“பாரதியின் கனவு மெய்ப்பட” கனடிய மண்ணில் பாரதிக்கு நினைவு விழா!
- கலாரசிகன் -
பாரதியின் கனவு மெய்ப்பட எனப் பாரதியின் நினைவு நாளைக் கொண்டாட ஒரு அமைப்பு கடந்த
ஒக்டோபர் மாதம்
உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை உருவாக்கவேண்டும் என முன்னின்று உழைத்தவர்களுள்
கலைஞர் மதிவாசன் முக்கியமானவர்.
முதிவாசன் தம்பதியினரால் இயக்கப்படும் பாரதி கலைக்கோயில் இசைப் பள்ளி பாரதிமீது
அவருக்கு உள்ள அதீத ஈடுபாட்டை
எடுத்துக்காட்டுகின்றது. அது மட்டும் அன்றித் தனது பிள்ளைகளுக்கே பாரதியின்
சிந்தனையை மீட்டுப்பார்க்கத் தக்க பெயர்களைச்
சூட்டியுள்ளார். பாரதிக்குப் பாரதி பிறந்த பாரத நாட்டிலேயே எடுக்கப்படாத நினைவு
நாளை மிகச் சிறப்பாக எடுத்து உலகெங்கும்
அதன் பெருமை ஒலிக்கவைக்கவேண்டும் என்பதே ‘பாரதியின் கனவு மெய்ப்பட . . .’ என்னும்
விழாவின் குறிக்கோளாக
அமைந்திருந்தது. மிகக் குறகிய காலத்திற்குள் பாரதியின் 125வது தினத்தைக் கொண்டாட
முடிவு செய்யப்பட்டமை பெருமளவில்
அல்லது பரந்த அளவில் அதனை மேற்கொள்ளமுடியாமைக்கு ஒரு காரணமாக அமைந்திருந்தாலும்
விழாவைக் கன கச்சிதமாகக்
குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்திருந்தமை ஏற்பாட்டாளர்களின் முயற்சிதான் என்று
குறிப்பிடலாம். பாரதி மேற்கொண்ட
முயற்சிகள் வெளி உலகிற்குக் கொண்டுவரப்படாமைக்கான காரணங்கள் பற்றிய கருத்து இந்த
அமைப்புக் குழுக்கூட்டத்தில்
கலந்துரையாடப்பட்டது. பாரதியின் பாடல்களை மட்டும் நாம் ஓரளவிற்குத் தெரிந்து
வைத்திருந்தாலும் கூடப் பாரதியின் ஏனைய <
வேலைகள் பற்றி அறியாதவர்களாக இருப்பதற்கு அவர் செய்த பணிகளை வெளியே கொண்டுவர
முயற்சி செய்யாதமையே
காரணம் எனக் கொள்ளலாம்.
பாரதியார் கவிஞராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, மொழி பெயர்ப்பாளராக, அரசியல்
வாதியாக, விடுதலை
வேட்கையாளராக, சமுதாய சமத்துவ வாதியாகப் பல முகங்களில் செயற்பட்டுள்ளார் அவரின்
அளப்பரிய பணிகள் வெளியே
கொண்டுவரப்படாமலே உள்ளன. நம்மாழ்வார் மீது அளப்பரிய காதல் கொண்டிருந்த பாரதியார்
‘நம்மாழ்வாரின் திருவாய் மொழி’
என்னும் பாடல் தொகுதியை மொழிபெயர்த்துள்ளார். அது மட்டுமன்றி “நாச்சியார்ப் பதிகம்”
“திருப்புகழ்” ஆகியவற்றையும்
பாரதியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்றால் அவரின் ஆங்கில ஆற்றல்
சாதாரணமானதல்ல.
பாரதியார் ஆங்கிலப்
பத்திரிகை ஆசிரியராக இருந்து அதனை நடத்தியும் வந்துள்ளார்.
பாரதியின் சில பாடல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்பதும்
குறிப்பிடத்தக்கது. பாரதியின் ‘மனதில் உறுதி
வேண்டும்’ போன்ற பல பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. எனினும் பாரதியின்
அனைத்துப் பாடல்களும்
மொழி பெயர்க்கப் படவேண்டும் என்பதே ஆதங்கமாகக் கொண்டுள்ளது இந்த பாரதியின் கனவு மெய்ப்பட என்னும் அணியின்
நோக்கம்.
கடந்த 14. 12. 2007அன்று பி.ப. 6.45 அளவில் கனடாக் கந்தசாமி கோயில் மண்டபத்தில்
இடம்பெற்றது பாரதியின் கனவு
மெய்பப்பட . . நிகழ்வு. செல்விகள் அபிஷா கலாதரன், யாழினி , ஷாழினி கதிர்காமநாதன்
ஆகியோரின் கனடிய
தேசியகீதத்துடனும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது பாரதி நினைவு விழா. இந்த
விழாவினை முன்னணிச் சமூகசேவகரும்
நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளரும், நடிகருமான கதிர் துரைசிங்கம் தொகுத்து
வழங்கியதோடு மட்டுமன்றி அனைவரையும் வரவேற்றும் உரை நிகழ்த்தினார். தோடர்ந்து நடன
ஆசிரியை மாலினி பரராசசிங்கமும் மாணவியரும் இணைந்து பாரதியின் நினைவாக நாட்டிய
நாடகம் ஒன்றை மேடையேற்றினர். நடன ஆசிரியை மாலினியின் பாரதியின் தோற்றம் அனைவரையும்
வியக்க வைத்தது. பாரதியின் ‘எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய
நெஞ்சம் வேண்டும், தெளிந்த
நல்ல்றிவு வேண்டும், பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல, நண்ணி நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும்
அன்னாய்! ஏனப் பாரதி வேண்டுவதனை நிகழ்வாகவே காட்டினர் நடன மாதர். பாட்டுக்கொரு
புலவனாய், பெண்குலத்தின்
விடுதலை வேட்கையாளனாய் அவனது கருத்துக்களைப் பிரதிபலிக்க வைத்தது நாட்டிய நாடகம்.
செல்வன் தட்சணன் உதயகுமார் பாரதிபற்றி உரையாற்றினார். அவர் பாரதியின் பணிகள் அவரின்
வாழ்க்கை வரலாறு, கவிதைகள்
பற்றி தெளிவான ஒரு உரையைத் தந்தார். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் எங்கும்
காணோம் என்ற பலமொழிப்
பாண்டித்தியம் பெற்ற பாரதியே சொல்லியுள்ளார் என்ற அவர் ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வழி செய்தல்
வேண்டும்’ எனவும் ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றெண்ணியிருந்தவர் தலை
கவிழ்ந்தார் என்னும் பாடல் வரிகைள
எல்லாம் எடுத்துக்காட்டி உரை நிழ்த்தினார்.
தொடர்ந்து அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் பாரதிக்கு விழா எடுப்பதற்கான நோக்கம் பற்றி
உரையாற்றினார். ஆவர்
உரையாற்றும்போது பாரதி தொடாத பகுதிகள் ஒன்றுமே இல்லை அவர் நாத்திகனாகவும் அதே நேரம்
ஆத்திகனாகவம்
பக்திமானாகவும் தேசிய விடுதலை வேட்கையாளனாகவும், சமுதாய சீர்திருத்த வாதியாகவும் பல
முகங்களில் பல கோணங்களில்
பாடல்களைப் பாடி உள்ளதோடு மட்டுமன்றி அவரின் சீர்திருத்தக் கருத்துக்களைத்
தந்துள்ளமையை நினைவு கூர்ந்தார். பாரதியின் <
சமூக நோக்கம் பற்றிக் குறிப்பிட வந்த அவர் இனியொரு விதி செய்வோம், தனியொருவனுக்கு
உணவில்லை எனின் சகத்தினை
அழித்திடுவோம் எனச் சங்கநாதம் செய்தான் என்றால் அவர் எல்லோரையும் விஞ்சிய ஒரு
கவிஞனாக நிமிர்ந்து நிற்கின்றார். எந்த
மொழியிலும் யாரும் இதுவரை இப்படியான கருத்தைத் துணிந்து சொன்னதாக இல்லை. அறிஞர்
மாஸ்லோவின் கொள்கையை
பாரதியின் கொள்கையோடு ஒப்ப நோக்கி உரையாற்றினார் அதிபர் அவர்கள். மனிதனது உளவியல்
தேவைகள் பற்றி மாஸ்லோ
குறிப்பிட்ட பாதுகாப்புத் தேவை, பட்டினி இன்றி வாழ்வதற்கான வாழ்வாதாரத் தேவை,
சுயகௌரவத் தேவை, கணிப்புத்தேவை,
அன்புத்தேவை, போன்றனவற்றைப் பாரதி “காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம்
வேண்டும் என்னும் பாடலில் எடுத்துக்
குறிப்பிடுகின்றார். அதாவது அங்கு தென்னைமரம், வீடு, நிலவொளி, காற்று ஆகியவை
கிடைக்க வேண்டும் என அவர்
வேண்டுகோள் விடுப்பது அதனை வெளிப்படையாகக் காட்டுகின்றது என்றார். மதிவாசன் அவர்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னரே பாரதியின் பாடல்களை உள்ளடக்கி ஒரு இசை நாடாவை வெளியிட்டிருந்தார். இந்த
விழா அடுத்த ஆண்டிற்கு
ஆங்கிலத்திலும், இவைபற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற வழிவகுக்கபடும் என்றும்
குறிப்பிட்டார். பாரதியார்
பற்;றிக்குறிப்பிடும்போது பாரதி இந்த நூற்றாண்டுக்கு மட்டுமன்றி இந்த யுகத்திற்கே
உரியவன். பாரதியின் பாடல்கள் ஆங்கிலத்தில்
மொழிபெயர்க்கபட்படிட்டிருந்தால் அவருக்கும் தாகூருக்குக் கிடைத்ததுபோன்று நோபல்
பரிசி கிடைத்திருக்கும் அவருக்கு அது
கிடைக்காமல் போனமைக்கு அவரது பாடல்கள் மொழிபெயர்க்கப்படாமையே யாகும் என்றார்.
பிரபல சிறுகதை எழுத்தாளரான குரு அரவிந்தன் உரையாற்றும்போது பாரதியின் கவிதை நயம்
பற்றியும் அவர்
சமுதாயத்திருத்தத்திற்காக நாட்டின் விடுதலைக்காக மேற்கொண்டு உழைத்தமையையும் அவர்
அவற்றிற்காக எழுதிவடித்த
பாடல்களையும் எடுத்துக் காட்டி உரையாற்றினார். பாரதியின் இந்த நாளை நினைவு
கொண்டாடும் இன்று இளைஞர்களைக்
காணமுடியவில்லை. அவர்களுக்கு எமது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாதவர்களாக
நடந்துகொள்ளுகின்றார்கள்
என்ற ஆதங்கத்தையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடன ஆசிரியை செந்தூர்ச் செல்வி இரத்தினேஸ்வரனின் மாணவி அபிரா சிவகுமாரன்
“மழையே வா. . .”என்னும்
பாடலுக்கு நடனந்தந்தார். பாரதியின் கருத்தாழம் மிக்க அந்தப் பாடல்வரிகள் மிக
இசையோடு இசைக்கப்பட்டிருந்தமை <
குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் சிவபாலு அவர்கள் “கல்வித்துறையில் பாரதி” என்னும் பொருளில்
உரையாற்றும்போது பாரதியின் கவிதைகள் எந்த
நிலையில் உள்ளமாவர்களக்கும் கற்பிக்கத்தக்கவை. பாப்பாப் பாடல் தொடக்கம் பாஞ்சாலி
சபதம் வரையும் அவரது பாடல்கள்
சமுதாய உணர்வை ஊட்டுபவை, விடுதலை வேட்கையை சுடர்விட வைப்பவை, நாட்டுப்பற்றை மனதில்
ஏற்படுத்துபவை
எனக் குறிப்பிட்டதோடு பாரதி பிறந்த நாட்டில் பாரதி வாழ்ந்த காலத்திற்கும் இன்று
தமிழ் ஈழத்தில் உள்ள காலகட்டத்தையும் ஒப்பு
நோக்கினார். தான் பிறந்த மண்ணில் வாழமுடியாது அவர் புதுவைக்கும் காசிக்கும் சென்று
மறைந்திருந்து வாழ்ந்த நிலையை
ஒப்பிட்டதோடு, அவர் மேற்கொண்ட கல்விப்பணியையும், சமுதாயப் பணியையும் பற்றிக்
குறிப்பிட்டபோது பாரதிதாசன்,
வா.உ.சிதம்பரனார் பாரதியாரைத் தரிசித்தமை பற்றியும் குறிப்பிட்டார். பாரதியின்
சமுதாய நோக்கு அனைத்து மக்களையும்
சமத்துவமாகப் பார்த்தது. பொதுவுடமை சார்ந்த அவரது நோக்கு மேல் மட்டத்தவரின்
காழ்ப்புணர்வை பெற்றுத்தந்தது மட்டுமன்றி
அவரது பாடல்ளைப் பாடசாலை பாடப்புத்தகங்களில் கூட இடம்பெற வைக்க எதிர்ப்பைக்
காட்டிக் கொள்ளக் காரணமாயிற்று.
இன்றும் அவரது பாடல்களைப் பாடப்பபுத்தகங்களில் இருந்து எடுத்து அப்புறப்படுத்தும்
நிலையே தமிழகத்தில் காணப்படுகின்றது
என்ற அவர் பாரதி வாழ்ந்தகாலத்தைவிட அதன் பின்னரும் அவன் மறைக்கப்பட்டிருக்கின்றான்,
மறுக்கப்பட்டிருக்கின்றான்
என்றுரைத்த அவர் பாரதியின் பாடல்கள் பாடநூல்களில் இடம்பெற வேண்டும். அது மட்டுமன்றி
அவை மொழி
பெயர்கக்ப்படவேண்டும். இங்கு உள்ள இளைஞர்களால் அது செயற்படுத்தப்படமுடியும் என்று
உரைத்ததோடு ஏ.வி.எம் மெய்யப்ப
செட்டியார்தான் முதன் முதலில் பாரதியின் பாடல்களை சினிமாவில் புகுத்தி அவனுக்குப்
பெருமை தேடித்தந்தவர் என்று குறிப்பிட
அவர் மதிவாசனின் முயற்சியைப் பாராட்டியதோடு அவருக்கு நாம் ஆதரவுக்கரங்களை நீட்டுவோம்
எனவும் குறிப்பிட்டுப்
பாராட்டினார்.
தொடர்ந்து ‘காற்று’ பாரதியின் பாடலுக்கு நாட்டிய நாடகத்தைத் நெறியாள்கை செய்தார்
கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள். தர்சினி
வரப்பிரகாசம், சுபாங்கி கலாநாதன் நடிக்க கவிஞராக செந்தில்நாதன் மேடையில்
தோன்றினார்.
தொடர்ந்து கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள் பாரதியின் பாடல்கள் பற்றி உரையாற்றினார்.
அவர் பாரதியின் பாடல்கள் இன்றும்
இசையமைத்துப் பாடத்தக்க கலைப்படைப்புக்கள் மட்டுமல்ல அவரின் கவிதைவரிகள்
நாடகங்களாகவும் உள்ளன. எம்மைப் படைத்த
ஆண்டவனிடமே வேண்டுகோள் விடுக்கும் நாடகங்களை நான் பார்த்திருக்;கின்றேன். அந்த
வகையில் அமைந்துள்ளன பாரதியின்
பாடல்கள் பல. ஆவற்றை நாடகங்களாக நடிக்கமுடியும். பாரதி உலகியல் வாழ்க்கையில்
தோற்றாலும் கூட அவன் வெற்றி
பெற்றுள்ளான். இன்றும் அவன் பேசப்படுவது அவனது வெற்றியே. இசைக்கலைஞர்கள் அவனின்
பாடல்களைப் பாடவேண்டும்
என்னும் ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
இசை ஆசிரியை லசந்தி ராஜ்குமாரின் மாணவியரின் பாரதியின் பாடல்கள் கேட்போருக்கு
பாரதியின் பாடல் வரிகளை நினைவு
கூர்ந்தன. செல்வி துளசி மகேஸ்வரன் அவர்கள் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை
ஆங்கிலத்தில் உரைத்தார். தெடர்ந்து உதயன்
பத்திரிகை ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்கள் உரையாற்றினார். அவர்
பாரதியின் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும்.
பாரதி எழுத்துத்துறையில் செய்தவற்றை நாம் மறந்து;விடலாகாது. ஒரு பத்திரிகையாளராக
அவர் இருந்து பணியாற்றிக்கொண்ட
கவிதைகள், கட்டுரைகள் என எழுதிவடித்துள்ளார் என்றால் எவ்வளவு திறமை அவரிடம்
இருக்கவேண்டும். என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கோதை அமுதனால் நெறியாள்கை செய்யப்பட்ட கவிதா நிகழ்வு இடம்பெற்றது. இதில்
தலைமைக் கவிஞராக செல்வி
ளெமியா விஜயகுமாரக்குருக்களும், பங்குபற்றுநர்களாக சுஜீபன் கலாநாதன், ஆரண்னா
ரவீந்திரன் தாட்சாயினி மாணிக்கவாசகர்,
அபிஷா கலாதரன் ஆகியோர் கலந்துகொண்டுனர்.
தொடர்ந்து கவிநாயகர் வி.கந்தவனம் அவர்களின் தலைமையில் பாரதியின் கவிதைகளில் விஞ்சி
நிற்பது மொழிப்பற்றா அல்லது
தேசியப்பற்றா என்னும் பட்டிமன்றம் இடம்பெற்றது. இதில் கலைவேந்தன் கணபதி ரவீந்திரன்,
ராஜ்மீரா ராசையா, ராஜமுகந்தன்,
கோதை அமுதன் ஆகியோர் கலந்துகொண்டு வாதிட்டனர்.
இறுதி நிகழ்வாக பாரதி கலைக்கோயில் மாணவர்களின் இசை நிழ்வு இடம்பெற்றது. அதற்கு
முன்னராக மதிவாசன் பாரதியின்
நினைவாக நாம்மேற்கொண்ட இந்த நிகழ்வு எமது இளஞ்சமுதாயத்திற்கு பாரதியப்றிய
கருத்துக்களை எடுத்துச்செல்வதே முக்கிய
நோக்கம் என்ற அவர். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பாரதி நினைவு நிலைத்திட நிகழ்வு
இளம் சிறார்களை உள்வாங்குவதற்கான
நிகழ்ச்சித்திட்டத்தோடு வரவேண்டும் என்னும் ஆதங்கத்தை எடுத்துரைத்ததோடு பாரதிமீது
எனக்கள்ள அழவிடமுடியாத
பற்றுள்ளவன் நான். ஏதிர்காலத்தில் நிகழ்வுகளில் ஆங்கிலத்திலும் சில நிகழ்வுகளை
அதாவது, பேச்சுக்கள், நாடகங்கள்
கலந்துரையடல்கள். பட்டி மன்றங்கள் போன்றவற்றை மேற்கொள்ளவேண்டும் என்றுரைத்தார்.
பாரதி பிறந்த தமிழகத்தில் பாரதியைக் கண்டுகொள்ள அல்லது காட்டிக் கொள்ள பின்நிற்கும்
நிலையில் அவனை முன்னுக்குக்
கொண்டு வந்தவர்கள் ஈழத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி விபுலாநந்தர்
பாரதியின் மீதி அளவிலா மதிப்பு
வைத்திருந்தார். பேராசிரியர் கைலாசபதி அவர்கள் தனது முனைவர் கற்கை நெறிக்காக
மேற்கொண்ட
The Heroic Poet என்பது
பாரதியாரைப் பற்றிய ஆய்வாக அமைந்தது. இது பாரதியின் பணிகளை வெளியுலகிற்குக் கொண்டு
வந்த செயல்கள் என்பதனைக்
குறிப்பிடலாம். புதுயுகம் படைக்க முற்பட்ட பாரதி மகாகவி மட்டுமல்ல அவன் ஒரு
சமுதாயச் சிற்பி சமதர்ம நெறியில் சமுதாயம்
மலர்ந்திட விடியலுக்காய் உழைத்தவன். அவன் வாழ்ந்த காலத்து பெண் அடிமை, ஆங்கிலமோகம்,
ஆங்கிலேயரின் ஆட்சியில்
கட்டுண்டு கிடந்த பாரதத்தை விடுவிக்க போராட உழைத்தவன் பாரதி. பாரதி தொடத பகுதியும்
இல்லை, தொடாத இடமும் இல்லை
என்று கூறும் அளவிற்கு அவன் உலகளாவிய ரீதியல் பார்வையைச் செலுத்தியவன். அவனது
தீவிரப்போக்கு அவனுக்கு நோபல்
பரிசையோ அன்று உலக அங்கீகாரத்தையோ பெற்றுத் தராமல் விட்டிருக்கலாம். ஆனால் மக்கள்
மத்தியில் அவன்
முதன்மையானவனே. பாரதியின் கனவு செயற்பட உழைத்தல் தமிழரின் தார்மீகக் கடன்.
யாமறிந்த மொழிகளிலோ தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
என்று பாடிய பாரதியின் கொள்ளுப்பேத்திக்குத் தமிழ் மொழி தெரியாதாம். தமிழைக்
கற்கவைக்கப் பாரதியின் குடும்பத்திற்கே
சாபக்கேடா? ஆமெரிக்காவில் வாழும் பாரதியின் கொள்ளப்பேத்தி தமிழைப் பேசிப்பழக
முடியாமல் விட்டதென்றால் புலம்பெயர்
தமிழரின் எதிர்காலம் என்ன ஆவது. நூம் பாரதிக்குச் செய்யும் நன்றிக் கடன், தமிழ்
மொழிமீது பற்றுவைத்து அதனை அழியவிடாது
வளர்த்தலே யாம்.
கனடா – தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கவிதா நிகழ்வு!
- கலாரசிகன் -
கடந்த 23.12.2007 ஞாயிறன்று மேற்படி எழுத்தாளர் இணையத்தினரால் பாரதியின் நினைவாக
“விதியே விதியே தமிழ்ச் சாதியை
என்ன செய்ய நினைத்தாய்” என்னும் வரிகளைக் கொண்ட கவிதா நிகழ்வு இடம்பெற்றது. இந்த
நிகழ்வு கவிநாயகர் வி. கந்தவனம்
அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. கவிதா நிகழ்வில் கவிஞர்கள் தீவகம் வே.
இராஜலிங்கம், வயிரமுத்து திவ்வியராஜன், திருமதி
இராஜ்மீரா இராசையா ஆகியோர் கலந்துகொண்டனர். கவிஞர் மாவிலிமைந்தன் (சண்முகராஜா),
கவிஞர் அன்புடன் புகாரி
ஆகியோர் பாராட்டுக் கவிதைகளைத் தந்து சிறப்பித்தனர்.
கவிதா நிகழ்வினை இணையத்தின் தலைவர் ஆர்.என். லோகேந்திரலிங்கம் அறிமுக உரையை
நிகழ்த்தித் தொடக்கி வைத்ததோடு
அனைவரையும் வரவேறறும் உரை நிகழ்த்தினார். கனடா எழுத்தாளர் இணையம் நீண்டநாட்களாக
தமிழ் மக்கள் மத்தியில் கவிதை
நிகழ்வுகளை நடத்தவேண்டும் கவிதா நிகழ்வுகள் நடப்பது மிகக் குறைவாகவே உள்ளது. கவிதை
வளத்தை எம் இளைய
சந்ததியினருக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்பதே எமது நோக்கம். இரண்டு
மாதங்களுக்கு ஒருமுறை இதனை நடத்தத்
தீர்மானித்துள்ளோம். இதில் வந்து கலந்து தரப்படுகின்ற கவிதைகளின் இன்னபத்தைப்
பகிர்ந்துகொள்வதே இதன் நோக்கமாக
அமையவேண்டும். ஒரு வரைக் குறைசொல்வதாகவோ அன்றி புகழ்ந்து கூறுவதாகவே அமைய
வேண்டியதில்லை மன அமைதியும்
மன மகிழ்ச்சியும் ஏற்படக்கூடிய கவிதைகளைக் கேட்டு இன்புற்றுச் செல்லவேண்டும் என்பதே
இதன் நோக்கம் என்றுரைத்து
கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களைத் தலைமை ஏற்று நடத்தும்படி அழைத்தார்.
கவிநாயகர் தனது தலைமையுரையில் கவிதை எப்படி அமைகின்றது. கவிதை என்றால் என்ன
என்பனபோன்ற சிறு
விளக்கமளித்ததோடு தலைமைக் கவிதையில் பங்குபற்றிய கவிஞர்களைப் கவிதையிலே
பாராட்டினார். அவர் ஒவ்வொரு
கவிஞர்களையும் கவிதையால் அறிமுகம் செய்து கவிதை தருவதற்கு அழைத்தமை சிறப்பாக
அமைந்திருந்தது. தொடர்ந்து கவிதைகளை
இராஜ்மீரா இராசையா, திவ்யராஜன், தீவகம் இராஜலிங்கம் ஆகியோர் தந்த கவிதைகள்
பார்வையாளர்களால் நன்கு இரசித்துப்
பாராட்டப்பட்ன.
இறுதியாக இணையத்;தின் செயலாளர் த.சிவபாலு நன்றிப்பாமாலை தந்ததோடு கவியரங்கம்
நிறைவுற்றது. இறுதியில் முன்னை
பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தாயகக்கருத்துக்களோடு மட்டுமன்றி கனடிய மணில்
வாழுகின்ற தமிழர்களையும் கவிதைகள்
உள்ளடக்கியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்னும் கருத்தினை வெளிப்படுத்தியது
போன்று அதிபர் பொ.கனகசபாபதி
அவர்கள் கவிதைகள் புதிய கருத்துக்களையும் மாற்றுக் கருத்துகளையும் கொண்டனவாக
அமையவேண்டும். ஒரே பொருளில்
அமையாது பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும் உள்ளடக்குதல் சிறப்பாக அமையும் என்றார்.
தலைவர் லோகேந்திரலிங்கம்
கவியரங்கம் வந்தோம், தமிழ் இன்பம் சுவைத்தோம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
கவிதைகள் பற்றிய விமர்சனங்களோ
கருத்துக்களோ தெரிவிப்பதற்கு இந்த இடம் பொருத்தமற்றது. கவிதைகள் பொருள்நயம், சுவை
நயம் என்பனவற்றைப் பலவாறாகக்
கேட்கும்போது வித்தியாசமாக அமையும். அது மனதிற்கு அமைதியையும் மகிழ்வையும் தரும்
எனக் கருத்துத் தெரிவித்து
உரையாற்றினார். கவிஞர் புகாரி, திவ்யராஜன், தீவகம் இராஜலிங்கம் என்போரும்
கருத்துக்களைத் தெரிவித்தனர். தொடர்ந்து 16. 02.
2008 பி.ப. 2,30க்கு கவிதா நிகழ்வு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த
நிகழ்வில் “புலம் பெயர் குடும்ப வாழ்வில்” எனும்
தலைப்பில் கவிதைகளைச் சமரப்பிக்கவுள்ளனர். கவிதா நிகழ்வில் இடம்பெறும் கவிதைகள்
ஆவணப்படுத்தப்ட வேண்டும் என்னும்
கருத்தும் முன்வைக்கப்பட்டது.
thangarsivapal@yahoo.ca |