| நிகழ்வு: தமிழர் வகைதுறைவள 
  நிலைய ஏற்பாட்டில் அன்பென்று கொட்டு முரசே!
 தோழர் சிவம் நினைவு நிகழ்வும் பேருரையும்!
 
  சமூக 
  ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் 
  மானிடத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் 
  (நெல்லியடி சிவம்) அவர்களின் நினைவாய் நிகழ்வும் பேருரையும். நினைவுப் பேருரை ஆற்றுகை: பேராசிரியர் சிவசேகரம் (பொறியியல் பீடம், 
  பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை)
 காலம்: யூலை 4, 2009 மாலை 4.30 மணி
 இடம்: Everest Banquet & Convention 
  Hall
 முகவரி:  1199 Kennedy Road (@ Lawrence 
  East; One block North Of lawrence Avenue East)
 மேலதிகத் தகவல்களுக்கு: thedakam@gmail.com
 
 விரிவான .pdf 
  கோப்பு... உள்ளே
 
 தகவல்: தமிழர் வகைதுறைவள நிலையம்
 Tamil Resoucres Cetre TRC : thedakam@gmail.com
 
 
 அறிவித்தல்: 
  வடக்கு வாசல் இணைய இதழ்!கிழக்கில் உதயமாகும் வன்முறை
 
  மேற்கு 
  வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் அசுர வளர்ச்சிக்கு அங்குள்ள ஆளுங்கட்சியான சிபிஐ 
  (எம்) கட்சியினர் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு 
  எதிராகக் கட்டவிழ்த்து விட்ட வன்முறை நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்பதை நாம் 
  இங்கே மறந்துவிட முடியாது. ஒரு காலத்தில் மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை அரசியல் 
  வாதங்கள் அல்லது அரசியல் சார்ந்த எதிர்ப்பு என்பது அறிவார்ந்த விஷயங்களின் 
  அடிப்படையில் அமைந்த விவாதங்களாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது அங்கும் 
  நம்முடைய ஊரைப்போலவே வாதங்களை எல்லாம் அடி உதை கவனித்துக் கொள்கிறது. தடி 
  எடுத்தவன் தண்டல் காரன். பலத்தை நிரூபிக்கிறவன் அறிவாளி.....உள்ளே 
 http://www.vadakkuvaasal.com/
 ராகவன் தம்பி
 raghavanthambi@gmail.com
 
 அறிவித்தல்: 
  'இனியொரு': உண்மையை நோக்கிய மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி
 
  இனியொரு 
  உண்மையை நோக்கிய மாற்று அர்சியலுக்கான உரையாடல் வெளி என்னும் நோக்கத்துடன் 
  வெளிவரும் இணையததள்மாகத் த்ன்னை அறிவித்துக் கொள்கிறது 'இனியொரு' தளம். யமுனா 
  ராஜேந்திரன், குட்டி ரேவதி, ச்பா நாவலன், சண்முகம் எனப் பலரின் கட்டுரைகளைத் 
  தாங்கி வெளிவந்திருக்கும் இனியொரு இணையத்தளத்த்தின் இணியத்தள முகவரி: 
  http: //www.inioru.com 
 தகவல்: 
  inioru@googlemail.com
 
 அறிவித்தல்: 
  வாருங்கள்! ஊர்கூடித் தமிழ் இணையத் தேர் இழுப்போம்! - மு.இளங்கோவன் -
  அனைவருக்கும் 
  வணக்கம். தமிழகம் முழுவதும் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள்,தமிழ் உணர்வாளர்கள் 
  எனப் பலருக்கும் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் நண்பர்களுடன் இணைந்து 
  பயிலரங்குகள் பல நடத்தியுள்ளேன்.  நாகர்கோயிலில் நடந்த 
  பயிலரங்கின்பொழுது(20.06.09) ஒரிசா பாலு அவர்கள் இணையப்பயிலரங்கம் சார்பில் ஒரு 
  குழு உருவாக்கி, உரையாடினால் பயிலரங்கம் சார்ந்த முன்னேற்றமான செய்திகள் 
  கிடைக்கும் என்றார்கள். உடன் தம்பி நிலவன் அவர்கள் அதற்கு வேண்டிய வேலைகளைத் 
  தொடங்கினார். 
 உண்மையான ஈடுபாடுடைய நண்பர்கள் தமிழ் இணையப்பயிலரங்கம் தொடர்பான சிறந்த 
  கருத்துகளை எங்களுக்கு உரைக்கலாம்.இயன்ற வகையில் துணைநிற்கலாம்.தமிழகத்திலும் 
  இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஏன் அயல்நாடுகளிலும் தமிழ் இணையத்தைப் 
  பரவலாக்குவோம்.
 
 வாருங்கள்! ஊர்கூடித் தமிழ் இணையத் தேர் இழுப்போம்!
 
 தமிழ் இணையப் பயிலரங்கக் குழு விபரங்கள் :
 1.குழுவின் பெயர் : தமிழ் இணையப் பயிலரங்கக் குழு
 2.குழு வலைப்பக்கம் : http://groups.google.com/group/tamil-inaiya-payilarangam
 3.குழு மின்னஞ்சல் முகவரி : tamil-inaiya-payilarangam@googlegroups.com
 
 தமிழ் இணையப் பயிலரங்கக் குழு தளத்திலிருந்து....
 அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள், முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழ் இணையத்தின் 
  மூலம் தமிழைப் பரப்புவதற்கான பயிலரங்கங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தி 
  வருகிறார். அவரது பணியினை மேலும் சிறக்கும் வகையில் தமிழ் இணையம் தொடர்பான 
  கருத்துக்களை விவாதிப்பதற்கும், பயிலரங்கத்தில் பயிற்சி பெறுபவர்களின் 
  கருத்துக்களைக் கொண்டு விரிவாக்கம் செய்வதற்குமான பணிகளைச் செய்ய இக்குழு 
  உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இணைந்து உங்கள் அனைவரின் பணியினைப் 
  பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
 தமிழ் இணையப் பயிலரங்கில் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்
 தமிழ்த் தட்டச்சு வகைகள், செயல்முறைகள்.
 தமிழ் 99 விசைப்பலகை
 தமிழ்தட்டச்சு மென்பொருள் உள்ளீடு, மற்றும் பயன்பாடு முறைகள்.
 ஒருங்குகுறி எழுத்து
 ஜீமெயில் கணக்கு உருவாக்கம்.
 தமிழில் மின்னஞ்சல், உரையாடல்,ஒலி,ஒளிக்கோப்பு,படம் இணைத்தல்
 
 தமிழ் மின்னிதழ்கள் அறிமுகம்
 இணையத்தில் மின்நூல்கள் அறிமுகம்
 தமிழ்த் தகவல்களை இணையத்தில் தேடுதல்.
 
 மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப்பல்கலைக்கழகத் தளம்,நூலகம் 
  தளம்,சுரதா தளம் பற்றி அறிமுகம்
 தமிழ் நூல்களைப் பார்வையிட உடனடித் தகவல் தரும் புதுச்சேரி பிரஞ்சு நிறுவன 
  நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம்,விருபா தளம் பற்றி விளக்குதல்
 
 விக்கிப்பீடியா
 விக்கிமேப்பியா
 தமிழ் அகராதி
 
 தமிழில் வலைப்பூக்கள் (பிளாக்) உருவாக்கம்
 வலைப்பூக்கள் செயல்பாடுகளும், பயன்களும்
 வலைபூக்கள் பதிவுகள் மேலாண்மை
 இணையக்குழுக்கள் அறிமுகம்
 தமிழ்மணம்,திரட்டி,தமிழ்வெளி உள்ளிட்ட திரட்டிகள் பற்றி விளக்குதல்
 எ.கலப்பை,என்.எச்.எம்.எழுதி அறிமுகம் செய்தல்
 தமிழ் இணையப் பயிலரங்கங்களை மேலும் 
  ஊக்குவித்து, சிறப்பாய்ச் செயல்படத் தேவையான கருத்துக்களை இங்கே பதியலாம். 
  விவாதிக்கலாம்.. தமிழ் இணைய வளர்ச்சி வரலாற்றை இங்கே பதிவு செய்யுங்கள் எனப் 
  பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். அன்புடன்,
 தமிழ் இணையப் பயிலரங்கக் குழுவினர்
 மு.இளங்கோவன்
 புதுச்சேரி,இந்தியா
 muelangovan@gmail.com  
  http://muelangovan.blogspot.com/
 
 அறிவித்தல்: தமிழ் 
  அலையின் பணிகள்...
  இனிய 
  நண்பர்களே! தமிழ் அலையின் பணிகள் தொடங்கி அன்பர்களின் நண்பர்களின் ஆதரவோடும் 
  அன்போடும் சிறப்பாக இயங்கி வருகிறது.
 
 தமிழ் அலையின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த 
  நன்றிகள்.
 
 அன்பு உறவுகளின் ஆதரவும், அன்பும் இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு..
 
 மிக அன்புடன்
 இசாக்
 thuvakku@gmail.com
 |