சென்னை: செப்டம்பர 30, 2007!
எஸ்.பொ.பவளவிழா: இலக்கிய நிகழ்வும், எஸ்.பொ புத்தக
வெளியீட்டரங்கமும்! முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம்!
கலகத்தில் மலரும் சுதந்திரம்!
எதிரவரும் செப்டம்பர் 20, 2007 அன்று எஸ்.பொ அவர்களின்
75ஆவது வயதை முன்னிட்டுப் பவளவிழா சாகித்ய அகாதமி
விருது பெற்ற மலையாள எழுத்தாளர் பாபு பரத்வாஜ்
தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது. முகவரி: ராகசுதா,
ப.எண் - 852, பு.எண் -16, லஸ் அவன்யு, மயிலை, சென்னை 600
004.காலையும், மாலையுமென நடைபெறும் நிகழ்வுகளில் காலை
நிகழ்வுகளைச் சித்தன் ஒருங்கிணைக்க யாழன் ஆதி தொகுத்து
வழங்க மாலை நிகழ்வுகளை பா.இரவிக்குமார் தொகுத்து
வழங்குவார்.
காலை நிகழ்வுகள் 10.00 மணிக்கு 'நனவிடை தோய்தல்' என்னும்
ஆவணப்படத்துடன் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து
எழுத்தாளர் கோவை ஞானியின் தலைமையில் 'சிறு
பத்திரிகைகளின் பணியும் பாதையும்' என்னும் தலைப்பில்
கலந்துரையாடலொன்று நடைபெறும். இதில் சி.மகேந்திரன்,
திருப்பூர் கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், கழனியூரான்,
தேவக்கோட்டை வா.மூர்த்தி, மணா, பாரதி வசந்தன், நிழல்
திருநாவுக்கரசு, குறிஞ்சி வேலன், சிபிச் செல்வன் ஆகியோர்
கலந்துகொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து 11.30 மணிக்கு 'பத்தாயிரத்தில் ஒரு
படைப்பாளி எதிர்கொள்ளும் வினாக்கள்' என்னும் தலைப்பிலொரு
கருத்தரங்கம் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தலைமையில்
நடைபெறும். இதில் இன்குலாப், சிற்பி, நாஞ்சில் நாடன், பாரதி
கிருஷ்ணகுமார், அழகிய பெரியவன், ராஜ்ஜா, யுகபாரதி,
பச்சியப்பன், கோவி.லெனின ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து உணவு இடைவேளையும், அதனைத் தொடர்ந்து 2.00
மணிக்கு அவ்வை நடராசன் தலைமையில் 'தமிழ் வளர்ச்சிக்குத்
தமிழ் உணர்வின் பங்களிப்பு' என்னும் தலைப்பில்
சொற்பொழிவரங்கம் நடைபெறும். இதில் பழ.நெடுமாறன்,
தொல்.திருமாவளவன், வைகைச்செல்வி, தங்கர்பச்சான், ஆண்டாள்
பிரியதர்சினி, கு.அரசேந்திரன், இந்திரன் ஆகியோர் பங்கு
பற்றுகின்றனர்.
இதனைத்
தொடர்ந்து மாலையில் கலைமாமணி வீ.கே.டி.பாலன்
தலைமையில் எஸ்.பொ புத்தகவெளியீட்டரங்கம் நடைபெறும்.
இதில் மாயினி (வெளியிடுபவர்: பாரதிபுத்திரன்; பெறுபவர்:
காந்தளகம் சச்சிதானந்தம்), மணிமகுடம் (வெளியிடுபவர்: கே.இராமனுஜம்; பெறுபவர்:
க.பஞ்சாங்கம் )ஆகிய புதினங்களும், தீதும் நன்றும் என்னும் இலக்கிய உரையாடற்
தொகுப்பும் (வெளியிடுபவர்: சிற்பி; பெறுபவர்: தமிழச்சி), யுகமாயினி என்னும் இலக்கிய
மாத இதழும் (வெளியிடுபவர்: சி.கஸ்தூரிரங்கன்; பெறுபவர்: கோவை ஞானி) வெளியிடப்படும்.
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர் விழா ஒருங்கிணைப்பாளர்கள்.
தகவல்: ஜெயந்திசங்கர்:
sankari01sg@yahoo.com
சித்தன் பிரசாத்:
chithankalai@yahoo.co.in |