| சுவிஸ் பாசல் நகரில் லண்டன் பேராசிரியர் கணினி மூலம் தமிழ் பயிற்சி - ஆல்பர்ட்,அமெரிக்கா -
 
 
  சுவிஸ் 
  நாட்டிலுள்ள பாசல் நகரில், பாசல் தமிக் கலவன் பாடசாலையின் அழைப்பின்பேரில், 
  லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்கள், 20.01.10 அன்று கணினி 
  மூலம் தமிழ் பயிற்சியை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் 
  நடாத்தினார். இன்றைய காலகட்டத்தில், கணனியின் பயன்பாடு நன்றாக அதிகரித்திருப்பதால், கணினி 
  மூலமான கல்விமுறை, மாணவர்களை எளிதாகச் சென்றடைய ஒரு வழியாகும் என்பதே,பேரா.சிவா 
  பிள்ளையின் மூலக் கருத்தாக இருந்தது. கணினி மூலம் கல்வி கற்பிக்கும் பல்வேறு 
  முறைகளை இவர் திரையில் காண்பித்து, அவற்றிற்கான விளக்கத்தையும் 
  கொடுத்தார்.படங்களைக் காட்டி, அதிலுள்ளவற்றை விபரிக்கும்படி கேட்கும்போது, 
  பிள்ளைகளின் கற்பனைச் சக்தி வளமடைகின்றது என்பதையும் இவர் சுட்டிக்காட்டினார்.
 
 பல மாணவாகளிடமும், பெற்றோர்களிடமும் நேரடியாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டு, 
  விடைகள் உள்வாங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைக்கு 
  நேரம் போதாது என்பது ஒரு பெருங்குறையாக இருந்தது. ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகள் 
  கொடுக்கப்பட்டு, செய்வித்தல் மூலந்தான், இந்தப் பயிற்சிப் பட்டறை முழுமையடையும் 
  என்பது இவர் கருத்தாக இருந்தது.
 
 ஓர் உறைக்குள் எழுத்துக்களை, கைகளால் தடவி, இந்த எழுத்துக்களைக் கண்டுபிடிக்கும் 
  பயிற்சி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. நேரம் அதிகம் இருக்கும்போது, இது 
  போன்ற பல பயிற்சிகளைச் செய்ய முடியும் என்று பேரா.சிவா பிள்ளை 
  அபிப்பிராயப்பட்டார். இன்னொரு தடவை, ஆசிரியர்களுக்கு மாத்திரம், நீண்ட நேரம் 
  எடுத்து, இன்னொரு பயிற்சிப்பட்டறையை நடாத்துவது என்றும் இறுதியில் 
  முடிவெடுக்கப்பட்டது. பாசல் தமிழ்க் கலவன் பாடசாலை நிர்வாகம் சார்பில் 
  ஏ.ஜே.ஞானேந்திரன் பேரா.சிவாபிள்ளை அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி நன்றி 
  நவின்றார்.
 
   
  மக்கள்,மாணவர்கள், ஆசிரிர்கள்,சந்திப்பு 
  கலந்துரையாடல் மிகவும் பயன் உள்ளதாக இருந்ததாக பயிற்சிக்கு வந்திருந்த 
  பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.பேரா.சிவாபிள்ளை அவர்களின் பயிற்சியானது, 
  சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது. 250 
  பேர்களுக்கு மேல் கல்ந்துகொண்ட இந்தப் பயிற்சிக்கு பாசல் தமிழ்க் கலவன் 
  பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 சுவிஸ், பாசல் நகரில் 500ற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் தாய்மொழிக் கல்வியினைப் 
  பயில்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் சுவிஸ் பாடசாலைகளில் தமிழ்மொழியும் ஒரு 
  பாடமாக அங்கீகரிக்கப்படவுள்ளது. அதன் மாதிரி முயற்சியாக இங்குள்ள சுவிஸ் 
  பாடசாலையில் தமிழ்மொழியும் கற்பிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. பாசல் நகரப் 
  பாடசாலைகளில் ஏழுக்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கல்வி கற்றால் அங்கே அவர்களுக்கு 
  தமிழ் கட்டாய பாடமாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளதாக பாசல் கல்வித் திணைக்களம் 
  தெரிவித்துள்ளது.
 
   
 - “தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் 
  போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” பாரதிதாசன் -
 
 செய்தியும் தகவலும்: 
  albertgi@gmail.com
 |