இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

கனடா: மிருதங்க அரங்கேற்றம்: சகோதரர் இருவர்! ஒரே மேடை! அரங்கேற்றங்கள் இரண்டு! வாசுதேவன் இராஜலிங்கத்தின் மாணவரின் மிருதங்க அரங்கேற்றம்!  - கலாரசிகன் -
மிருதங்க அரங்கேற்றம்: சகோதரர் இருவர்! ஒரே மேடை! அரங்கேற்றங்கள் இரண்டு! வாசுதேவன் இராஜலிங்கத்தின் மாணவரின் மிருதங்க அரங்கேற்றம்!கனடிய மண்ணில் புலம்பெயர்ந்த நம்மவர்கள், தங்களோடு சுமந்துவந்த பாரம்பரியங்களைக் கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலை எமது கலைப் பாரம்பரியங்களை அழிந்துவிடாது புதுமெருகுடன் மெத்த வளரவைக்கும் பாங்கினை இசை, நடன ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் அதேவேளை தமக்குக் கிடைக்காத வாய்ப்புக்களைத் தங்கள் பிள்ளைகளாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்னும் அவாவோடு பெற்றோர் அவர்களுக்கு இசை, நடனம், போன்ற கலைகளில் ஈடுபாடு கொள்ளவைத்துவருவது கருத்திற் கொள்ளத்தக்கது. கடந்த 21.6.2008 மாலை ஆர்மேனியன் கலையரங்கில் இடம்பெற்றது 13வயதான லதன் அசோக்குமார், 10வயதான அனுயன் அசோக்குமார் சகோதரர்களின் மிருதங்க அரங்கேற்றம். மிருதங்க ஞானவாருதி வாசுதேவன் இராஜலிங்கத்தின் மிருதங்க ஷேஷ்த்திரத்தின் மாணவர்களான இவர்கள் இருவரும் தங்கள் நான்காவது வயதிலிருந்து மிருதங்க இசையைப் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியவர் பிரபல அறிவிப்பாளரும் ஊரவருமான வி.என். மதியழகன் ஆவார். அழகிய தமிழில் மிக லாவகமாக அவர் கலைஞர்களையும், அரங்கேற்ற நாயகர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். இதனை அவரோடு இணைந்து செல்வி விஜிதா சுரேந்திரா ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துவைத்தார்.

மிருதங்க அரங்கேற்றம்: சகோதரர் இருவர்! ஒரே மேடை! அரங்கேற்றங்கள் இரண்டு! வாசுதேவன் இராஜலிங்கத்தின் மாணவரின் மிருதங்க அரங்கேற்றம்!வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் ஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் ஆராதனை வழிபாட்டுப் பூசைபோட்டு ஆரம்பித்து வைத்தார். மங்கல விளக்கேற்றினர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள். தொடர்ந்து திரு, திருமதி அசோக்குமார், கிரிஜா தம்பதியினர் தமிழிலும் ஆங்கிலத்;திலும் வரவேற்புரை நிகழ்த்தினர். இவ் அரங்கேற்றத்திற்கு பிரபல இசை வித்தகர் சங்கீத பூஷணம், இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் வாய்ப்பாட்டு இசையும், பிரபல வயலின் வித்தகர் ஜெயதேவன் நாயர் வயலின் இசையையும் நல்கினர்
.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முன்னைநாள் கொத்தணி
அதிபர் திரு. த. சிவபாலு அவர்களும் பிரபல ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டிட் ரமேஷ்; நாராயன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பு@ விலோ பாடசாலையின் துணை அதிபர் வின்சன்றி அனானியா அவர்களும் கலந்து கொண்டு லதன், அனுயன் சகோதரர்களைப் பாராட்டி உரை நிகழ்த்தினர். இசைக் கலைஞர் ரமேஷ் நாராயன் மாதா, பிதா, குரு தெய்வம் என்பதனை எடுத்துரைத்து அதற்கான ஒரு ஹிந்துஸ்தானிப்பாடலையும் பாடிக்காட்டினார்.

இவ்வரங்கேற்றத்தில் பின்னணிக் கலைஞர்களாக சுரேந்தர் தர்மலிங்கம் கஞ்சிரா இசையினையும், நலக்ஷன்ஸ்ரீகுமார் கடத்தினையும், ராதுஷன் யோகலிங்கம் மோர்சிங்கையும், செல்வி துளசி அசோக்குமார் தம்புரா இசையையும் நல்கினர். இவ்வரங்கேற்றத்திற்காக பொன். சுந்தரலிங்கம் அவர்கள் கல்யாணி இராகத்திலமைந்து வனஜாக்;ஜி என்னும் வர்ணத்தில் ஆரம்பித்து ஹம்சத்துவனி இராகத்திலமைந்த விநாயகா நின்னு என்னும் கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடலையும் ஊற்றுக்காடு வெங்கடசுப ஐயரின் ‘ஆடாது அசங்காது…’ என்னும் மத்திமாவதியில் அமைந்த பாடலையும், தியாகராஜரின் நவரசகானடா ராகத்தில் அமைந்த ‘நின்னு விநா. .’ என்னும் பாடலையும், ஹிந்தோளத்தில் அமைந்த ‘ஷாமஷ வர.’ பாடலையும், ரேவதி ராகத்திலமைந்த தயானந்த சரஸ்வதியின் ‘போ சம்போ ’ வைத் தொடர்ந்து ஷண்முகப்பிரியாவிலமைந்த பாபநாசம் சிவனின் ‘பார்வதி நாயகனே. .’ பாடலைத் தொடர்ந்து சிந்துபைரவியலமைந்த வீரமணி ஐயரின் ‘நாதம் கேட்குதடி’ ஊத்துக்காடு வெங்கட சுபஐயரின் கானடா
இராகத்திலமைந்த ‘அலைபாயுதே’ தொடர்ந்து நாவண்ணனின் ஈழுத்து விடுதலைப் பாடல் ஒன்றையும், தொடந்து வீரமணி ஐயரின் வண்ண வண்ணச் சேலை கட்டி. .என்னும் பாடலைத் திலாங் இராகத்திலுர்ம் பாடியதோடு சுவாதி திருநாளின் தில்லானாவோடு திருப்புகள் மங்களம் பாடி முடித்தார்

இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம். இதற்கு இரு சகோதரர்களும் சிறு குழந்தைகளாக இருந்தபோதிலும் அவர்களின் வயதிற்கு மீறிய ஆற்றலை வெளிப்படுத்தினர். ருhகம், தானம், பல்லவி மிக லாவகமாக வாசித்துப் பாராட்டைப் பெற்றுக்கொண்டனர். இடக்கையும், வலக்கையும் பாவிக்கும் சகோதர்கள் மேடையில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர்.  ஆனாலர் அவர்களின் மிருதங்கப் பக்கம் வலங்கையாக இருந்தமை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களோடு 7 வயதான அவர்களின் சகோதரி துளசி தம்புராவை ஆரம்பம் முதல் இறுதிவரை மீட்டிச் சாதனை படைத்தார். இவர்களோடு ராதுசன் யோகலிங்கம் தனது மோர்சிங் முதன் முதலாக மேடையில் இசையை இசைத்து தனது குரு வாசுதேவனின் பாராட்டைப் பெற்றுக்கொண்டதோடு, சபையோரின் பலத்த கரவொலியையும் பெற்றுக்கொண்டார். இந்த அரங்கேற்றததில் நிலக்~ன் ஸ்ரீகுமார் புதியவராக இருந்தபோதிலும் கடத்தை ஈற்றில எறிந்து ஏந்தியும் காட்டி பாராட்டைப் பெற்றுக்கொண்டார். மொத்தத்தில் மிகவம் சுவாரஷயமாக அமைந்திருந்தது இந்த இன்னிசை நிகழ்வு. ஒரு இசை வல்லுநரின் இசைக்கச்சேரியைக் கேட்ட நிறைவு.

கனடா: மிருதங்க அரங்கேற்றம்: சகோதரர் இருவர்! ஒரே மேடை! அரங்கேற்றங்கள் இரண்டு! வாசுதேவன் இராஜலிங்கத்தின் மாணவரின் மிருதங்க அரங்கேற்றம்!  - கலாரசிகன் -இளையவர்களின் அரங்கேற்றம் என்பது இன்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்திய மண்ணில் அரங்கம் காணும் இளையவர்கள் தொலைக் காட்சிகளில் தோன்றித் தங்கள் திறன்களைக் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளமை போன்று இங்கும் அந்த நிலை உருவாகும் நிலை தூரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

thangarsivapal@yahoo.ca


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner