
கௌடில்யன் ரமேஷ் 15 நிமிடங்கள்
ராவ் சாஹிப் சர்வோத்தமன் 12 நிமிடங்கள்
எழுத்தாளனின் சமையல் குறிப்புகள் தமிழ் சாமி அய்யா 13 நிமிடங்கள்
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட நடிகர் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள்
சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன்
நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க
உள்ளார்.
இராமகிருஷ்ணன் அவர்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கோரிப்பாளையம் போன்ற
திரைப்படங்களின் கதாநாயகன்ஆவார்.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
thamizhstudio@gmail.com |