| 
  இருங்கிச் சரியும் வேற்று நிறங்கள்!27வது பெண்கள் சந்திப்பு, கனடா!
 
 
  எதிர்வரும் 
  ஆகஸ்ட் மாதன் 1ம் திகதி மாலை 6.00 - 9.00 மணிவரையும், ஆகஸ்ட் 2ம் திகதி காலை 
  10.00 - மாலை 6.00 மணிவரையும் 'ஸ்கார்பரோ சிவிக் சென்டர்' மண்டபத்தில் 27வது 
  பெண்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து கனேடிய இலக்கியச் சந்திப்பு 
  மேற்படி மண்டபத்தில் ஆகஸ்ட் 3ம் திகதி காலை 10.00 - மாலை 6.00 மணிவரையில் 
  நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'ஃபெயர் வியூ' நூலகத் தியேட்டரில் ஆகஸ்ட் 4ம் 
  திகதி மாலை 4.00- 8.00 மணிவரையில் நாடகங்கள் நடைபெறவுள்ளன. 
 மேற்படி பெண்கள் சந்திப்பில் மாலதி மைத்ரி, சுதா குமாரசாமி, நிர்மலா ராஜசிங்கம், 
  ஜானகி பாலகிருஷ்ணன், யுவனிதா நாதன், பார்வதி கந்தசாமி, விஜி, நிவேதா, குறமகள், 
  மொனிக்கா, றஞ்சி, ஜோதி பிரபாகரன், கலைவாணி இராஜகுமாரன் ஆகியோர் ஆய்வுக் 
  கட்டுரைகள் வாசிக்கவுள்ளனர். அத்துடன் ஆரதி, உஷாந்தி ஆகியோரின் ஓவியங்கள் 
  பார்வைக்கு வைக்கப்படும்.
 
  மேலதிக விபரங்களுக்கு 416.282.2834, 
  416.347.5087, 416.727.2391 ஆகிய தொபைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 
  விரிவான தகவல்களுக்கு இங்கு
  அழுத்தவும்.
 தகவல்: சுமதி ரூபன்
 thamilachi2003@yahoo.ca
 |