இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2007 இதழ் 93  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
கலைக்கோயில் வனிதா குகேந்திரனின் மாணவி செல்வி கிறிஸ்ரீனா பெர்னாண்டோவின் பரத நாட்டிய அரங்கேற்றம்!

- த.சிவபாலு எம்.ஏ.-


கலைக்கோயில் வனிதா குகேந்திரனின் மாணவி செல்வி கிறிஸ்ரீனா பெர்னாண்டோவின் பரத நாட்டிய அரங்கேற்றம்!ஞாயிறு மாலை (12.08.2007)ஆர்மேனியன் இளைஞர் நிலைய கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது திரு, திருமதி பெர்னான்டோ தம்பதியினரின் புதல்வி கிறிஸ்ரினாவின் பரத நாட்டிய அரங்கேற்றம். பரதத்தின் பொருளுணர்ந்து அதனைக் கற்றுக்கொண்ட ஒரு நாட்டியத்தாரகையாக அவர் காணப்படுவதற்கு அவர் பரதத்தின் மீது கொண்டுள்ள பற்றேகாரணம். “ஆடற்கலையில் இன்று வெகுவாக உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கும் கிறிஸ்ரினா சியாமளா பிரதீப் பெர்னாண்டோ புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழர்களின் பாரம்பரியக் கலை வளரச்சிக்கு முத்திரையாகத் திகழ்கின்றார்” என பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் பார்வதி கந்தசாமி குறிப்பிட்ட பார்வதி கந்தசாமி “இளம்வயதில் இந்தியாவில் நடனத்தைப் பழக ஆரம்பித்த அவர் பின்னர் அதனை இடைநிறுத்தி யிருந்தார். எனினும் அவர் பெற்றோரின் விருப்பும், ஆசிரியையாக வாய்க்கப்பெற்ற வனிதா குகெந்திரனும் அவரின் நடனத்தில பற்றுக் கொள்ள வைத்து எமது தமிழ்ப் பாரம்பரியத்தை வளர்ப்பதற்கு முயற்சிப்பது பாராட்டப் படவேண்டியது என்றார். நடனம் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது, உலகில் நடனம் ஆடாத இடமும் இல்லை, நடனம் ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் பார்வதி கந்தசாமி ஆடாத மக்களும் இல்லை. இன்பத்தை நடனத்தால் வெளிப்படுத்தி வரும் மரபை நாட்டார் கலைகள் வாயிலாக அறிகிறோம். ஏன்ற அவர் பரதக் கலையை கனடிய மண்ணிலர் மணங் கமழ வைத்து வீறநடைபோட்டு வளர்த்துவரும் நாட்டிய ஆசிரியை வனிதா குகெந்திரன் கண்ணியத்துடனம் சேவை மனப்பாங்குடனும் செய்யும் சேவைகளைப் பாராட்டுகின்றேன்” என ஆசிரியையும் வாழ்த்தினார். புரதத்தின் கற்றுத்தரப்படும் நடன அம்சங்களைப் பொருள்விளங்கிக் கற்றுக்கொள்ளக்கூடியவளாக கிறிஸ்ரினா இருப்பதும் அவரின் நடனச் சிறப்புக்கு ஒரு காரணம். காதல், வீரம், கோபம் போன்றனவற்றின் பொருளை நன்கு புரிந்துகொள்ள முடியாதவர்களான பாலகர்களைக் கொண்டு நடனம் அரங்கேற்றுவதில் அவர்கள் அதன் பொருளை முழமையாக உணராது சொல்லிக் கொடுப்பனவற்றை ஒப்படைப்பவர்களாகவே உள்ளனர். ஆனால் கிறிஸ்ரினா தான் உணர்ந்து பாவங்களைத் தந்துள்ளார் என்றார்.

கலைக்கோயில் வனிதா குகேந்திரனின் மாணவி செல்வி கிறிஸ்ரீனா பெர்னாண்டோவின் பரத நாட்டிய அரங்கேற்றம்!நடனத்தின் சிறப்பு அம்சங்களையெல்லாம் சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்ட இசை அசிரியை சங்கீத பூஷணம் ஸ்ரீமதி கீதா இராஜசேகர் எடுத்துரைத்தார். பாவம், பதம், நளினம் பற்றி எல்லாம் கிறிஸ்ரீனா மேற்கொண்ட நடனத்தின் சிறப்புக்களைத் தனது வாழ்த்துரையில் அவர் சிறப்பாக எடுத்துரைத்தார். பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கலைமாமணி திருவாரூர் பக்தவக்சலம் அவர்கள் உரையாற்றுகையில் நான் சொல்லவேண்டியவை எல்லாவற்றையுமே கீதா இராஜசேகர் அவர்கள் சொல்லிவிட்டார். குpறிஸ்ரீனா நல்லபடியாகத் தனது நடனத்தை மேற்கொண்டுள்ளார். அதற்கு நடன ஆசிரியை வனிதா குகேந்திரன் நல்ல பயிற்சியைக் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு நான் வந்திருந்தபோது குகெந்திரனும் வனிதாவும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டேன். இந்த ஆண்டு அவர்கள் இருவருமே கணவன் மனைவியாக மிருதங்கமும் நட்டுவாங்கமும் செய்வது சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.

கலைக்கோயில் வனிதா குகேந்திரனின் மாணவி செல்வி கிறிஸ்ரீனா பெர்னாண்டோவின் பரத நாட்டிய அரங்கேற்றம்!இந்த நிகழ்வை குயின்ரஸ் துரைசிங்கம் தமிழில் தொகுத்து வழங்கினார். மிக நேர்த்தியாகத் தனக்களிக்கப்பட்ட பணியை நிறைவேற்றினார். ஆழகிய தமிழில் மிக அடக்கமாக அவரது தொகுப்பு அமைந்திருந்தது. முன்னணிக் கலைஞர்களாக பாடலை தந்தவர் திருமதி லசந்தி இராஜ்குமார், சிறந்த குரல்வளம் மிக்க அவரின்பாடல் சிறப்பாக அமைந்திருந்தமையைப் பலரும் பாராட்டியதைக் கேட்க முடிந்தது. வயலின் வித்துவான் அளவையூர் கேசவமூர்த்தியின் வயலினிசை நடனத்தைச் சிற்சில வேளைகளில் நட்டுவாங்கமாகவே செய்திருந்ததைக் கவனிக்கமுடிந்தது. மிருதங்கத்தை நடன ஆசிரியையின் கணவரான குகேந்திரன் கனகேந்திரம் தந்திருந்தார். அவர் தனது
மாணவர்களான அஸ்விந், கரிஸ் இருவரையும் புல்லாங்குழல், கடம், உடுக்கு, மோர்சிங் வாத்தியங்களை வாசிக்கவைத்திருந்தமை
இளையவர்களை ஊக்கமூட்டும் ஒன்றாக அமைந்திருந்தது. வீணை இசையை திருமதிபிரபா தயாளன் தந்திருந்தார். ஸ்ரீமதி லசந்தியின்
மாணவியான செல்வி சமந்தா பிரேமதாசன் தம்புரா இசைமீட்டார். மோத்தத்தில் தோடைய மங்களத்தில் தொடங்கி தில்லானாவில் முடிவடைந்தது அரங்கேற்றம் எந்தவித கழைப்போ சலிப்போ இல்லாது இறுதிவரை மிக உற்சாகமாக ஆடினார் கிறிஸ்ரீனா பிரதீப்.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கலைமாமணி திருவாரூர் பக்தவக்சலம் அவர்கள் உரையாற்றுகையில் நான் சொல்லவேண்டியவை எல்லாவற்றையுமே கீதா இராஜசேகர் அவர்கள் சொல்லிவிட்டாஇந்த அரங்கேற்றத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று வரவேற்று உபசாரம் சிறப்பாக அமைந்திருந்தது. திரு, திருமதி பிரதீப் பெர்னாண்டோ தம்பதியினரும் அவரது சகோதர்களும் நண்பர்களும் சிற்றுண்டிவகைகளோடு மட்டுமல்லாது இராஜாராம் உணவினையே இரவு விருந்தாகப் படைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊள்ளக் கழைப்பு நீங்க நடனத்தைத் தந்ததோடு மட்டுமல்லாது உடல்பசி தீரவும் வைத்தனர். பாராட்டாமல் விட முடியுமா?

 

இசை அரங்கேற்றமா? இசை அரங்கமா? ஆதிரை அதிரவைத்தார் அரங்கை!

- த.சிவபாலு எம்.ஏ.-


“கனடிய மண்ணில் இவ்விதமான ஒரு இசை அரங்கேற்றத்தை இதுவரை காணவில்லை” –முனைவர் பார்வதி கந்தசாமி

இசை அரங்கேற்றமா? இசை அரங்கமா? ஆதிரை அதிரவைத்தார் அரங்கை!

மிக எளிமையான தோற்றமும் புன்முறவல் தவழும் அப்பாவித்தோற்றமும் கொண்டவர் செல்வி ஆதிரை. ஆவரின் கர்நாடக இசை அரங்கேற்றம் கடந்த சனி மாலை (11.08.2007) சேர் யோன் மக்டொனால் கல்லூரி கலையரங்கத்தில் மண்டபம் கொள்ளாச் சனத்திரளின் மத்தியில் இடம்பெற்றது. பிரபல இந்திய கர்நாடக இசை, மிருதங்க, நடனக் கலைஞர்கள் முன்வரிசையை நிறைத்திருந்தனர். பெரும்பாலானான இசை ஆசிரியர்களும், நடன ஆசிரியர்களும் முண்டியடித்துக்கொண்டு முன்பக்கமாக வந்து இடம்பிடித்துக்கொண்டனர். இவ்விதமான ஒரு இசை அரங்கத்தினைக் காண அவர்கள் விளைந்ததில் உள்ள இரகசியத்தை ஆதிரையின் அரங்கேற்றம் வெளிக்கொண்டுவந்தது. இன்று அரங்கேற்றம் ஏதோ எல்லோரும் செய்கின்றார்களே நாமும் எங்கள் பிள்ளைக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பலர் மேற்கொள்ளும் அரங்கேற்றங்களைப் போலன்றி கல்வியின் தரத்தை அடைந்து தான் ஒரு அரங்கேற்ற நிலையை அடைந்துவிட்டேன் என்று மனத் திருப்தியோடு தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டு துணிச்சலோடு மேடையேறியவர்களுள் ஆதிரை சிறப்பிடம் பெறுகின்றார். ரொறன்ரோ பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியரான முனைவர் பார்வதி கந்தசாமி அண்மையில் நடந்த ஒரு நடன அரங்கேற்றத்தில் கனடிய மண்ணில் ஆதிரை சிவபாலனின் அரங்கேற்றம்போல எதனையும் காணவில்லை, அவர் நன்கு கற்றுத் தேறியபின் அரங்கேறியுள்ளார். அரைகுறையில் அரங்கேற்றம் செய்யவில்லை” என்று அவர் பகிரங்கமாகப் பேசியதை இங்கு
குறிப்பிடுவது பொருந்தும்.

“கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்றார் வள்ளுவர். அதன்வழி ஆதிரை இசை அரங்கேற்றம் செய்வதற்கு
முன்னராகப் பல மேடைகளில் பாடி உள்ளார் எனினும் இது அவர் கரைத்துக்குடித்த இசையின் பிரவாகத்தை வெளியே கொட்டித்தள்ளச் சந்தர்ப்பம் கிடைத்ததாகவே எனக்குப்பட்டது. இசை தெரியாதவர்களே தலையாட்டி இரசிக்கும் அளவிற்கு அவரது இசைக் கச்சேரி காணப்பட்டது என்பதிதை யாருமே மறுத்துரைக்க முடியாது. எதிலும் குறையும் குற்றமும் கண்டு அதனைத்துணிவோடு அந்த மேடையிலேயே தன்னை அழைத்துவிட்டார்களே என்றுகூடப் பார்க்காமல் இடித்துரைக்கும் தன்மைகொண்ட இசையரங்கம் வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களே எந்தப்பிழையையும் சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு ஆதிரையின் இசை அரங்கேற்றத்தை இது அரங்கேற்றம் அல்ல அது இசைக் கச்சேரி என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார் என்றால் அதற்கு மேலாக ஆதிரையின்
திறனைச் சொல்லத்தான் வேண்டுமா? ‘கன்றுக் குட்டிக்குப் பால்கொடுக்கக் கற்றுக்கொடுக்க வேண்டுமா” என்பதுபோன்று ஆதிரை இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இசையோடு வளர்ந்தவர். அம்மா ஜெயராணி இசை ஆசிரியை, தாத்தா சங்கீத பூ~ணம் இராஜலிங்கம் பெயர்பெற்ற கர்நாடக இசைமேதை. இவற்றைவிட ரொறன்ரோவில் மிருதங்கசேஸத்திரத்தை நிறுவி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வாத்திய இசையை நல்கிவரும் மிருதங்கவாருதி வாசுதேவன் இராஜலிங்கம் ஆதிரையின் அன்னையின் தம்பி (மாமா) இந்தச் சூழல்,
பாரம்பரியம் அவரை ஒரு புடம்போட்ட கர்நாடக இசைக்கலைஞராக ஆக்கித் தந்துள்ள காரணிகள் எனலாம். தாத்தாவும் பாட்டியும் ஆசீர்வதிக்க தனது இசை அரங்கத்தை மேற்கொண்டார்.

இசை அரங்கேற்றமா? இசை அரங்கமா? ஆதிரை அதிரவைத்தார் அரங்கை!

தனது மூன்றாவது வயதிலேயே இசைப்பயணத்தைத் தனது அன்னையிடம் இருந்தும் தாத்தா இராஜலிங்கத்திடமிருந்தும் தொடங்கியவர் ஆதிரை. ஆலயங்களில், இசை நிகழ்ச்சிகளில், இசை அரங்கங்களில் அவ்வப்போது பாடிப் பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்றுக்கொண்டவர். “விளையும் பயிரை முளையிலே தெரியம் என்பார்கள்” ஆதிரை முளையிலேயே ஒரு விருட்சமாக வளரக்கூடிய அறிகுறிகளைக் கொண்டவராக மட்டுமன்றி தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு முன்னேறியவர். அவர் இந்தியாவிற்குச்
சென்று அங்கு இசைவல்லாராகிய ஸ்ரீமதி பிரேமா ஹரிகரனைத் தனது ஆசிரியையாகப் பெற்று இசை நுணக்கங்களை எல்லாம் எட்டு ஆண்டுகளாகக் கற்றுவந்தார்.அது மட்டுமன்றி பாபநாசன் சிவனின் பேரரான அசோக்க ரமணியிடமும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது இசையைத் கூர்மைப்படுத்தியுள்ளார்.

இந்த இசை அரங்கத்திற்கு இந்தோ அமெரிக்க கலாச்சார மற்றும் சமய நிலையத்தின் தலைவியான பார்கவி சுந்தரராஜன் பிரதம
விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினராக அவரது ஆசிரியை பிரேமா ஹரிகரன் கலந்துகொண்டதோடு, பாபநாசம் அசோக் ரமணி, ஒன்ராறியே தமிழ் இசைக்கலா மன்றத்தின் தலைவர் தம்பையா ஸ்ரீபதி, பாரதி கலாமன்றத்தின் செயலாளர் நாயகம் வெங்கட்டராமன், இசையரங்கம் வைரமுத்து சொர்ணலிங்கம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர். இவர்களைவிட மிருதங்க வித்தகர் திருவாரூர் பக்தவக்சலம், உட்பட பல இந்திய கலைஞர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களின் முன் தனது திறமையைக் காட்டி தன்னை இசைவல்லாளராக நிலைப்படுத்திக்கொண்டார் ஆதிரை சிவபாலன்.

அவரது இசையரங்கத்தைச் சிறப்பித்த இசைக்கலைஞர்களும் உலகப்புகழ்பெற்ற இசைமேதைகளே. திருவாரூர் வைத்தியநாதன்
மிருதங்கத்தில் மிகவும் பெயர்பெற்ற கலைஞர் பல பரிசில்களைத் தட்டிக்கொண்டவர். அவர் மிருதங்கத்தை வாசித்தது மட்டுமன்றி
ஆதிரையின் திறனைப் பகிரங்கமாகப் பல இடங்களிலும் புகழ்நதுள்ளார் என்றால் அதற்குமேலாக ஆதிரைக்குச் சான்றிதழ்
வேண்டியதில்லையே.

பேராசிரியர் ரி.ஆர். சுப்பிரமணியத்தின் ‘வனஜாக்ஷ . .’ என்னும் கீர்த்தனத்தை பெகக் இராகத்திலும் ஆதி தாளத்திலும் இசைத்த அவர், வினா குப்பையரின் ‘விநாயகா . . .’ ஹம்சத்வனி இராகத்திலும் ஆதி தாளத்திலும், முத்துசுவாமி தீட்சதரின் ‘இராம சந்திரன் . .’ என்பதனை வசந்தா இராகத்தில் ரூபகதாளத்திலும், சுப்பையாரா சாஸ்த்திரிகளின் ‘ஜனனி நினுவினா. . .’ என்னும் கீர்த்தனை ரீதிகௌளி இராகத்தோடு மிஸ்ரசாப்பு தாளத்திலும், தியாகராஜரின் ‘மனவியல . .’ கீர்த்தனைத்தை நளினாகாந்தி இராகத்திலும் ஆதி தாளத்திலும், ‘ஏதாவுனரா . .’ என்னும் கீர்த்தனையை கல்யாணி இராகத்திலும் ஆதி தாளத்திலும், ஜி.என். பாலசுப்பிரமணியத்தின் ‘நீ அல்லால் இனி. .’
என்பது கானடா இராகத்திலும், ஆதி தாளத்திலும் இசைத்த அவரின் இசைப்பிரவாகத்திற்கு முத்தாய்ப்பு வைத்ததாய் அமைந்தது இராகம், தானம், பல்லவி அது ஹிந்தோள இராகத்திலும் கண்ட திரிபுட தாளத்திலும் அமைந்திருந்தது இதனை ஆக்கித்தந்தவர் அவரின் ஆசிரியை
பிரோமா ஹரிகரன் ஆவார். தொடர்ந்து பாபநாசம் சிவனின் ‘என்னதவம் செய்தேனோ . . “ என்னும் கீர்த்தனை காப்பி இராகத்திலும், மீரா பாயின் கிரு~;ணா கஹோ . .’ வை மதுகோன் இராகத்திலும், மகாராஜபுரம் சந்தானத்தின் ‘தில்லானா” சிவரஞ்சனி இராகத்திலும் இறுதியாக தியாகராஜரின் மங்களம் சோரஸ்ர இராகத்திலும் பாடி இசைக் கச்சேரியைக் கழைகட்ட வைத்திருந்தார் எனலாம். ஆதிரை மிக லாவகமாக இசையைக் கையாண்டார். ஆவரின் குரல் வளம், தன்னம்பிக்கை என்பனவற்றால் இசையில் உயர்ந்து நல்ல தரத்தை
எட்டியுள்ளார். அவர் தனது குரல் வளத்தை வளர்த்து உச்ச ஸ்தானியில் பாடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டுள்ளமை இசை அரங்கத்தின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த இசை அரங்கேற்றத்தின் முன்னணிக்கலைஞர்களாக மிருதங்கத்தை மிருதங்கமேதை திருவாரூர் வைத்தியநாதனும், வயிலினை ஸ்ரீமதி அக்கரை எஸ். சுபல~;மியும், கடத்தினை முனைவர் ரவி பாலசுப்பிரமணியனும், மோர்சிங்கை கனடிய கலைஞரான சுரேந்தர் சந்திரலிங்கம், செல்வி செந்தூரி சிகாமணி ஆகியோர் பங்குகொண்டு சிறப்பாகப் பணியாற்றிய ஒரு நிறைவான அரங்கேற்றத்தைக் கண்டுகழித்த மகிழ்ச்சியைப் பார்வையாளர்களிடையே பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரு இன்பகரமான நிகழ்வாக அமைந்தது.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய பார்கவி சுந்தரராஜன் ஆதிரையின் இசை அனைவரையுமே கவர்ந்துள்ளது. அவரின் இசைத்திறன் இன்று வெளியாகியுள்ளது. அவர் ஒரு சிறந்த கலைஞராகத் திகழ்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு என்று பாராட்டினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆதிரையின் இசை ஆசிரியரான பிரேமா ஹரிகரன் ஆதிரையின் ஆர்வம், அர்ப்பணிப்பு என்பனவே அவர் இசையில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் என்றார். தொடர்ந்து உரையாற்றிய சங்கீத வித்தகர் அசோக் ரமணி ‘ எனது பக்கவாத்தியக் கலைஞர்களின் சிறந்த கலைஞர்கள் இன்று ஆதிரையின் அரங்கேற்றத்திற்கு வாசித்துள்ளார்கள்.
மிருதங்க மேதை திருவாரூர் வைத்தியநாதனுக்குப் பாடுவதே மிகக் கடினமானது. ஆனால் அதிரை அவரையே திணற வைத்துள்ளார் தனது திறனால் என்று மனந்திறந்து கூறிப் பாராட்டிய அவர் எனக்கு வாசித்தது மட்டுமன்றி சிறந்த விருதுகளையும் பெற்றுக்கொண்டவர் வயலின் வித்துவான் ஸ்ரீமதி அக்கரை எஸ். சுபல~;மி அவர் மிகத் திறமையாக வயலினை இசைத்துள்ளர்ர். அதேபோன்று கடம் வாசித்த கலைஞர் டாக்கடர் ரவி பாலசுப்பிரமணியம் கடம்வாசிப்பதில் மிகவும் கைதேந்தவர். சுரேந்தர் தர்மலிங்கம் மோர்சிங்கில் மிகவும் தேர்ச்சிபெற்ற ஒரு கலைஞர் இவர்களை எல்லாம் ஆதிரை பெற்றுக்கொண்டு கச்சேரி நடத்தியது சிறப்பாக அமைந்தது. அவரின் குரல் வளம் மட்டுமன்றி இசைப் பரம்பரையும் அவரை ஒரு சிறந்த கலைஞராக ஆக்கியுள்ளது என்றார்.

தம்பையா ஸ்ரீபதி உரையாற்றும் போது ஆதிரையை மிகச்சிறு வயதிலிருந்தே எனக்குத் தெரியும் அவரின் குரல் வளமும் ஞானமும் எதிர்காலத்தில் ஒரு நல்ல கலைஞராக வருவார் என்பதனை காட்டி நின்றன என்றார். தொடர்ந்து உரையாற்றிய வைரமுத்து சொர்ணலிங்கம், நான் எங்கு பேசுவதானாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் பழக்கமுடையவன். ஆனால் ஆதிரையின் அரங்கேற்றம் எந்த சிறு தவறும் இன்றி நடந்தேறியுள்ளமை எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. அவர் இசையரங்கத்தில் முதல் தடவை பரிசு பெற்றுக் கொள்ளாவிட்டாலும் முயற்சியைக் கைவிடாது அடுத்ததடவை 1000 டொலர் பரிசைத் தட்டிச் சென்றவர். அவரின்
விடாமுயற்சியே அவரின் வெற்றிக்குக் காரணம் என்ற அவர், பல பெற்றோர்கள் நடன, இசை பழக்கும் தங்கள் பிள்ளைகள்
பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் முன்னர் அரங்கேற்றம் செய்யவேண்டும் என்று அரைகுiறியல் செய்கின்றார்கள். இது ஒரு டாம்பீக சடங்காக மாறிவிட்ட இந்த நாளில் ஆதிரை நன்கு பயின்று, அதனை மேம்படுத்த கடுமையாக உழைத்து அரங்கேற்றம் செய்துள்ளாள். இவள் தானாகவே இசையை எடுத்துச்செல்லமுடியும் என்பதனை இது காட்டுகின்றது என்றார். பாரதி கலாமன்றச் செயலாளர் வெங்கட்டராமன் உரையாற்றுகையில் மிகச் சிறந்து முறையில் இசையை ஆதிரை பயின்று இன்று அரங்கேற்றம் கண்டிருக்கின்றார்.
மன்றத்தினால் நடத்தப்படும் தியாகராஜர் விழாவில் ஆதிரை கலந்துகொண்டு பாடுவார். ஆவர் எமக்கோ இசைக்கோ புதியவர் அல்ல தனது தாயையே இசை ஆசிரியையாகக் கொண்டதோடு இசைப்பரம்பரையில் வந்தவள். ஆவள் கர்நாடக இசையில் மேலும் வளர்ந்து சிறக்கவேண்டும் என வாழ்த்தினார்.

ஆதிரை தனது பெற்றோரின் அளப்பரிய அர்ப்பணிப்பு, தனக்கு வாய்ந்த ஆசிரியப் பெருந்தகைகளின் தன்னலங்கருதாத சேவை
என்பனவற்றை நினைந்து நன்றிப்பெருக்கை வெளிப்படுத்தினார். தனது தாத்தா, மாமா, சகோதரன் முகந்தன் உட்பட அனைவருக்கும் நன்றிதெரிவித்ததோடு தனக்கு பக்கபலமாக இருந்த இசைக் கலைஞர்களை எல்லாம் பாராட்டினார். குறிப்பாக திருவாரூர் வைத்தியநாதன் வயலின் வித்தகி அக்கரை சுபல~;மி, கடம் தந்த கலாநிதி ரவி பாலசுப்பிரமணியம், மோர்சிங் கலைஞர் சுரேந்தர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து இரத்தினச் சுருக்கமாகத் தனது நன்றிக்கடனைத் தீர்த்ததோடு கலைஞர்களைக் கௌரவிக்கவும் அவர் தவறவில்லை.

பல தமிழ்ப் பாடல்களைப் பாடிப்பரிசில்களைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமன்றி இசைத்தட்டையே வெளியிட்ட அவர் கர்நாடக சங்கீத சாஸ்த்திரத்தின்படி தனது அரங்கேற்றத்தை மேற்கொண்டத்துணிந்ததோடு, மிகவும் கடினமன தெலுங்குக்கீர்தனங்களைப் பாடி இசை வல்லுநர்களையே வியப்பி;லாழ்த்தியிருந்தார். அவர் தனக்கும் தெலுங்கு உருப்படிகளை லாவகமாகக் கையாளமுடியும் என்பதனை நிரூபித்தும் காட்டியுள்ளார் என்பது பெருமையே. ஏதிர்காலத்தில் அவர் தனது மேடைகளில் தமிழாலே, தமிழுக்காய்ப் பாடுவார் என்பதில் சந்தேகமில்லை.

பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு விருப்பமானது எது, எந்தக் கலைத்துறையில் நாட்டம் உண்டு, என்பதனை அறிந்து செயற்படுவதோடு தங்கள் பிள்ளைகள் கலைகள் பற்றி அறிந்துகொள்ளவும் முனையவேண்டும் என்பதனை ஆதிரை வெளிப்படுத்தியுள்ளார்.

thangarsivapal@yahoo.ca


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner