| 
 'டொரொண்டோ',சனி 11-04-2009 மாலை 4.30 மணி: ஆசிரியர் செல்வா இலங்கையன் நினைவுத் தடங்கள்! நினைவுக் கூட்டமும் கலந்துரையாடலும்!
 தகவல்: க.நவம் . : .... விபரம் உள்ளே
 
 
  தோழர் கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவு நிகழ்வு - 10.05.2009 அன்புடன் நண்பர்களுக்கு, தோழர் கலைச்செல்வனின் 4வது ஆண்டு நினைவு நிகழ்வு 
இவ்வருடம் மே மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெறவுள்ளது. 
நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை பின்னர் அறியத் தருகிறோம். நன்றிகள்.
 ஒழுங்கமைப்பு,
உயிர்நிழல் ,புகலி
 editors@puhali.com
 
 I, BOSE by ELANGOVAN
 ISBN: 978-981-08-2275-0
 
   I, BOSE ( + Transportation) exposes the impregnable mystery of the death of the 
forgotten hero Netaji Subash Chandra Bose, and explores the numerous conspiracy 
theories. Bose, the most fascinating personality from history in Asia, led the 
Indian National Army from Singapore in its armed struggle against the British 
imperial forces of India for independence. TRANSPORTATION captures the 
displacement and suffering, cultural denigration and crisis of identity that 
ensues from all forms of estrangement in the colonial period in the penal 
settlements. It reconstructs the experiences of native criminals and political 
prisoners transported overseas to the penal settlements established by the 
British, from the late eighteenth to mid-twentieth centuries, in Southeast Asia 
(Singapore and Malaya), the Indian Ocean and the Andaman Islands. The plays were 
staged by Agni Kootthu (Theatre of Fire) with support from National Arts 
Council, Arts Fund and Lee Foundation. I. BOSE is published with the support of 
National Arts Council's Publication and Translation Grant scheme. 
 Format: Paperback, 100 pages
 Published: Jan 2009, Singapore, 1st Edition
 16 pages in colour.
 Unit price: S$15 (excluding GST)
 Available at SELECT BOOKS, Tanglin Shopping Centre, Singapore
 http://www.selectbooks.com.sg
 
 kamasoma@pacific.net.sg
 
 SINGAPORE WORKSHOP BY GNANI
 
  Dear Friends, The popular writer and journalist Mr. Gnani who will be speaking 
at our Muthamizh Vizha will also be conducting a workshop on Sunday 12th April 
2009 from 9.30 pm to 12.30 pm. at the new Umar Pulavar Tamil Language Centre at 
Victoria Street. (Next to ICA Building). 
 The title of the Workshop is "THE ART OF CREATIVE 
WRITING." The fess is $10.00 per person. There are only 50 places and they will 
be given on a first come first served basis. So please don't wait for the last 
minute to register. Call Mrs. Chitra Ramesh-97733186 or Mr. R. Vairavan-93860497 
immediately to register.
 
 Thank you
 Naa. Aandeappan
 Chaiman, ASTW
 - chitra.kjramesh@gmail.com
 
 தமிழ் அலை அறிவித்தல்!
 
  தமிழ் அலை: இனிய நண்பர்களுக்கு.. இனிய நண்பர்களுக்கு.. தமிழ் அலை தொடக்க செய்தி.. 
அதன் பணிகள் அனைத்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ் அலையின் பணிகள் சிறக்க 
சான்றோர் பெருமக்கள் அளித்த வாழ்த்துச் செய்தியை இத்துடன் இனைத்துள்ளேன்.. 
நண்பர்களின் வாழ்த்தையும் ஆதரவையும் எதிர்நோக்கி. 
 அன்பும் ஆதரவும் தொடரட்டும்.
 மிக அன்புடன்
 இசாக்
 
 thuvakku@gmail.com
 
 அடவி காலாண்டிதழ் அறிவித்தல்!
 
 அடவி காலாண்டிதழ்
 
 விலை ரூ.20 பக்கம்: 96
 
 நாடகம்
 தற்கொலை செய்த விவசாயிகள்
 மகாராசன்
 
 உரையாடல்
 செஸ்லாவ் மிலோஸ் - அசோக் வாஜபேயி
 
 கட்டுரை
 சினிமா மற்றும் நாவல்:
 கதையாடலில் ஏற்படும் பிரச்சினைகள்
 இட்டாலோ கால்வினோ
 
 கவிதை
 பழனிவேள் - வசுமித்ர
 
 குறுநாவல்
 ஜீ. முருகன்
 
 சிறுகதை
 பால்நிலவன் - எழில்வரதன்
 
 முகவரி
 12சி, செங்கம் சாலை
 திருவண்ணாமலை - 606601
 அலைபேசி : 9994880005
 தொலைபேசி : 044-2618 1342
 aadhimagazine@gmail.com
 
 அன்புடன்
 தில்லைமுரளி
 
 aadhimagazine@gmail.com
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 
ஏழாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 04 -04 
-09 : 07.45 PM 
 
  நாள்: 
சனிக்கிழமை (11-04-09) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் 
எதிரில் அமைந்துள்ளது.  நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை
 
 10 AM - 2 PM - இந்த மாதம் ஐந்தாம் தேதி அன்று வெல்கம் டு சினிமா என்கிற பத்திரிகை 
நடத்திய குறும்படப் போட்டியில், முதல் மூன்று குறும்படங்களுக்கு பரிசளிப்பு விழா 
நடந்ததே தவிர குறும்படங்கள் திரையிடப்பவில்லை. முதல் முறையாக அவர்கள் குறும்படப் 
போட்டி நடத்துவதால் அதற்கான வழிமுறைத் தெரியவில்லை என்று அதன் அமைப்பாளர் 
தெரிவித்தார். தமிழ் ஸ்டுடியோ.காம் அந்த போட்டியை தன் வாசகர்களுக்கு தெரிவித்து 
அவர்கள் குறும்படங்கள் அனுப்ப காரணமாக இருந்தது. இதனால் பல வாசகர்கள் எங்களிடம் 
தொடர்பு கொண்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர்.
 
 எனவே வாசகர்கள் குறையை போக்கும் விதமாக வெல்கம் டு சினிமா நடத்திய குறும்படப் 
போட்டிக்கு வந்தக் குறும்படங்கள் அனைத்தும் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட 
வட்டத்தில் பதினைந்து திரைப்படங்களாக மூன்று மாதங்களுக்கு ஒளிபரப்பப்படும். எனவே 
உலகப் படங்கள் திரையிடல் பத்தாவது குறும்பட வட்டத்தில் தான் திரையிடப்படும் என்பதை 
தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பப்படும் குறும்படங்கள் 
பெயர்கள் மற்றும் விபரங்களும் வெளியிடப்படும் முதல் மாதம் அதற்கான நேரமில்லாதக் 
காரணத்தால் இங்கு வெளியிடப்படவில்லை.
 
 3 PM - 7 PM - குறும்பட வட்டம்
 
 முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்
 
 இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி 
திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் 
உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு 
மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் 
பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் 
சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த 
சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி 
நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று 
தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.
 
 மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த 
பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது 
வலைப்பூ.http://agnipaarvai.blogspot.com/
 
 தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் 
பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு 
முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் 
கொள்ளப்படுகின்றன.
 
 இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
 
 திரைப்படங்களில் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரியும் திரு. மாணிக்கம் அவர்கள் 
இம்மாதம் குறும்படங்களுக்கான "ஸ்டோரி போர்ட்" உருவாக்கம் குறித்து வழிகாட்ட 
உள்ளார். மேலும் இவர் பல படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பத்மஸ்ரீ 
கமலஹாசனின் பல படங்களுக்கு இவர்தான் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரிந்துள்ளார். 
விருமாண்டி, வெளிவராத மருதநாயகம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். எனவே 
வாசகர்கள் அது குறித்த தங்களது ஐயங்களை திரு. மாணிக்கம் அவர்களிடம் கேட்டு விளக்கம் 
பெறலாம். இந்நிகழ்வு முழுக்க முழுக்க ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகும்.
 
 மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்
 
 தி. நீலகண்டன் அவர்கள் இயக்கிய "நல்லதோர் வீணை செய்வோம்", திரு. 
விஜிக்குமார்அவர்கள் இயக்கிய "குப்பை மனசெல்லாம்", திரு. சக்தி பாரதி அவர்கள் 
இயக்கிய "எங்கெங்கு காணினும்..." ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
 
 குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் 
மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், 
குறைகளும் அலசப்படும்.
 
 மேலும் இம்மாதம் முதல் புதிதாக, குறும்படங்களை காண்பதற்கு ஒரு சிறப்பு விருந்தினர் 
அழைக்கப்படுவார். குறும்படங்கள் திரையிடப்பட்டு, கலந்துரையாடல் முடிந்த பின்னர் 
இந்த சிறப்பு விருந்தினர் அக்குறும்படங்கள் குறித்தான தனது பார்வையை 
வெளிப்படுத்துவார்.
 
 இம்மாதம் இயக்குனர் திரு, ஜெயபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் 
கொள்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் இயக்கிய "குருஷத்ரம்" திரைப்படம் இந்திய 
பாகிஸ்தான் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு 
இயக்கிய"நண்பா நண்பா" திரைப்படத்தில் நடித்ததற்காக திரு. சந்திரசேகர் அவர்கள் 
நடுவண் அரசின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
 
 6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் புதியப் பகுதி 
இம்மாதம் முதல் நடைபெற உள்ளது.
 சிறந்த வலைப்பதிவருக்கு சிறிய அளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை 
மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் 
தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.  
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
 
 9840698236, 9894422268
 
 --
 அருண் & குணா
 தமிழ் ஸ்டுடியோ.காம்
 www.thamizhstudio.com
 9840698236, 9894422268
 
thamizhstudio@gmail.com |