”சங்க இலக்கியத்தில் மனித நேயம்” 
              
               டாக்டர் கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி[ பாரதிதாசன் 
              பல்கலைக்கழக கல்லூரி ]இலால்குடியில் தமிழ்த்துறைச் சார்பாக முத்தமிழ் 
              மன்றத் தொடக்கவிழாவில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கலந்துகொண்டு 
              ”சங்க இலக்கியத்தில் மனித நேயம்” என்ற தலைப்பில் உரை 
              நிகழ்த்தினார்கள். சங்க இலக்கியத்தில் கூறாதா மனிதநேயச்செய்திகளே 
              இல்லையெனக் கூறலாம் என்றார். மேலும் ஓர் அறிவு உயிர்களுக்குச் செய்த 
              தொண்டுதான் உலகில் அதிகம் பேசப்படுகிறது. அதை சங்க இலக்கியத்தில் 
              பாரி, பேகன் போன்றோர்களின் மூலம் எடுத்துக்காட்டினார். மேலும் 
              வள்ளலாரையும் எடுத்துக்காட்டிப் பேசினார். ஐயாவின் உரை மாணவ 
              மாணவிகளுக்கும் பேராசிரிய பெருமக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தன.

              முதுமனைவர் இரா.இளங்குமரனார் நினைவுப்பரிசினைப் பெறும் காட்சிகள்
              
              முதுமனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு கல்லூரி முதல்வர் திரு 
              தங்க.மதியழகன் நினைவுப்பரிசை வழங்குகிறார். இடமிருந்து வலமாக மாணவர் 
              பிரபு பேராசிரியர்கள் முனைவர் துரை.மணிகண்டன். இரா. ஜெய்சங்கர், 
              இராசா 
              
              முனைவர் துரை. மணிகண்டன் முதுமுனைவர் அவர்களுக்கு நினைவுப் பரிசினை 
              வழங்குகிறார் . அருகில் கல்லூரி முதல்வர் தங்க.மதியழகன்.
              
              தகவல்: முனைவர் மணிகண்டன்
              mkduraimani@gmail.com
              
              கொழும்பு 
              திருமறைக் கலாமன்றத்தின் இலக்கியப் பாசறை வழங்கும் “முழுமதி தின 
              இலக்கிய நிகழ்வு”
              
               தமிழ்மொழி 
              வாழ்த்து: திருமதி மைதிலி டானியல்
தமிழ்மொழி 
              வாழ்த்து: திருமதி மைதிலி டானியல்
              வரவேற்புரை : திரு. அம்புறோஸ் பீட்டர் - இணைப்பாளர்
              
              தலைமையுரை : இலக்கியவாதி திரு.இராஜகுலேந்திரா (சட்டத்தரணி)
              (உரை: நானும், இலக்கியமும்)
              
              விமர்சனப் பார்வை: பூங்காவனம் - இருமாத சிற்றிதழ்
              வழங்குபவர்: மட்டுவில் ஞானக்குமரன்
              
              இன்னிசை : சாஸ்திரிய சங்கீதம்
              வழங்குவர்: திருமதி. மைதிலி டானியல்
              இசை: திரு. டிரோன்
              
              கருத்துக் களம் : ஆர்வலர்களின் கருத்துப் பகிர்வுகள்
              நெறியாள்கை : மன்னார் அமுதன்
              
              காலம் : காலை 10.00 மணி
              நாள் : 24.08.2010 -செவ்வாய் கிழமை
              இடம் : கலாசுரபி மண்டபம், 
              இலக்கம் 57, 5வது ஒழுங்கை, 
              புனித பெனடிக்ட் மாவத்தை, கொழும்பு -13
              
              அனைவரும் வருக ... தழிழ்ச்சுவை பருக .... 
              
              நன்றி
              அன்புடன்
              மன்னார் அமுதன்
              http://amuthan.wordpress.com/
              amujo1984@gmail.com
 
              புகலிட 
              இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
              பதிவு:- சு. குணேஸ்வரன் 
              
               பருத்தித்துறை 
              இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 
              22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் 
              செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி, சுவிஸ் றஞ்சி ஆகியோர் புகலிடத்தின் 
              தற்போதைய இலக்கியச் செயற்பாடுகள் பற்றி விரிவாகப் பேசினர். அவர்கள் 
              தமது உரையில் புகலிட,இலக்கியவாதிகளின் இலக்கிய மற்றும் அரசியற் 
              செயற்பாடுகள், பெண்களின் இலக்கிய சமூகச்,செயற்பாடுகள் பற்றி 
              உரையாற்றினர்.

              நிகழ்வில் தொடக்கவுரையை இலக்கியச்சோலை து. குலசிங்கமும் அறிமுகவுரையை 
              சு. குணேஸ்வரனும் நன்றியுரையை த. அஜந்தகுமாரும் நிகழ்த்தினர். 
              உரையின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வதிரி 
              சி. ரவீந்திரன், குலசிங்கம் குணேஸ்வரன், அஜந்தகுமார், இராகவன், 
              கொற்றை பி. கிருஸ்ணானந்தன், செ. கணேசன் கண.எதிர்வீரசிங்கம் ஆகியோர் 
              கலந்து கொண்டனர். 
              
              இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக போரினால் கணவனை இழந்த பெண்களுக்கு 
              உதவும்பொருட்டு ஒரு தொகைப் பணத்தை பருத்தித்துறை அஞ்சலியகத்தில் 
              ஒப்படைப்பதற்குரிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. பருத்தித்துறை 
              அஞ்சலியகத்தில் வண பிதா டேமியன் அவர்களைச் சந்தித்து புகலிட 
              இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் றஞ்சி சுவிஸ் ரவி ஆகியோர் 
              இன்னொரு தோழி மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு தொகைப் பணத்தை டேமியன் 
              அவர்களிடம் கையளித்தனர். இலக்கிய நட்பின் மூலம் இவ்வாறான சீரிய 
              பணியைச் செய்ய முன்வந்தவர்களை நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் 
              நன்றியுடன் நினைவுகூர்ந்தனர். 
              
              kuneswaran@gmail.com
 
              தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் ஏழாவது பௌர்ணமி இரவு!
              
               செவ்வாய்க்கிழமை, 
              24-08-2010 இரவு 08.30 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 01.30 
              மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை 
              ஏற்பாடு செய்யப்படும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, 
              யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி 
              திரையரங்கம் எதிரில்)

              திரையிடப்படும் படங்கள்:
              தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ஜெயகாந்தன் பற்றிய 
              ஆவணப்படம்.இயக்கம்: ரவி சுப்பிரமணியன் 
              இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்: 
              Where is my Friend's Home 
              ஈரானிய திரைப்படம்.
              இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள: 
              http://www.imdb.com/title/tt0093342/
              (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் 
              கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு 
              செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு 
              செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)
              முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 
              9840698236, 9894422268
              
              அன்புடன் 
              அருண் & குணா
              தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
              எண். 41, சர்குலர் ரோடு, 
              யுனைடெட் இந்தியா காலனி, 
              கோடம்பாக்கம், 
              சென்னை 600024.
              www.thamizhstudio.com
              +919840698236, +919894422268