| 
கனடா:  
எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல் வெளியீட்டு விழா
 
  
இடம் -: மல்வேர்ண் நூலக அரங்கு MALVERN PUBLIC LIBRARY
 30 SEWELLS ROAD, SCARBOROUGH
 
 காலம் -: எதிர்வரும் யூன், சனிக்கிழமை 6ஆம் தேதி, 2009
 பிற்பகல் 6.00 மணி
 
 நூல் திறனாய்வு
 பேராசிரியர் செல்வா கனகநாயகம்
 
 ஏற்புரை
 அ.பாலமனோகரன்
 
 புத்தக வெளியீடு
 
 நூல் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
 
 தொடர்புகளுக்கு : (416) 994-9616 , (647) 237-3619 , (416) 500-9016
 
 nmuralitharan@hotmail.com
 
நிலக்கிளி அ. பாலமனோகரனின் புதிய ஆங்கில நாவல் : BLEEDING 
HEARTS
  டென்மார்க்கில் 
வாழ்ந்துவரும் பிரபல நாவலாசிரியரும் எழுத்தாளருமான நிலக்கிளி அ. பாலமனோகரன் எழுதிய 
BLEEDING HEARTS  என்ற புதிய ஆங்கில நாவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள 
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடைபெறும் காட்டெருமை ஒன்றை அடக்கும் வீரசாகச செயலுடன், 
வன்னி மண்ணின் அழகு பொதிந்த இயல்பான வாழ்வை எடுத்து விளக்குகிறது இந்த நாவல். 
ஏற்கெனவே தமிழில் நந்தாவதி என்ற பெயரில் வெளியாகி, பலருடைய பாராட்டுக்களையும் பெற்ற 
இந்த நாவல் தற்போது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு 
தமிழகத்தில் உள்ள மித்திர நிறுவனத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 
 உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் தமது ஆங்கிலமூலமான வாசிப்பிற்கு சிறந்ததோர் 
தமிழ் வழி ஆங்கிலப் படைப்பிலக்கியமாக பயன்படுத்த சிறந்த நூலாக இது 
அமைந்திருக்கிறது. தமிழில் உள்ள படைப்பாளிகளின் ஆக்கங்கள் வேற்று மொழிகளில் 
கொண்டுவரப்பட வேண்டுமென பல காலமாகப் பேசப்பட்டு வந்தாலும் சொற்பமான நூல்களே மொழி 
மாற்றம் செய்யப்பட்பட்டுள்ளன. அந்தவகையில் ஈழத்தின் நாவல் இலக்கிய வரலாற்றில் 
முக்கிய தடம் பதித்து, சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நிலக்கிளி நாவலை எழுதிய 
அ.பாலமனோகரன் எழுதிய நாவல் அழகுபட ஆங்கிலத்தில் வந்துள்ளது.
 
 சமீபத்தில் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதி வெளியிட்ட இலங்கையில் தமிழர் ஒரு 
முழுமையான வரலாறு என்ற நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பிலும், அவருடைய முன்னைய 
வெளியீடுகளிலும் முக்கிய பணியாற்றியவர் நிலக்கிளி அ. பாலமனோகரனாகும். தாய் 
வழித்தாகங்கள், குமாரபுரம் போன்ற நாவல்களும் இவருடையவையே. சிறந்த ஓவியராகவும், 
டென்மார்க் பாரும் நகரசபையின் ஓவியப் பரிசையும் பெற்றுக் கொண்டவருமான நிலக்கிளி. அ. 
பாலமனோகரன் டென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
  இம்முயற்சியானது 
புலம் பெயர் படைப்பிலக்கியத் துறையில் முக்கியமான பாய்ச்சலென்பது 
குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கில் தமிழர் புலம் பெயர்ந்து 25 ஆண்டு வெள்ளிவிமா 
ஆண்டில் இந்நாவல் வெளிவருவது தமிழரின் சாதனை என்று போற்றுதற்குரிய முயற்சியாகும். 
மேலும் வெளிநாடுகளில் பிள்ளைகளின் பாடப்புத்தமாக இடம் பெறுவதற்குரிய சிறந்த ஆங்கில 
நூலாகவும் இது அமைவு பெற்றுள்ளது. அனைவரும் இதைப் பெற்று படிக்க வேண்டும். நூலைப் 
பெற விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தாமதியாது தொடர்பு கொள்ளவும். 0045 44957979
 
 நன்றி: அலைகள்.காம்
 |