| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நிகழ்வுகள்! |  
| நீர்வை பொன்னையன்:  
இலக்கியத்தடம்! 
 - எம்.கே.முருகானந்தன் -
 
 
   நீர்வை 
பொன்னையன்: இலக்கியத்தடம் நூல் விமர்சன அரங்கு இன்று 20.01.2008 ஞாயிறு கொழும்பு 
வெள்ளவத்தை 58, தர்மாராமா வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் 
கூடத்தில் செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தெளிவத்தை ஜோசப், 
ந.காண்டீபன் ஆகியோர் கருத்துரைகள் வழங்க, எம்.கே.முருகானந்தன் தொகுப்புரை 
நிகழ்த்தினார். உருவமா உள்ளடக்கமா முக்கியமானது என முன்பு நடந்த சர்ச்சையைக் 
குறிப்பிட்டு பேசிய செல்வி திருச்சந்திரன் “படைப்பு சிந்தனையைத் தூண்ட வேண்டும், 
மனத்தில் வடுவை ஏற்படுத்த வேண்டும். அது செலூக்கத்திற்கு தூண்டவேண்டும். அதுவே நல்ல 
இலக்கியத்திற்கான தன்மை” என்றார். 
 தெளிவத்தை ஜோசப் தனது கருத்துரையில் “நாம் எமது படைப்புகள் பற்றிப் பேசுவதில்லை. 
ஆய்வுகளும் செய்வதில்லை. ஆனால் தமிழகத்தில் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால்தான் 
எமது படைப்புகளையும் படைப்பாளிகளையும் வாசக மட்டத்தில் பரவலாகக் கொண்டு செல்ல 
முடியும். அத்தோடு படைப்புகள் பற்றி ஆய்வுகள், விவாதங்கள், சர்ச்சைகள் நடந்தால்தான் 
எமது இலக்கியம் மேல்நோக்கி நகர முடியும். தனது படைப்புகள் மூலம் வாசகர்களை 
அணுகுவதில் நீர்வை பொன்னையனுக்கு எவ்வித தயக்கமும் இருக்கவில்லை.” என்றார்.
 
 காண்டீபன் தனது உரையில் “நீர்வை ஆழமான இறுக்கமான முற்போக்குவாதி. இது அவரது 
படைப்புகளில் துலக்கமாக வெளிப்பட்டது. ஆயினும் தமிழர் வாழ்வு போராட்ட காலத்தில் 
கால்பதித்த போது அவர்கள் பட்ட இன்னல்களையும். இனரீதியான அடக்குமுறைக்கு 
ஆளாக்கப்பட்டதையும் பதிவு
 செய்யத் தவறவில்லை. இந்த விதத்தில் ஏனைய பல முற்போக்கு எழுத்தாளர்களிடம் இருந்து 
இவர் மாறுபட்டார். ஆனால் அப்பொழுதும் கூட தனது முற்போக்கு கொள்கைகளைக் கைகழுவி 
விடாது பற்றுதியுடன் எழுதினார்” என்றார்.
 
 மேலும் “ நடப்பியலை பொறிமுறையாக மீளாக்கம் செய்தல் சீர்வையால் 
நிராகரிக்கப்படுகிறது. பொறிமுறையான மீளுருவாக்கம் கலையின் இழப்புக்குப் பெயர்ச்சி 
கொள்ள வைக்கும்” எனவும், “இந்தப் பன்முகமாகிய தெறிப்பில் பிரசார விசை தாழ்தலும், 
கலைப்பண்பமைவு எழுதலுமாகிய ஊசல் விசைகளைக் காணக் கூடியதுமாக இருந்தது” எனப் 
பேராசிரியர் சபா.ஜெயராசா தனது கட்டுரையில் குறிப்பிட்டதைச் சுட்டி, அதற்கு ஆதரவாக
 நீர்வையின் படைப்புகளை உதாரணம் காட்டி தனது கருத்துரையைக் காண்டீபன் தொடர்ந்தார்.
 
 எம்.கே.முருகானந்தன் தனது தொகுப்புரையில் “எந்த ஒரு படைப்பாளியின் ஒட்டுதொத்த 
படைப்புகளையும் ஒருங்கு சேர்த்துப் பார்த்து, அவரின் படைப்பாற்றலையும் சமூக அரசியல் 
பங்களிப்புகளையும் முழுமையாக விமர்சிக்கும் ‘படைப்பாளுமை விமர்சனக் கலை’ ஈழத் தமிழ் 
இலக்கியப் பரப்பில் இன்றுவரை கை கூடத நிலையில் நீர்வை பொன்னையனின் இலக்கிய 
பங்களிப்பு முழுவதையும் கூறுகூறாக பரிசீலிக்க முயல்கின்ற இந்நூல்
 முக்கியமான, முன்னோடி வரவாக அமைகிறது” என்றார் கே.விஜயன், இக்பால் ஆகியோர் 
சபையிலிருந்து சில குறிப்புரைகளைச் சொன்னார்கள். 224 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவையால் வெளியிடப்பட்டுள்ளது. விலை ருபா 300 
மட்டுமே.
 
 தொடர்புகளுக்கு:-
 இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவை
 11,இராஜசிங்க வீதி, வெள்ளவத்தை. கொழும்பு 06. இலங்கை.
 
 
  
Dr.M.K.MuruganandanFamily Physician
 http://hainallama.blogspot.com
 http://suvaithacinema.blogspot.com/
 http://www.geotamil.com/pathivukal/health.html
 
 kathirmuruga@hotmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |