செ. முஹம்மது யூனூஸ் அவர்களின் எனது பர்மா
குறிப்புகள் நூல் வெளியீடு!
அன்புடையீர், செ. முஹம்மது யூனூஸ் அவர்களின் எனது பர்மா குறிப்புகள் என்ற நூல்
சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது.
நாள்: 31 டிசம்பர் 2009, மாலை 6:30
இடம்: காலச்சுவடு அரங்கம், செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகம், பச்சையப்பன்
கல்லூரி எதிரில், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30
வெளியீட்டு நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை நடைபெறவிருக்கும் புத்தகக்
கண்காட்சியில் காலச்சுவடு அரங்கில் நூல் கிடைக்கும்.
நூல் அறிமுகம்: எனது பர்மா குறிப்புகள் - செ. முஹம்மது யூனூஸ் -
தொகுப்பு: மு இராமனாதன் -
செ. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து
ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள்
வாழ்ந்த, பிறந்து வளர்ந்த 'பர்மியத் திருநாட்'டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார்.
தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் தொடங்குகின்றன யூனுஸின்
பதிவுகள். இரண்டாம் உலகப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய
சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட
வாழ்வுரிமைச் சிக்கல்கள் என்று தொடரும் இப் பதிவுகள், கணிசமான இந்தியர்கள்
பர்மாவிலிருந்து வெளியேற நேர்ந்தது வரை நீள்கிறது. இந்தக் குறிப்புகள் பர்மீயத்
தமிழர்களின் வாழ்வு, கலாச்சாராம், கலை, இலக்கியம் அனைத்தையும் தொட்டுச்
செல்கிறது. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது
எல்லையற்ற நேசமும் கொண்ட யூனூஸின் பதிவுகள், ஒரு காலகட்டத்தின் சமூக வாழ்வையும்
வரலாற்றையும் ஒரு சேரச் சொல்லிச் செல்கிறது; புலம் பெயர் வாழ்வின் உவப்பையும்,
அலைந்துழல்வையும் படம் பிடிக்கிறது. பர்மீயத் தமிழ் வாழ்வு குறித்த பதிவுகள்
மிகக் குறைவாக உள்ள சூழலில், இந்த நூல் ஒரு பெட்டகமாக விளங்கும்.
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001, தொலைபேசி: 91-4652-278525, தொலைநகல்:
91-4652-231160, 402888
தொடர்புக்கு: இணையதளம்-www.muramanathan.com;
மின்னஞ்சல்-mu.ramanathan@gmail.com
mu.ramanathan@gmail.com
**********************
ஜெயந்தி
சங்கரின் நூல்கள் வெளியீடு!
2009 ஆம் ஆண்டில்
1) குவியம் - நாவல்/புதினம்
2) ச்சிங் மிங் - கட்டுரைத்தொகுப்பு
3) கனவிலே ஒரு சிங்கம் - கட்டுரைத்தொகுப்பு
ஆகிய எனது 3 நூல்கள் பிரசுரமாகியுள்ளன என்பதை நண்பர்கள் அனைவருடனும்
பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.
அன்புடன்,
ஜெயந்தி சங்கர்
http://jeyanthisankar.blogspot.com/
jeyanthisankar@gmail.com
***************************
கூடு இரண்டாம் இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு
உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.
http://koodu.thamizhstudio.com/
www.koodu.in
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
thamizhstudio@gmail.com
******************************
எழுத்தாளர்
சோ.சுப்புராஜ் வலைத்தளம்!
அன்புள்ள நண்பர்களே!
தமிழில் நானொரு வலைப் பதிவு தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படைப்பிலக்கியங்களை
இதில் பதிந்து வைக்கும் உத்தேசம்.
உங்களூக்கு அவகாசமும் பொறுமையுமிருந்தால் பதிவுகளைப் பார்வையிட்டு உங்களின்
கருத்துக்களைத் தெரிவியுங்களேன்!
என்னுடைய வலைப் பதிவு முகவரி:
www.silviamary.blogspot.com
நன்றி!
அன்புடன்
சோ.சுப்புராஜ்
engrsubburaj@yahoo.co.in |