அரங்கம் நிறைந்த செல்வி. 
              பிரியங்கா பிரபாகரனின் நாட்டிய அரங்கேற்றம்!   - மாலினி 
              அரவிந்தன் -
              
 சென்ற 
              சனிக்கிழமை (14-08-2010) பதின்னாலாம் திகதி அபிராமி நாட்டியாலயாவின் 
              மாணவியான செல்வி பிரியங்கா பிரபாகரனின் நாட்டிய அரங்கேற்றம் 
              ரொறன்ரோவில் உள்ள சீனகலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக 
              நடந்தேறியது. அரங்கம் நிறைந்திருந்ததால் தாமதமாக வந்த ஆர்வலர்கள் 
              வெளியே காத்திருக்க வேண்டியும் வந்தது. இறை வழிபாட்டினைத் தொடர்ந்து 
              தமிழ்தாய் வாழ்த்து, அமைதி வணக்கம் ஆகியன இடம் பெற்றன. பிரியங்காவின் 
              பாட்டன், பாட்டியான காங்கேசன்துறை, குருவீதியைச் சேர்ந்த திரு. 
              திருமதி செல்வராசா தம்பதியினர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை 
              ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரையை பிரியங்காவின் தந்தையாகிய திரு. 
              செ. பிரபாகரன் தமிழிலும், பிரியங்காவின் சகோதரர் ஆங்கிலத்திலும் 
              நிகழ்த்தினர். துசி ஞானப்பிரகாசம் மிகவும் சிறப்பாக நிகழ்ச்சிகளைத் 
              தமிழிலும், அவ்வப்போது ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கினார்.

              நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும் தரமானதாகவும் அமைந்ததற்குக் கனடாவில் 
              புகழ் பெற்ற பக்கவாத்தியக் கலைஞர்கள் இந்த நடன அரங்கேற்றத்தில் 
              பங்குபற்றியிருந்ததும் ஒரு காரணமாகும். நடனமாது தனது திறமையை 
              அரங்கமேடையில் வெளிப்படுத்துவதற்கு துணை புரிபவர்கள் பின்னணியில் 
              இருக்கும் பக்கவாத்தியக் கலைஞர்களேயாகும். பிரியங்காவின் நடன 
              ஆசிரியையான ஆடலரசி திருமதி. செந்தில்செல்வி சுரேஸ்வரன் நட்டுவாங்கம் 
              செய்ய, சிறந்த பாடகரான இசைக்கலைமணி திரு. வர்ண இராமேஸ்வரன் 
              வாய்ப்பாட்டினைப் பாடினார். திரு. கிரிதரன் சச்சிதானந்தம் மிருதங்கம் 
              வாசிக்க, கலாபிரதீப திரு. ஜெயதேவன் வயலின் இசை வழங்கினார். வேணுகான 
              வாருதி திரு. தயாபரன் செல்வநாயகம் புல்லாங்குழல் இசைத்தார்.
              
              முதல் நிகழ்ச்சியாக புஷ்பாஞ்சலி இடம் 
              பெற்றது. அடுத்து இடம் பெற்ற விநாயகர் ஸ்துதியைத் தொடர்ந்து 
              நிருத்தஸ்வராவளி இடம் பெற்றது. அடுத்து கௌத்துவமும் 
              நிருத்தியோபகாரமும் இடம் பெற்றன. தொடர்ந்து கீர்த்தனம் ரேவதி 
              இராகத்திலும் தொடர்ந்து காம்போதி ராகத்திலும் இடம் பெற்றன. சுட்டும் 
              விழிச் சுடர்தான் என்ற பாரதியார் பாடல் மிகவம் சிறப்பாக 
              அமைந்திருந்தது. எல்லோரும் அறிந்த பாடல் என்பதாலோ அல்லது 
              பிரியங்காவின் , அபிநயத்தாலோ பார்வையாளர்கள் அப்படியே உறைந்து 
              போயிருந்ததை அவதானிக்க முடிந்தது. பாடல் முடிந்தபோது சபையோரின் 
              ஏகோபித்த கரவொலியே அதை உறுதிப்படுத்தியது. தொடர்ந்து பதம் பெஹாக் 
              இராகத்திலும் நிருத்தாங்ககாரம் சண்முகப்பிரியா இராகத்திலும் இடம் 
              பெற்றன. நிகழ்வின் இறுதிக்கட்டமாக மங்களத்துடன் நிகழ்ச்சி இனிதே 
              முடிவுற்றது.
              
              இந்த அரங்கேற்ற நிகழ்வு மிகவும் 
              சிறப்பாக இடம் பெற்றதற்கு முதற் காரணமாக இருந்தவர் அபிராமி 
              நாட்டியாலயாவின் அதிபர் திருமதி செந்தில் செல்வி சுரேஸ்வரன் என்பதை 
              இங்கே கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். மகாஜனக் கல்லூரி பழைய 
              மாணவியான இவர் தனது மாணவியும், அன்றைய நிகழ்வின் நாயகியுமான 
              பிரியங்காவை வாழ்த்தும் போது ‘ஆயகலைகள் அறுபத்தி நான்கினுள் 
              ஆடற்கலையானது கண்களினால் பார்த்து, உள்ளத்தால் லயித்து பார்ப்போர் 
              மனதைப் பரவசமடையச் செய்யும் தன்மை கொண்டது என்றும் ஆடல், இசை என்பன 
              இறைவனின் அருட்கொடைகள் என்றும் இக்கொடைகளை இறைவன் தனது மாணவியான 
              பிரியங்காவிற்கு நன்கு அருளியிருக்கின்றார் என்றும், நடனம் சிறப்பாக 
              அமைய வேண்டுமேயானால் உடலும் உள்ளமும் ஒன்று சேரவேண்டும், 
              பக்தியுடனும், விருப்புடனும், தன்நம்பிக்கையுடனும் மேடையில் 
              ஆடவேண்டும் என்றும் அந்த இலக்கணங்கள் பிரியங்காவிடம் சிறப்பாக 
              அமைந்திருப்பதையும் அவர் எடுத்துக் காட்டிப் பிரியங்காவை 
              வாழ்த்தினார்.
               இந்த 
              அரங்கேற்ற நிகழ்ச்சியைச் சிறந்த நடன ஆசிரியையான திருமதி அனுராதா 
              ஜெகநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். 
              அவர் தனது உரையில் கலையுலகில் சிறந்ததொரு எதிர்காலம் 
              பிரியங்காவிற்காகக் காத்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி மனதார 
              வாழ்த்தினார். அடுத்து உரை நிகழ்த்திய சிறப்பு விருந்தினராக வந்து 
              கலந்து கொண்ட சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி அவர்கள் பிரியங்காவின் கலை 
              ஆர்வத்தை மிகவும் பாராட்டி தொடர்ந்தும் இக்கலைப் பணியைத் தொடர்ந்து, 
              எம்மினத்திற்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும் 
              அவர் வெறும் நடனத்தோடு நின்றுவிடாமல் எமது மண்ணுக்காகவும், 
              மொழிக்காகவும், இனத்திற்காகவும் முடிந்தவரை அர்ப்பணிப்பு செய்ய 
              வேண்டும் என்றும் நடன ஆசிரியரர்களைப் பார்த்துத் தனது ஆதங்கத்தை 
              வெளிப்படுத்தினார். பிரியங்காவின் குருவான செந்தில் செல்வி 
              சுரேஸ்வரனுக்கு ஆடலரசி என்ற பட்டத்தை பெற்றிருக்கும் அவரைப் பற்றி 
              மேற்கொண்டு எதுவும் சொல்ல வேண்டியது இல்லை என்று புகழாரம் 
              சூட்டினார்.

              பிரியங்காவைப் பற்றி நிறையவே குறிப்பிடலாம், பல போட்டி 
              நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி பரிசில்கள் பல பெற்று தனது குருவான 
              செந்தில் செல்வி சுரேஸ்வரனுக்கும், பெற்றோரான திரு. திருமதி 
              பிரபாகரனுக்கும் பெருமை சேர்த்தவர். இவர் பரதநாட்டியத்தில் 
              மட்டுமல்ல, வாய்ப்பாட்டு பிடில் என்பவற்றிலும், தமிழ் மொழியை ஒரு 
              பாடமாக எடுத்து அதிலும் சிறந்து விளங்குகின்றார். பிரியங்காவின் 
              கண்கள் ஆயிரம் கதை சொல்லும் என்று அவரது குருவே ஓரிடத்தில் 
              குறிப்பிடுகின்றார். பிரியங்காவின் தாயாகிய மஞ்சுளா பிரபாகரனும் 
              முறைப்படி நடனம் பயின்றவர் ஆகையால் நடனக்கலை பிரியங்காவிற்கு கைவந்த 
              கலையாக இருக்கிறது.
              
              மேடையில் கலைஞர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு, நடன நிகழ்ச்சியின் 
              இறுதிக் கட்டமாக பிரியங்காவே மேடையில் தோன்றி அனைவருக்கும் நன்றி 
              தெரிவித்தார். செல்வி பிரியங்கா தனது கல்வியிலும், கலைப்பணியிலும் 
              எதிர்காலத்தில் சிறப்புடன் விளங்கி மென்மேலும் உயர்வடைந்து, எங்கள் 
              மண்ணுக்கும், இனத்திற்கும் புகழ் சேர்க்கவேண்டும் என்று நாங்களும் 
              வாழத்துகின்றோம்.
              
              maliniaravinthan@hotmail.com