| 
மியம்மாவில் கலைமகள் தமிழ்க் கல்வி நிலையம் 
பெருமையுடன் நடாத்தும் முப்பெரும் தமிழ்ப் பெருவிழாவும் கருத்தரங்கும்!  
 அன்புள்ள 
தமிழன்பர்களே ,வணக்கம். மியம்மா நாட்டின் மூன்மாநிலம் சார்ந்த தட்டோன் மாநகரில் 
அமைந்துள்ள கலைமகள் தமிழ்க் கல்வி நிறுவனம் ,மியம்மா நாடெங்கிலும் அமைந்த ஐந்து 
திருக்குறள் தேர்வு மையங்களில் திருக்குறள் தேர்வுகளை 18.5.2008-ம் நடத்தினர். 
மொத்தம் 33 தமிழ்ப் பாடசாலைகளின் 312 மாணவமணிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். 
இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மணிகளுக்கு 30.11.2008-ம் நாள் பரிசளிப்பு விழா 
மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழா பற்றிய அழைப்பினை இம்மடலுடன் இணைத்துள்ளோம். 
உலகத் தமிழர்களின் ஒன்றிணைந்த பார்வைக்கும் தொடர்புக்கும் பாலமாக அமைய 
விரும்புகிறோம். உங்கள் இனிய கருத்துக்களையும் வழிகாட்டுதல்களையும் ஆவலுடன் 
எதிர்பார்க்கின்றோம். 
 என்றும் அறநிறை திருக்குறளுடன்,
 குறளேந்தி ந.சேகர்
 தலைவர், கலைமகள் தமிழ்க் கல்வி நிறுவனம்,
 தட்டோன்,மூன்மாநிலம்,மியம்மா.
 
 Address: Mr.N.Segaran,
 No.460,Ouppotan Road,
 Thaton ,Mon State,
 Myanmar.
 emailed by: Solai.Thiyagarajan,
 Yangon,Myanmar.
 00951562493.
 
மேலதிக விபரங்களுக்கு:
விபரம்1,
விபரம் 2 
thiruvalluvar.myanmar@gmail.com |