| 
  அவுஸ்திரேலியாவில் புதுமையாக நடந்த புத்தக அறிமுக 
  விழா!  - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -
  இன்றைக்கு,முப்பந்தைந்து 
  வருடங்களுக்கு முன்னர் யாழ் நகரில்; படித்துக் கொண்டிருந்த காலத்தில், தன்னுடன் 
  படித்துக் கொண்டிருந்த சக மாணவியின் அழகு, அறிவு. பண்பு. பவித்திரமான 
  குணங்களிலாற்; கவரப்பட்ட ஒரு மாணவன், எதிர்காலத்தில் ஒரு தமிழ் எழுத்தானாக 
  வரப்போகிறேன் என்ற எள்ளளவு பிரக்ஜையுமற்ற நிலையில் தனது காதலைத் தன் அன்பைக் 
  கவர்ந்தவளிடம் சொல்ல அவள் வழக்கம் போல' அப்பா அம்மாவிடம் வந்து பேசுங்கள்' என்று 
  சொல்லிவிட்டாள். வழக்கம்போல்,எதிர் கால மாமா மாமிக்குப் பயந்து தயங்கித் தன் 
  உணர்வுகளை மறைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரியாமல், தயங்காமல் 
  காதலியின் வீடு தேடிச் சென்று ''நான் உங்கள் மகளை விரும்புகிறேன், அவளுடன் உங்கள் 
  வீட்டுக்கு வந்து பேசிப் பழகவிரும்புகிறேன். அதற்கு உங்கள் அனுமதி ;தேவை. அப்படி 
  உங்கள் அனுமதி கிடைக்காவிட்டால், அவளுடன் தெருவிற் கண்டு பேசுவேன். அப்படி 
  நடந்தால் பார்ப்பதற்கு நன்றக இருக்காது. நான் உங்கள் மகளுடன்வீட்டுக்கு வந்து, 
  பார்ப்பது பழகுவது என்பதன் முடிவு உங்களிடம்' என்று சொன்ன பதினெட்டு வயது 
  இளைஞனின் துணிச்சலை மெச்சிய ( அல்லது துணிச்சலைக் கண்டு பயந்த) வருங்கால மாமனார்' 
  சா¢ வீட்டுக்கே வந்து பேசிப் பழகலாம்" என்று அனுமதி கொடுத்தார்;.காதல் 
  வளர்ந்தது.படிப்பும் நல்லபடியாகத் தொடர்ந்தது. 
 அந்தக் காதலர்கள் திருமணம் செய்து, இலங்கைத்தமிழர்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த 
  அத்தனை கொடுமைகளையும்
 இலங்கை,இந்தியா, போன்ற நாடுகளில் அனுபவித்து இன்று அவுஸ்திரேலியாவில் 
  வாழ்கிறார்கள்.இளம் வயதிலேயே தனது வாழ்கைத் துணைவியைத் தேர்ந்தெடுக்க 
  .இருந்ததுணிவும் தன்னம்பிக்கையும் வாழக்கையிலும் தொடர்கிறது. மிருக வைத்தியத் 
  துறையில் காலடி எடுத்துவைத்துக் குதிரைக்கும்,மயிலுக்கும் வைத்தியம் பார்க்கும் 
  டாக்டர் நடேசன், தற்செயலாகத் தமிழ் இலக்கித் துறையிலும் தனது கைகளைப் பதித்து 
  விட்டார். வாயில்லாப் பிராணிகளின் நாடி பிடிக்கும் நடேசன் தனது துணிவான 
  படைப்புக்குள் மூலம் ,பல மனிதர்களின் நெஞ்சஙகளையும் தொட்டுப்பார்க்கிறார்.. 
  இந்தப் புத்தக விழாவின் அவர் கடந்து வந்த இலக்கியப் பாதையில் தனக்கு மதிப்புத் 
  தந்த மனிதர்களுக்கு நன்றி சொல்கிறார்.
 
 இன்று, தனக்கு,மகன் மகள் என்று இரு வளர்ந்த குழந்தைகளைக்கொண்டிருக்கும்,வயதில் 
  நடுமதியத்தைத் தாண்டும் நேரத்தில், 'தான் தனது மாமனிடம் கேட்ட கேள்வியை. இன்று 
  ஒருத்தன் தன்னிடம் கேட்டால் தான் எப்படி நடந்து கொள்வேன் ?' என்று தன்னிடம் 
  கேட்டுக் கொள்கிறார். கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த, மகள், தனது விருப்பம் என யாரோ 
  ஒருத்தனைக் கொண்டுவந்தால் எப்படித் தாங்க முடியும் என்ற கேள்வி யைச் சுமக்கும் 
  தகப்பன்களில் ஒருத்தரான நடேசன் தனது கேள்வியைப் பகிரங்கமாகப் பகிர்ந்து 
  கொள்கிறார். பெண் விடுதலை, மேற்படிப்பு என்று எத்தனையோ பரிமாணங்கயை உள்வாங்கும் 
  புதிய சமுகத்தின் தந்தையாகிய இவர் தனது இளமைக்கால எதிர்பர்ப்புக்களுக்கு ஏதோ ஒரு 
  விதத்தில் உதவி செய்து (மாமனார் செய்த கன்னிகாதானமாகவிருக்கலாம்!) தனது 
  வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் தாய் தகப்பன் மாதிரி ஆதரவு தரும் 
  மாமா மாமிக்கு அவா¢ன் புத்தக விழாவில் அஞ்சலி தெருவித்தது தமிழ் பண்புகளில் 
  மிஞசிக்கிடக்கும் சில நல்ல விடயங்களாகும்.
 
  
   
  பதினெட்டு வயதில் தனது நேர்மையான தன்மைக்கு 
  மதிப்புக் கொடுத்த தனது மாமாவாகிய திரு நாகரத்தினம் அவர்களுக்கும், மாமியாராகிய இரத்தி நாகரெத்தினம் அவர்களுக்கும் தனது நான்காவது புத்தகத்தை 
  அர்ப்பணம் செய்து விழா எடுத்ததை,கூட்டத்துக்குத் தலைதாங்கிய வழக்கறிஞர் திரு 
  இரவிந்திரன் உட்பட வந்திருந்த பெருந்தொகையான தமிழ் இலக்கியவாதிகள், 
  ஆர்வலர்கள்,விமர்சகர்கள் அத்தனைபேரையும் நெஞ்சம் நெகிழப் பண்ணியது.
 
 ''என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு,உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு'' 
  என்றார் திருவள்ளுவர். அதற்கிணங்கத் தன் நன்றிக்
 கடனை இந்த விழாவின் மூலம் தனது மாமா மாமிக்கு அர்ப்பணத்தார் டாக்டர் நடேசன். 
  அத்துடன் தனக்கு எழுத்துத் துறையில் நண்பனாக, ஆலோசகனாக இருக்கும் முருக பூபதி, 
  தனது ' உதயம்' பத்தி¡¢கைக்கு உதவிய 'மாவை நித்தியானந்தன், தனது
 படைப்புக்களை நல்ல முறையில் பதிவு செய்து தரும்,இந்தியாவில் மித்ரா அச்சகம் 
  வைத்திருக்கும், இலங்கையின் பழம் பெரும்
 எழுத்தாளர், திரு பொன்னுத்துரை, அவா¢ன் மகனும் நடேசனின் நண்பருமாகிய திரு பொன் 
  அநுரா, அவர்களுக்கும், எல்லாவற்றிற்கும்
 மேலாகத் தன் வாழ்க்கைத்துணையாகத் தன் இலக்கிய, சமூக சேவைகளுக்கு உதவி செய்யும் 
  நடேசனின் துணைவியார்
 சு¢யாமளாவுக்கும் தனது நன்றியைக் கூறினார்.
 
 விழாவுக்குத் தலைமை வகித்த வழக்கறிஞர் திரு இரவீந்தரன் அவர்கள், நடேசனின் பல 
  புத்தகங்களும்,அவரின் 'உதயம்' பத்திரிகையும்; ஏதோ ஒரு விதத்தில் அவுஸ்திரேலியத் 
  தமிழ் இலக்கிய வட்டத்தில் பல மாற்றங்களையும், விவாதங்களையும் உண்டாக்குவதாகக் 
  கூறினா¡.; இரவிந்திரனும் டாக்டர் நடேசனும் பல விதமான அரசியற் கருத்துக்களுக்கும் 
  மத்தியிலும் முற்போக்கு இலக்கிய ரீதியில் ஒன்று பட்டு வேலை செய்வது சந்தோசமான 
  விடயம் என்று சொன்னார்.
 
 புலம் பெயர்ந்த தமிழ் சமுகத்தில் உண்மைகளை எழுதுபவர்கள, சொல்பவர்கள் 
  எதிர்நோக்கும்,அத்தனை பிரச்சனைகளையும் நடேசன்
 மிகவும் பாரிய வித்தில் எதிர் நோக்கினாலும், நடேசனின் துணிவும் இடைவிடாத 
  முயற்சியும் அவருக்கு இன்று தமிழ் சமுதாயத்தில்
 பெரும் மதிப்பையுண்டாக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
 
 அவரைத் தொடர்ந்து பேசிய பல பேச்சாளர்களும் நடேசனின் எழுத்துப்பணி,இன்றைய,கால 
  கட்டத்தில் மிகவும் முக்கிய பணியைச்
 செய்வதாக வலியுறுத்தினார்கள். பொன் அநுரா அவர்கள் தன் உரையில் அரசியல் 
  வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தரமான தமிழ்நுர்ல்கள் வெளிவர மித்ரா பதிப்பகம் 
  முக்கிய பங்கு வகிக்கிறதென்றார்.
 
 'உன்னையே மையல் கொண்டு’ என்ற நாவல் தமிழ் மக்களால் மறைத்து வைக்கப்படும் 
  மனநோய்களும், அதன் விளைவுகளையும்
 பேசுகிறது என்று கூறினார். அவுஸ்ரேலியாவில் மருத்துவ சபை ஆலோசகராகவிருக்கும் 
  டாக்டர் நரேந்திரன், 'உனையே மயல் கொண்டு' பேசப்படும் 'பைபோர்'( அதி உயர்--அதி 
  ஆழ்ந்த மன நிலை--மனிக் டிப்பிரசன்) பற்றிய தெளிவான விளக்கத்தை வந்திருந்தோருக்கு
 வழங்கினார்.
 
 ''வாழும் சுவடுகள்’'' புத்தகத்திற்கு அறிமுகக்குறிப்புக்களை வழங்கிய திருமதி 
  சிவநாதன் தனது முன்னுரையில்,தனக்கு புத்தக விமர்சனம்
 செய்த அனுபவம் கிடையாது என்றும் இதுதான் முதற்தடவை என்றும் தனது உரையை 
  ஆரம்பித்தார்.ஒரு மிருக வைத்தியனின்
 நாட்குறிப்பு மாதிரி எழுதப்பட்டிருந்த வாழும் சுவடுகள் புத்தகத்தை. பல தரப்பட்ட 
  நிறைய புத்தகங்கள் படித்ததின் முத்திரையின்
 பின்னணியில் விமர்சித்தார்.
 
 ஆரம்ப விமர்சகர் என்ற தயக்கமின்றி ஆணித்தரமான பல நல்ல கருத்துக்களை முன்வைத்தார். 
  மற்றவர்களைத் திருப்திப்
 படுத்தவும்,மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுக்கவும் மேடையேறும் பலரால் நேர்மையுடன்பல 
  கருத்துக்களை முன்வைத்த திருமதி
 சிவநாதன் போன்ற பலர் தமிழ் இலக்கியத் துறைககுள் உள்ளிடுவது ஆரோக்கியமான, 
  முற்போக்கான இலக்கியவாதிகளுக்கும்
 சமுதாயத்திற்கும் பயனளிக்கும்.
 
 அவரைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் சிறி ஸ்கந்தராஜா அவர்கள், நடேசனின 
  படைப்புக்களிற் காணப்படும் பல திறமைகளையும் சில
 இலக்கணப் பிழைகளையும் சுட்டிக் காட்டினார்.
 
 விசேட பேச்சாளர்களில் ஓருத்தராக,இந்தியாவிலிருந்து திருமதி விஜயலெட்சுமி இராமசாமி 
  பேசும்போது' புலம் பெயர்ந்த .இலங்கைத்
 தமிழர்தான் இன்று, தமிழ்க் கலாச்சாரத்தையும் சமயத்தையும்,தமிழ்ப் பண்பையும் பேணி 
  வளர்ப்தாக்கூறினார்.
 
 புத்தக விழாவில் கலந்து கொண்ட லண்டன் எழுத்தாளரான திருமதி இராஜேஸ்வரி 
  பாலசுப்பிரமணியம் பேசும்போது, டாக்டர்
 நடேசன்'வாழும் சுவடுகள்',புத்தகத்தின் மூலம், மிருகவைத்தியத்துடன சமுகவியலையும் 
  தன் எழுத்து மூலம் மக்களுக்கு வழங்கிய
 ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஹரியட்டின் வழியைப் பின்பற்றி, அவுஸ்ரேலிய மக்களிடையே 
  உள்ள பல சமுகவியற்கருத்துக்களைச்
 சொல்கிறார் என்றார்.
 
 அவர் தனது சிறு குறிப்பில.''ஒரு படைப்பாளியின் கலைவடிவங்கனள் அது; எழுத்து, 
  நாடகம்,ஓவியம் என்று பல வடிவங்களில்
 பிரதிபலிக்கப்பட்டாலும்,அவை அப்படிப் படைக்கும் படைப்பாளியின் வாழ்க்னையின் 
  அனுபவக் கோர்வையாகவே கணிக்கப்படும். அவன்
 வாழும் கால கட்டத்தின் சா¢த்திரக் குறிப்பாகவே முன்னிலைப் படுத்தப்படும். 
  எழுத்தானன் என்பவன் ஒரு சமுகத்தின் முகம் பார்க்கும் கண்ணாடி;. அவனைச் சுற்றிய 
  சமதாயத்தில் என்ன நடக்கிறதோ அதுதான் எழுத்தானனின் படைப்புக்களிலம் பிரதிபலிக்கும்
 
 படைப்பாளியின் அனுபவம்,அவனின் கல்விஞானம்,மனித நேயம், சமுக,சூழ்நிலை,அவனடன் 
  வாழும், பழகும் மனிதா;களுடன் தொடரும்
 உறவுகள் என்பவற்றுடன் இணைந்தது. அந்த அனுபவங்களின் அடிப்படையில், தனது மிருக 
  வைத்தியத் துறையில நடேசன்
 பார்த்த,பழகிய மிருகங்கள் மூலம் அந்த மிருகங்களை வைத்து வளர்க்கும் மனித 
  சமுகத்தைக் காணுகிறார்.;இருபது சிறு சிறு
 படைப்பக்களைத்தாங்கி வந்திருக்கம் வாழும் சுவடுகள் தொகுதி,புலம் பெயர்ந்து வந்த 
  தமிழ் எழுத்தாளன் மற்ற சமுகத்துடன் வாழும்
 யாதார்த்த வாழ்க்கையின சில பா¢மாணங்களைப் படம் படித்துக்காட்டுகிறது.
 
 இந்திய இலக்கிய பாரபம்பரியத்தில் பழகிப்போன .இலங்கைத் தமிழ் தமிழ் வாசகர்களுக்கு, 
  அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்
 நடேசன் ஒரு வித்தியாசமான தமிழ் எழுத்தாளர். சம கால ஐரோப்பியத் தமிழ் 
  எழுத்தாளர்களிடையே ,கலாமோகன்
 (பாரிஸ்-பிரானஸ்),பொ.கருணாகரமூ¡த்தி( பேர்ளின்-ஜேர்மனி) சோபா சக்தி( பாரிஸ் 
  பிரான்ஸ்). விமல் குழந்தைவேல (லண்டன்
 இங்கிலாந்து),அ. முத்துலிங்கம் ( கனடா) போன்றவர்கள் புதிய உத்திகளையும் எழுத்து 
  நடைகளையும் தமிழ் மக்களுக்கு
 அறிமுகப்படுத்துகிறார்கள்.இவர்களிற் சிலடின் படைப்புக்களில் புதிய 
  நவினத்துவத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகிது; .புலம் பெயர்ந்த
 இளம் தமிழ்த் தலைமுறை எழுத்தாளர்களான இவர்களின் பல படைப்புக்கள் தங்களுடன் வாழும் 
  பல சமுதாயங்களுக்கும் தங்களுக்கும் உள்ள உறவுகளைக் காட்டுகின்றன.
 
 uthayam@optusnet.com.au
 |