இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
18.11.2007: ஜாலான்புசார் சமுகமன்றம் (சிங்கப்பூர்)!
கணையாழி விழா 20071

 - பார்வை: பாண்டித்துரை (சிங்கப்பூர்) -

கணையாழி விழா மறக்கமுடியாத ஒரு விழாவாக என்னுள் பதிந்துவிட்டடது . நான் கடந்த ஆணடுதான் சிங்கப்பூர் வந்தது வந்த உடன் நான் சந்தித்த ஒரு பெரிய இலக்கிய விழா மேலும் கவிதை எழுதிய குறுகிய காலத்திற்குள் நான் எழுத்தாளர் பாலா அவர்களின் முன்னிலையில் அன்று நடந்த கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்ததுடன் அன்றைய நிகழ்வினை இணையத்தில் பதிவு செய்தது கணையாழி விழா மறக்கமுடியாத ஒரு விழாவாக என்னுள் பதிந்துவிட்டடது . நான் கடந்த ஆணடுதான் சிங்கப்பூர் வந்தது வந்த உடன் நான் சந்தித்த ஒரு பெரிய இலக்கிய விழா மேலும் கவிதை எழுதிய குறுகிய காலத்திற்குள் நான் எழுத்தாளர் பாலா அவர்களின் முன்னிலையில் அன்று நடந்த கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்ததுடன் அன்றைய நிகழ்வினை இணையத்தில் பதிவு செய்தது . என்னுடைய முதல் கட்டுரை முயற்சியும் கணையாழி 2006 தான் . அந்தநாள் நினைவுகளை மீள்பார்வை செய்தபடி கணையாழ ி 2007 ல் கலந்து கொண்டேன்

நிகழ்வின் மத்தியில் புதுமைத்தேனி அன்பழகன் அவர்கள் சொன்ன வார்த்தை - தனிஒரு மனிதனால் - பிச்சினிக்காடு இளங்கோவால் - 7
ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கவிமாலை அமைப்பு விருட்சமாக எழுந்து காடாகியுள்ளது. இன்று காடுகள் அழிவுற்று வரும் வேளையில் வளர்கும் பணியினை தனது பயணத்தின் ஒரு பகுதியாய் சுமந்து செல்லும் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் 5- ம் ஆண்டு கணையாழி -2007 விழாவினை வழிநடத்திச்செல்ல திருமதி மீரா மன்சூர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட விழா இனிதே துவங்கியது.

மன்மதன் வந்தாடி எனும் பாடலுக்கு குமாரி ஹெமினி -ன் பரதநாட்டியம் பதட்டமுடனே அரங்கேறியது . பாடலின் முற்பகுதியல் ஒலி நாட இயங்க தடுமாறியதே ! குமாரி ஹெமினி பாடல் ஒலிக்க அபிநயம் பிடித்திருந்த காட்சியும் அவரது நாட்டியத்தை கண்டு இயங்கிய ஒலிநாடாவும் இடையில் சில நிமிடம் தன் மூச்சினை நிறுத்திவிட இதை எல்லாவற்றையும் கவனித்தவண்ணம் ஒலி பொறுப்பினை மேற்பார்வை செய்த நண்பர் கவி ரமேஷ் மருண்ட முகமாய் பதைபதைத்ததும் இன்னும் என்னுள்ளே .

பின் பண்முக ஆளுமையை நோக்கி பயணப்படும் நண்பரும் கவிஞருமான கோவிந்தராஜீ பலகுரல்களில் பவனிவந்து கணையாழி - 2007 நிகழ்வினை வாழ்த்தினார் . இவரது பேச்சின் உச்சகட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் மு .க
.ஸ்டாலினாக பேசியது .

கணையாழி விழாவில்...

எங்கள் கவிமாலை என்ற தலைப்பில் பா .திருமுருகன் தான் கண்ட கவிமாலையை கவிதையாக வாசித்தார் . அதிலிருந்து சில வரிகள்

" கவிமாலை திருவிழா
த ிமிறாய் நடக்க வேண்டும் "
" இங்கு குயில்களை காட்டிலும்
காகங்களே கவனிக்கப்படுகின்றன "
" ஏதோ ஓர் தூரத்தில்
பாதங்கள் மட்டும்
பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன "


கணையாழி விழாவிற்கே உரித்தான அம்சம் கவியரங்கம் . முதல் உதவி செய்வோம் எனும் பொது தலைப்பின் கீழ் கவிஞர் ந .வீ
.விசயபாரதி அவர்களின் தலைமையின் கீழ் நடந்தேறியது . அதிலிருந்து சில வரிகள்

கண்ணீர் துடைப்போம் எனும் தலைப்பில்:- கவிஞர் கோ. கண்ணன்.

" இயலாமை
தோல்வி

இவைகளில் ஏதோ ஒன்று "

" இயற்கையின் படைப்பில் எதுவுமே
இங்கு சீராக இல்லை
அதானால்தான் மனிதனும்
மாறுபட்ட கோணத்தில் வாழ்ந்து.. ."


காயங்களுக்கு மருந்து பூசுவோம் எனும் தலைப்பில் கவிஞர் சுகுணா பாஸ்கர்

" உற்றுக் கவனி
உன்னை சூழந்திருப்பது மங்கிய வெளிச்சம்
இருள் என்று பிதற்றிக்கொண்டிருக்காதே "

" அடிபட்ட கணங்களை
ஆழமாக துடைத்தெடுத்து
அவளுக்கென்று காத்திருக்கும்
பல ஆச்சர்யங்களைபரிச்சயமாக்க மருந்தாக்குவோம் ".


பூத்தூவி வரவேற்போம் எனும் தலைப்பில் கவிஞர் கலையரசி செந்தில் குமார் .

" நலம் கருதாமல்
நாளும் நட்பு செய்யும்
நயவஞ்ச கமில்லாத
நல்ல உள்ளங்களை
நட்பு பூத்தூவி வரவேற்போம் "


புன்னகையை புரியவைப்போம் எனும் தலைப்பில் கவிஞர் பாலு மணிமாறன்

" இதயக் கதவை
திறக்கும் சாவி புன்னகை "

" சறுகுகள் கூட
மரங்கள் பூமிக்கு அனுப்பும்
புன்னகை முத்தங்கள் "

" புன்னகை என்பது
உலக மொழி "


இடையிடையே கவிஞர்களின் கவிதையின் செறிவினை தனக்கேஉரிய அந்த துள்ளலில் சொல்லிச்சென்ற கவிஞர் ந. வீ. விசயபாரதியின் சில வரிகள்

" அடிமை இந்தியாவை
சுதந்திர இந்தியாவாக மீட்டெடுக்க
சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய
விடுதலை வேள்விக்கு
களமும் பலமும் பணமும் தந்து
இந்த சிங்கப்பூர் மண் செய்த
முதல் உதவிதான்
இந்த பூமியின் புகழுக்கெல்லாம்
உச்சம் என்று
உரத்துச் சொல்வேன் "


விழாவின் தொடக்க உரையை புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜகாங்கீர் அவர்கள் நிகழ்த்தினார் . இவரது பேச்சு அனைவரையும்
கவரும் ஒரு அம்சம் . பல்வேறு கவிதைஇகவிஞர் என்று உதாரணப்படுத்தி சிங்கப்பூர் கவிதை உலகத்தரத்துடன் போட்டி போடுகின்றன அச்சூழலை ஏற்படுத்தியும் இருக்கிறது என்று செல்வதாக இருந்தது .

சென்ற ஆண்டைபோலவே இந்த ஆண்டும் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் இந்த ஆண்டின் கணையாழி விழா நாயகன் யார் என்று
சுவாரஸ்யமாக எடுத்துச்சென்று மர்மத்திரையை விலக்கினார் . ஆம் அப்பொழுதான் அங்கு குழுமியிருக்கும் அனைவருக்குமே தெரியும்
விழா நாயகன் யார் என்று ?

யார் அந்த சாதனையாளர்?

கணையாழி விழாவுக்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள்...

ஆங்கிலம் ஜப்பான் சீனம் மலாய் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமைபெற்று பல்வேறு நிகழ்வுகளில் மொழிபெயர்பாளராக
இருந்தவர் சீனச்சிறுகதைகள் ஆங்கில கவிதைகள் ஆங்கில நூல்கள் என்று மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிட்டது அண ்ணாவின்
சிறுகதையை நாடகவடிவில் இயற்றி அரங்கேற்றம் செய்தது பத்திரிக்கை ஆசிரியர் ஐ .N.யு தேசிய பணியில் பணிபுரிந்து பின் காவல் துறையில் பணியாற்றியவர் தூரதேசங்களில் சுகமான பயணங்கள் எனும் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும் இயற்றி வெளியிட்டது பல்வேறு தமிழ் மற்றும் சழுக அமைப்புகளில் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை ஏற்ற இந்திய கலைஞர் சங்கத்தின் கலை காவலர் பட்டம் வென்று 78 வயதினை எட்டியவர் இப்பொழுது யார் என்று புரிந்ததா ?

இந்த ஆண்டின் கணையாழி 2007 எழுத்தாளர் பி. பி. காந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டது

எழுத்தளார் பி. பி. காந்தம் அவர்களின் பெயரினை அறிவிக்கும் பொழுது அவரின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எவ்வித அதிர்வுகளுக்கும் இடம் கொடுக்காதவராய் அமர்ந்திருந்தார். ஆனால் விழிகளுக்குள் எழுந்த நீர் திவளைகள் மட்டும் இன்னும் அவர் சொல்லிச்செல்லாததை சொல்லிச்செல்ல துடிப்பதாகப்பட்டது.

முன்னதாக விழாவிற்கு பல்வேறுவகைகளில் இந்நிகழ்விற்கு உதவிசெய்த புரவலர்களை நினைவு கூர்ந்தனர் .

கணையாழி விழா நிகழ்வில்... கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவன்..

சிறப்புவிருந்தினராக சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ந .வரபிரசாத் கலந்து கொண்டு சிறப்பித்தார் .
கவிஞர் மாதங்கி எழுத்தாளர்கள் சிங்கப்பூர் சித்தார்த்தன் ஜே .எம் .சாலி இளங்கண்ணன் ஜெயந்தி சங்கர் லெட்சுமி ஒலி 96.8- ன்
செய்திபிரிவின் பொன் -மகாலிங்கம் முனைவர் ரெத்தின வெங்கடேசன் தினமலர் நிருபர் புருசோத்தமன் சமூக ஆர்வளர் பிரவின்குமார் மேடைப்பேச்சளார்கள் சிவக்குமார் ஸ்டாலின் கவிமாலை கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . நிகழ்வினை சிறப்பாக ஒளிப்பதிவாளர் பேச்சாளர் . எம் .சே .பிரசாத் ஒளிப்பதிவுசெய்தார் .

pandiidurai@gmail.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner