ஜெயந்தி சங்கருக்கு 'நல்லி திசையெட்டும் விருது 2009'
சீனக்
கவிதைகளின் மொழிபெயர்ப்பாக ஜெயந்தி சங்கர் எழுதித் தொகுத்து 2007ல் அச்சான
'மிதந்திடும் சுயபிரதிமைகள்' நூலுக்கு 'நல்லி திசையெட்டும் விருது 2009' அளிக்கப்
பட்டிருக்கும் செய்தி இப்போது தான் கிடைத்துள்ளது. அந்த நூலுக்கு தான் போட்ட
கடுமையான உழைப்புக்குக் கிடைத்த ஒரு சிறு அங்கீகாரமாகவும், தொடர்ந்து
இலக்கியத்தில் தான் இயங்குவதற்கான சின்ன ஒரு ஊக்கமாகவும் தான் அவ்விருதைக்
கருதுவதாகக் கூறும் ஜெயந்தி சங்கர் அந்நூலைப் பதிப்பித்த உயிர்மைக்கு இவ்வேளையில்
நன்றி சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி என்றும் கூறிக் கொள்கின்றார்.
பாராட்டுகள்!
தமிழ் ஸ்டுடியோ.காம்
ஆகஸ்ட்
மாத மடல் போட்டி. (கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009. )
தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது.
இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக
வழங்கப்படும். மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ்
பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன்
கலந்துரையாடலாம்.
முதல் மாத மடல் போட்டி இனிதே நடந்து முடிந்தது. அடுத்து ஆகஸ்ட் மாத மடல் போட்டி
நடைபெற உள்ளது. எனவே இதிலும் ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
முதல் மாத மடல் போட்டி பரிசளிப்பு விழா:
http://thamizhstudio.com/ezhuthungal_madal_july.htm
மேலும், முதல் மாதம் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சிலக்
கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.
அவை:
* மடல் எழுதுவதற்கு தலைப்பை நீங்களே தெரிவு செய்துக் கொள்ளலாம்.
* பக்க கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதி
அனுப்பலாம்.
* மடல்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009.
மற்ற அணைத்து நிபந்தனைகளும் எல்லா மாதங்களுக்கும் பொருந்தும். மடல் அனுப்பும்
முன்னர் அறிவிப்பு பகுதியில் உள்ள எல்லா நிபந்தனைகளையும் படித்து பார்க்கவும்.
நிபந்தனைகள்:
http://thamizhstudio.com/ezhuthungal_madal.htm
மடலை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி,
சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள்,
சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்கள், என யாருக்கு வேண்டுமானாலும்
நீங்கள் மடல் எழுதலாம். சமூதாயப் பிரச்சனை, உணர்வுகள் சார்ந்த பிரச்சனை என்று
எந்தத் தலைப்பிலும் நீங்கள் மடல் எழுதலாம்.
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
thamizhstudio@gmail.com
முத்துக்கமலம்
இணைய இதழ் படியுங்கள்!
அன்புடையீர்,
வணக்கம். முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
போன்ற புதிய பதிவுகளுடன் முன்பு பதிவு செய்யப்பட்ட ஏராளமான படைப்புகளும் சேர்ந்து
முத்துக்கமலம் மாதமிருமுறையாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
முத்துக்கமலம் பார்வையிட:
http://www.muthukamalam.com/homepage.htm
உங்கள் மேலான கருத்துக்களும் படைப்புகளும் வரவேற்கப்படுகிறது...
தேனி.எம்.சுப்பிரமணி
ஆசிரியர்,
முத்துக்கமலம் இணைய இதழ்
** தமிழ் தெரிந்த தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்தக் கடிதத்தை
பரிந்துரை செய்து அனுப்பி உதவுங்கள்.
msmuthukamalam@yahoo.co.in
பாரதம்:
தலைநகரில் தமிழ்ப் பள்ளிகள் - ஒரு கலந்துரையாடல்!
- யதார்த்தா கி.பென்னேஸ்வரன் -
தலைநகரில்
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் ஏழு தமிழ்ப்
பள்ளிகளை நடத்தி வருகின்றது. தலைநகர் தமிழர்களின் பெருமையைப் பல்லாண்டுகளாகப்
பறைசாற்றி வருபவை இப்பள்ளிகள். இப்பள்ளிகள் பல மேதைளையும் கலைஞர்களையும் இந்த
சமூகத்துக்கு அளித்துள்ளன. இந்தத் தமிழ்ப் பள்ளிகளின் மேலாண்மை,
செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தல் குறித்த உங்கள் கருத்துக்களையும்
ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். உங்கள் பாராட்டுக்கள், ஆலோசனைகள், முறையீடுகள்
போன்றவற்றை எங்களுக்கு கடிதம், தொலைநகல், மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்.
சரியான பெயர், முழுமையான முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்ட
கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் மட்டுமே வடக்கு வாசல் இதழிலும் இணையத்திலும்
வெளியிடப்படும்.
நம் குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் மேம்பாட்டில் அக்கறை கொண்ட அனைவரும்
இந்த விவாதத்திலும் ஆலோசனையிலும் கலந்து கொள்ளலாம். தில்லித் தமிழ்க் கல்விக்
கழகத்தில் பயின்ற மாணவ மாணவியர் இப்போது உலகின் பல இடங்களிலும் மிக நல்ல
பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களும் இந்த விவாதம் மற்றும் ஆலோசனையில் இணையம்
வழியாகவோ நேரிடையாகவோ கலந்து கொள்ளலாம். .
வடக்கு வாசல் இதழ் மற்றும் வடக்கு வாசல் இணையதளத்தில் கடிதங்கள், கட்டுரைகள்
மற்றும் ஆலோசனைகளை வெளியிடுவோம். கடிதம் அல்லது கட்டுரை எழுதியவர்கள்
விருப்பப்பட்டால் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடைய பெயர்கள்
ரகசியமாக வைக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளில் வடக்கு வாசல் இதழின் குறுக்கீடு
எதுவும் இருக்காது.
உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்.
யாத்ரா பென்னேஸ்வரன்,
ஆசிரியர்
வடக்கு வாசல்
5A/11032, Second Floor
Gali No.9, Sat Nagar
Karol Bagh, New Delhi-110 005.
தொலைபேசி/தொலைநகல் - 011/25815476
raghavanthambi@gmail.com
தமிழகம்: பாரதி இலக்கியச்
சங்கம்
இலக்கியக் கலந்துரையாடல்
இலக்கியக்
கலந்துரையாடல். நாள்: 23.8.2009 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மணி 2. இடம்:
மதி மருத்துவமனை (புதிய கட்டடம்)
23137/8 பெருமாள்நகர், விஸ்வநந்தம், சிவகாசி
புனைவும், யதார்த்தமும் சந்திப்பில் சிறுகதைகள் எனும் தலைப்பில்
கலந்துரையாடல். புதிய நூல்கள் வரவு:: Changes -
நிதர்சபிரகாஷ்; மறைவாள் வீச்சு - திலகபாமா. நம்மோடு இசையோடு..... இராசை
உமாசங்கர்
அனைவரும் வருக! இலக்கியம் பருக!
mathibama@yahoo.com |