பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
நிகழ்வுகள்! |
கனடா கலை மன்றத்தின் 5வது பட்டமளிப்பு விழா -
2009
- குரு அரவிந்தன் -
கனடா கலைமன்றத்தின் 2009ம் ஆண்டு பரதநாட்டியக் கலைக்கான பட்டமளிப்புவிழா October
11, 2009 ஞாயிற்றுக்கிழமை காலை
பதினொரு மணியளவில் ஆரம்பமாகி ரொறன்ரோ 1785, பின்ச் அவெனியுவில் உள்ள யோக்வூட்
பார்வையாளர் மண்டபத்தில் மிகவும்
சிறப்பாக நடைபெற்றது. கலைமன்றத்தின் கல்லூரிக் கீதம், கனடிய தேசிய கீதம்
ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.
கலை மன்றத்தின் அதிபர் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்துரு அவர்கள் விழாவிற்கு
வருகைதந்தோரை வரவேற்று, வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து விழாத் தலைவர் தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு. எஸ்
திருச்செல்வத்தின் தலைமை உரை இடம் பெற்றது.
இவ்வாண்டு பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீமதி நிரா சந்துருவின் கலைமன்ற மாணவிகளான
செறமியா விக்னேஸ்வரன், லாவண்யா
ரூபதாஸ், ஜோஆன் ராசநாயகம், சிந்துஜா விக்னராஜன், ஸ்ரீமதி வனிதா குகேந்திரனின்
கலைக் கோயில் மாணவிகளான கிறிஸ்ரீனா
பெனான்டோ, றிபேக்கா ரவீந்திரன், ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமனின் அமிர்தாலயா
கலைக்கல்லூரி மாணவியான ஆர்த்தி ஜெயசிங்கம்
ஆகிய ஏழு மாணவிகள் �நிருத்த நிறைஞர்� என்ற தராதர பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இம்மாணவிகளை முறையே பொதுப்
பாடசாலை பாதுகாவலர் நீதன் சண், கவிநாயகர் வி. கந்தவனம், வைத்திய கலாநிதி விக்ரர்
ஜே. பிகராடோ, கணக்காளர் க.
இரத்தினேஸ்வரன், கலாநிதி திருமதி பார்வதி கந்தசாமி, சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன்,
எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர்
பாராட்டி அறிமுகம் செய்து வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி இ.
பாலசுந்தரம், நடன ஆசிரியர் ஜானக் கே. ஹென்றி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களைவிட மேலும் மகிழினி பஞ்சாச்சரம், செறீன் சுரேந்திரன் ஆகிய இரண்டு மாணவிகள்
ஆசிரியர் தர டிப்ளோமா சான்றிதழையும்
பெற்றுக் கொண்டனர். இதுவரை 25 மாணவிகள் நிருத்த நிறைஞர் பட்டதாரிகளாகவும், 6
மாணவிகள் ஆசிரியர் தர டிப்ளோமா
பட்டதாரிகளாகவும் கலைமன்னறத்தினால் கலை உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
மதிய இடைவேளையைத் தொடர்ந்து ஏனைய தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான
பாராட்டும், பட்டமளிப்பும் நடைபெற்றன.
தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்துக்
கௌரவித்தனர். தரம் ஐந்து பரீட்சையில்
கௌதமி இராமநாதன், ஹரினியா இராஜசேகரன், கலைஞன் கலைச்செல்வன், கார்த்திகா ரூபதாஸ்,
லின்சே வார்கி, மஞ்சரி பரந்தாகன்,
லிசானா தர்மபாலன், மதுமிதா சண்முகநாதன், பிரியங்கா மதிவதனன் ஆகியோர்
சித்தியடைந்திருந்தனர்.
கடந்த பதினாறு ஆண்டுகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட அரங்கப் பிரவேசத்தை
நடத்தியிருக்கும், ஸ்ரீமதி நிரா சந்துருவை அதிபராகக்
கொண்ட கலைமன்றத்தின் பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீமதி லலிதாஞ்சனாவின் அமிர்தாலயா
கலைக் கல்லூரி மாணவிகள், ஸ்ரீமதி வனிதா
குகேந்திரனின் கலைக் கேயில் நாட்டிய மன்ற மாணவிகள், செல்வி சிந்துஜா ஜெயராஜின்
சிந்து கலைமன்ற மாணவிகள், ஜெலனி
தயாபரனின் யாழ் நாட்டியக் கலைமன்ற மாணவிகள், கார்மிளா விக்னேஸ்வரமூர்த்தியின் கலை
கார்மியாலய மாணவிகள்,
ஆனந்தவர்ஷினி ஜெயராஜசிங்கத்தின் ஆனந்தாலயா மாணவிகள் ஆகியோரும் இந்த விழாவில்
ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
உள்ளத்தையும், உடலையும் பக்குவப்படுத்தும் தெய்வீக அம்சம் கொண்ட, தமிழர்
பாரம்பரிய கலைகளில் ஒன்றான பரதநாட்டியக்
கலையை புகலிடம் தேடிவந்த இந்த மண்ணில் மிகவும் சிறப்பாக வளர்த்தெடுக்கும் நடன
ஆசிரியர்களையும், அவர்களின் வழி நின்று,
ஆர்வத்தோடு நடனக் கலையைக் கற்று இந்த மண்ணில் தங்கள் கலைப்பணியைத் தொடரக்
காத்திருக்கும் அவர்களது மாணவர்களுக்கும்
கலை ஆர்வலர்களின் சார்பில் பாராட்டி, எல்லாம் வல்ல கலைத் தாயின் ஆசிபெற
வாழ்த்துகின்றோம்.
kuruaravinthan@hotmail.com
16-10-2009
****************************
ஆஹா 2009
- குரு அரவிந்தன் -
மீண்டும் ஒரு இசை மழை! சனிக்கிழமை மாலை ஆறு மணியளவில் ( 15-08-2009)
ரொறன்ரோ கென்னடி வீதியில் உள்ள
எவரெஸ்ட் மண்டபத்தில் மீண்டும் இசை மழை பொழிந்தது. நட்சத்திர இரவு என்று இதுவரை
காலமும் பெயர் சூட்டப்பட்ட விழாவிற்கு
ஆகா � 2009 என்று அமைப்பாளர்கள் பெயர் மாற்றியிருந்தார்கள். தாயக மண்ணின் அவல
நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த விழா
ஒரு களியாட்ட விழாவாக அமையாமல் இளம் இசைக் கலைஞர்களின் திறமைகளைப் பார்வையாளர்கள்
முன் வெளிக் கொண்டு வரும்
ஒரு அமைதியான நிகழ்வாகவே இருந்தது. சுமார் 40 மேற்பட்ட இசைக் கலைஞர்கள் இந்த
நிகழ்வில் கலந்து கொண்டு பழைய,
இடைக்கால, புதிய பாடல்களை வழங்கும் இனிமை நிறைந்த இசை மழை பொழியும் நிகழ்வாகவே
இது அமைந்திருந்ததால் பலரின்
பாராட்டையும் பெற்றது. திரு. சதீஸ் நடராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றும் வைபவம் இடம் பெற்றது. திருமதி. மாலினி
அரவிந்தன், திருமதி கமலாசினி சந்திரசாகரா,
திருமதி நாகரத்தினம் சபாரத்தினம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அடுத்த
நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து.கனடிய தேசிய
கீதம், அகவணக்கம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. யாழினி கதிர்காமநாதன், சாலினி
கதிர்காமநாதன் ஆகியோர் தமிழ்த்தாய்
வாழ்த்தையும், கனடிய தேசிய கீதத்தையும் பாடினார்கள். பாரதி ஆட்ஸ் அதிபர் திரு.
எஸ். மதிவாசனின் வரவேற்புரையைத் தொடர்ந்து
மாலினி பரராஜசிங்கத்தின் தயாரிப்பில் ஓம் சாந்தி என்ற வரவேற்பு நடனம் இடம்
பெற்றது. இதில் மாலினி பரராஜசிங்கமும் அவரது
குழுவினரும் இடம் பெற்றிருந்தனர்.
தொடர்ந்து நாதஸ்வர, தவில் வாத்திய இசையோடு இசைக் கலைஞர்கள் மண்டபத்திற்கு அழைத்து
வரப்பட்டனர். இசை மழை
ஆரம்பித்ததைத் தொடர்ந்து சபையினர் இசையில் மூழ்கிக் குளிக்கத் தொடங்கினர். இசை
மழையில் இடம் பெற்ற சில பாடல்களையும்,
அப்பாடல்களைப் பாடியவர்களின் பெயர்களையும் இங்கே தருகின்றேன்.
மனதில் உறுதி வேண்டும் - பிரபா
சங்கராபரணம் - அரங்கன் லிங்கம்
மலரே மௌனமா � பிரபா � அனுஷா
ஓ.. ஜாயியே ஜாயியே � துசி குழுவினர்
செந்தமிழ் பாடும் - தெய்வேந்திரன் - சங்கீதா
நான் காணும் உலகங்கள் - தக்ஷணன்
முன்தினம் பார்த்தேனே - பிரபா � அனுஷா
தெய்வம் தந்த வீடு � கிருஸ்னா
ஒட்டகத்தைக் கட்டிக்கோ � தரன் - நிர்ஜானி
அன்பே என் அன்பே � ஜெறீன்
அம்மா என்றால் - பாரதி
ஆயிரம் நிலவே வா � கிருஸ்னா
ஹிந்திப்பாடல் - பிரபா, பிரவீன், நிர்ஜானி
புயலே புயலே � துசி � சுகாசினி
நெஞ்சே நெஞ்சே � தக்ஷணன் - சஜீகா
ஹே.. பாடல் ஒன்று � தரன் - நிர்ஜானி
சமரசம் உலாவும் - கதிர்காமநாதன்
விழி மூடி � பிரபா � நிர்ஜானி
ஞாயிறு என்பது � தெய்வேந்திரன் - நிர்ஜானி
ஒருநாள் போதுமா � அனுஷா
நெஞ்சுக்குள் பேசிடும் - பிரபா � நிர்ஜானி
காற்றில் எந்தன் கீதம் - சங்கீதா
நீ கோபப்பட்டால் - ஜெறீன் - பிரபா
ஓம்கார நாத.. � நிர்ஜானி
காக்க காக்க � நான் அவனில்லை � சஜீகா
பம்பரக் கண்ணாலே � மென்றியல் பாபு
ராமா ராமா � துசி குழுவினர்
ஒருவன் ஒருவன் முதலாளி � துசி
ஆசை நூறுவகை � தரன்
பளபளக்கிற � ஜெறீன் - துசி � பிரபா
அடுத்து பாமினி சதீஸ் தயாரித்து வழங்கிய திரையிசைப் பாடலுடனான நடனம் இடம்
பெற்றது. தொடர்ந்து பிரவீனின் டிரம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து
சினி மிக்ஸ் நடனம், சிறுவர் நடனம் என்பன இடம் பெற்றன. சிறுவர் நடனம் எல்லோரையும்
கவர்ந்த அம்சமாக இருந்தது. இசைக் கலைஞர்களின் வாத்தியக் கச்சேரியும் அவ்வப்போது
இடம் பெற்றது.
கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில் திரு. திருமதி. வி.
கந்தவனம், திரு. திருமதி. சாந்திநாதன், திரு. திருமதி.
லோகன் கணபதி, இந்திரன் சுவிற் தம்பதியினர், திரு. திருமதி குரு அரவிந்தன்;
ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களைக்
கௌரவித்தனர்.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம் பிரதம
விருந்தினராகக் கலந்து கொண்டு அங்கே உரை
ஆற்றினார். திரு. எஸ். மதிவாசன், திருமதி பவதாரணி மதிவாசன் ஆகியோரின்
விடாமுயற்சியைப் பாராட்டி, அவரவர்கள் தங்களுக்கு
ஒதுக்கப்பட்ட கடமைகளை ஒழுங்காகச் செயற்படுத்துவதை பாராட்டி, ஒரு அரச சபைபோல அந்த
அரங்கம் காட்சி அளிப்பதாக்
குறிப்பிட்டார். தொடர்ந்து பாரதி கலைக் கோயில் அதிபர் திரு. எஸ். மதிவாசனின்
நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
ஒவ்வொரு வருடமும் இசைத்துறையில் எமது அடுத்த தலைமுறையினரைப் பயிற்றுவித்து,
சிறந்த இசை விற்பனர்களாக வெளிக்
கொண்டு வரும் பாரதி கலைக் கோயில் அதிபர் திரு எஸ். மதிவாசனையும், திருமதி பவதாரணி
மதிவாசனையும் அவர்கள் ஆற்றிவரும்
அளப்பரிய சேவைக்காகவும், அவர்களோடு ஒன்றிணைந்து செயற்படும் செயற்குழுவினருக்கும்,
தன்னார்வத் தொண்டர்களுக்கும் பாராட்டுத்
தெரிவித்து, இசை ரசிகர்களின் சார்பில் நாமும் அவர்களை மனம் திறந்து வாழ்த்திப்
பாராட்டுவோம்.
kuruaravinthan@hotmail.com
23-08-2009 |
|
|
|
©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|